AR Murugadoss: கோலிவுட் முதல் பாலிவுட் வரை… கலக்கும் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் பிறந்த நாள் இன்று

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என்று வரிசையில் இருக்கும் பெரும்பாளான நடிகர்கள் முருகதாஸின் இயக்கத்தில் நடித்துவிட்டனர். தமிழ் சினிமா மட்டும்மின்றி பாலிவுட் சினிமாவில் முன்னணி வகிக்கும் நடிகர்களையும் இயக்கி வருகிறார் முருகதாஸ்.

AR Murugadoss: கோலிவுட் முதல் பாலிவுட் வரை... கலக்கும் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் பிறந்த நாள் இன்று

இயக்குநர் ஏஆர் முருகதாஸ்

Published: 

25 Sep 2024 14:33 PM

கோலிவுட் சினிமா முதல் பாலிவுட் சினிமா வரை கலக்கி வரும் பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இன்று தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். தமிழ் சினிமா உலகின் ஸ்டார் இயக்குநர் என இவரை சொல்லலாம். சமூகப்பொறுப்புகளை கமர்சியல் கதையில் நுழைத்து வணிக ரீதியாக படங்களை வெற்றி பெற வைப்பதில் இவர் கில்லாடி. அவர்தான் இயக்குநர் ஏ.ஆர்.முருககாஸ். இயக்குநர் பிரவீன் காந்த்தியிடம் 1997-ல் வெளியான ரட்சகன் திரைப்படத்தில் உதவி இயக்குநராக முதலில் தனது சினிமா பணியை தொடங்கினார். அதே ஆண்டில் வெளியான ‘கலுசுகுந்தம் ரா’ என்னும் தெலுங்குப் படத்தில் துணை எழுத்தாளராகவும் பணியாற்றினார் முருகதாஸ். அதனை தொடர்ந்து எஸ்.ஜெ.சூர்யாவிடம் குஷி திரைப்படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றினார். இவருடைய திறமையாலும் உழைப்பாலும் கவரப்பட்ட எஸ்.ஜே.சூர்யா இவரை அஜித்துக்கு அறிமுகப்படுத்தினார்.

பிறகு எஸ்.ஜே.சூர்யா பரிந்துரை செய்ததன் பேரில் அஜித்தை வைத்து தீனா படத்தை இயக்கினார். 2001ல் அஜித் நடிப்பில் ’தீனா’ திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமானார் முருகதாஸ். தனது படங்கள் அனைத்திலும் சமூக பிரச்சனைகளை பேசி, மாஸ் ஹிட் டைரக்டர் என பெயர் வாங்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். முதல் படமே செம ஹிட் ஆனது. அஜித்திற்கும் மிகப் பெரிய பிரேக் கொடுத்ததுடன், ரசிகர்கள் கொண்டாடும் தல என்ற பட்டத்தையும் தீனா படம் தான் பெற்றுக் கொடுத்தது. படத்தின் ஒன்லைன். ஆக்‌ஷனோடு சுவாராஸ்யமான காதல் காட்சிகள், உணர்ச்சிமிகுந்த செண்டிமெண்ட் காட்சிகள் என அறிமுக படத்திலேயே ஆடியன்ஸை கவனிக்க வைத்தார் முருகதாஸ்.

தீனா வெளியாவதற்கு முன்பு வரை அல்டிமேட் ஸ்டாராக இருந்த அஜித் ‘தல’ ஆனது இந்தப் படத்தின் மூலமாகத்தான். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட முருகதாஸ், அஜித்தையும் ஆக்‌ஷன் நாயகன் இமேஜுக்கு உயர்த்தினார். பரபரப்பான ஆக்‌ஷன். உணர்வுபூர்வமான சென்டிமென்ட், அழகான காதல், அதிரடியான பாடல்கள் என அஜித்தின் திரைவாழ்வில் மிக முக்கியமான வெற்றிப் படமாக இது அமைந்தது.

தீனா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ’ரமணா’. ஒரு மாஸ் நடிகரின் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணத்தையும் உருவாக்கியது ‘ரமணா’. அதோடு மிகப்பெரிய க்ளாஸிக் சினிமாவாக விஜயகாந்த்துக்கு அமைந்தது ரமணா. ரமணா படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யாவின் கஜினி படம் மூலம் ஹாட்ரிக் ஹிட் கொடுத்தார் முருகதாஸ். தமிழில் சக்கைப்போடு போட்ட கஜினி படத்தை பின்னர் இந்தியில் ஆமிர்கானை வைத்து ரீமேக் செய்து அங்கும் வெற்றிவாகை சூடினார்.

கஜினியின் பெரும் வெற்றியால் தமிழ், தெலுங்கு தாண்டி கஜினி ஹிந்தியிலும் அமீர்கானை வைத்து இயக்கி வெற்றி பெற்றார் முருகதாஸ். சஞ்சய் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவிற்கு அவரது திரை வாழ்வின் திருப்புமுனை சினிமாவாக அமைந்தது முருகதாஸின் ‘கஜினி’. பிறகு தமிழில் ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, ஸ்பைடர், சர்கார், தர்பார் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தார். தனது படங்கள் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு சமூக பிரச்சனையை பற்றி பேசுவது முருகதாஸின் ஸ்டைல்.

Also read… நான் தனுஷின் ‘இட்லி கடை’ படத்தில் நடிக்கிறேனா? அசேக் செல்வன் விளக்கம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என்று வரிசையில் இருக்கும் பெரும்பாளான நடிகர்கள் முருகதாஸின் இயக்கத்தில் நடித்துவிட்டனர். தமிழ் சினிமா மட்டும்மின்றி பாலிவுட் சினிமாவில் முன்னணி வகிக்கும் நடிகர்களையும் இயக்கி வருகிறார் முருகதாஸ்.

தற்போது தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார் முருகதாஸ். இந்தப் படத்திற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு முருகதாஸ் பிறந்த நாள் அன்றே வெளியானது. ஆனால் படம் இன்னும் முடிவடையாமல் இழுத்துக்கொண்டே இருக்கின்றது. மேலும் இறுதியாக பாலிவுட்டில் சோனாக்‌ஷி சின்ஹாவை வைத்து ‘அகிரா’ என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மௌன குரு’ படத்தின் ரீமேக். தற்போது சல்மான்கான் நடிக்கும் படத்தையும் இயக்க ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்பந்தமானார். ‘சிக்கந்தர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

கோலிவுட்டில் கடந்த சில வருடங்களாகவே ஹிட் படம் கொடுக்க முடியாமல் திணறிவருகிறார் முருகதாஸ். இவரின் கம்பேக்கை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த வருடம் நிச்சயமாக எதிர்பார்ப்பு பூர்த்தியடைய வாழ்த்துகள்…

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?