இதய ரத்த நாளத்தில் வீக்கம்… ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து வெளியான அறிக்கை
இளம் நடிகர்களுக்கு போட்டியாக தொடர்ந்து படங்களை வெளியிட்டு வருகிறார் ரஜினி. சினிமா துறையில் 50 வருடங்களை கடந்தும் நடிகர் ரஜினி தனது மாஸ் குறையாமல் இளம் நடிகர்களுடன் போட்டிப் போட்டு தனது சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று நடித்து வருகிறார்.
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருக்கிறார். ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருந்த நிலையில் கவலைப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்று ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் விளக்கமளித்திருந்தார். மருத்துவமனை தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது ரஜினியின் உடல்நிலைக் குறித்து மருத்துமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ரஜினியின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் அவர் இன்னும் இரண்டு நாட்களில் டிஸ்ஜார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை ஆசுவாசப்படுத்தியுள்ளது.
ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 வது திரைப்படமாக உருவாகி உள்ள திரைப்படம் வேட்டையன். இந்தப்படத்தை ஜெய்பீம் திரைப்பட புகழ் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்தபடத்தில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முக்கியரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. வேட்டையன் திரைப்படம், வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Also read… Cinema Rewind: சிவாஜி இல்லனா ’தேவர் மகன்’ இல்லை – நடிகர் கமல் சொன்ன விஷயம்
இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் உடன் கூட்டணி வைத்த ரஜினி தனது 171-வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அன்பறிவு ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
இளம் நடிகர்களுக்கு போட்டியாக தொடர்ந்து படங்களை வெளியிட்டு வருகிறார் ரஜினி. சினிமா துறையில் 50 வருடங்களை கடந்தும் நடிகர் ரஜினி தனது மாஸ் குறையாமல் இளம் நடிகர்களுடன் போட்டிப் போட்டு தனது சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று நடித்து வருகிறார். 70 வயதை கடந்தும் தனது நடிப்பிற்கு ஓய்வு கொடுக்காமல் நடித்து வருகிறார் ரஜினி.
Also read… அடுத்த திருமணத்திற்கு தயாரான வனிதா விஜயகுமார்? பிக்பாஸ் பிரபலம்தான் மாப்பிள்ளையா
இந்நிலையில் வேட்டையன் படத்தில் ரஜினி நடித்து முடித்த நிலையில் திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு யூ/ஏ (U/A) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வேட்டையன் படத்தை வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரை நாளை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து இடைவெளி இல்லாமல் லோகேஷின் கூலி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் ரஜினிகாந்த். இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது. இதில் மழையில் நனைந்தபடி ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும், அதனால் அவருக்கு உடல் நலக்குறைப்பாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரஜினியின் உடல் நிலை குறித்து மருத்துமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 30-ம் தேதி (நேற்று) ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் வீக்கம் இருந்தது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சையின்றி செய்யப்படும் ஸ்டன்ட் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதை மூத்த இதய சிகிச்சைத் துறை நிபுணர் டாக்டர் சாய் சதீஷ் செய்திருந்தார். எனவே ரஜினியின் ரசிகர்களுக்கும் அவருடைய நலம் விரும்பிகளுக்கும் நாங்கள் சொல்ல விரும்புவது, அவருக்கு இன்று காலை நல்லபடியாக ஸ்டன்ட் பொருத்தப்பட்டுவிட்டது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். அவர் இரு நாட்களில் வீடு திரும்புவார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.