AR Rahman Divorce: வலியுடன் இந்த முடிவை எடுத்துள்ளேன் – ஏ.ஆர். ரஹ்மானை பிரிவதாக அறிவித்த மனைவி சாய்ரா பானு..
ஏ.ஆர் ரஹ்மானை பிரியும் இந்த முடிவு வலி மற்றும் வேதனையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக சாய்ரா பானு தெரிவித்துள்ளார். திருமதி சாய்ரா பானு இந்த சவாலான நேரத்தில் பொதுமக்களிடமிருந்து தனியுரிமை மற்றும் புரிதலைக் கோரியுள்ளார், அவர் தனது வாழ்க்கையில் இந்த கடினமான அத்தியாயத்தை கடக்க அனைவரும் ஒத்துழைக்குமாறு தெரிவித்துள்ளார்
ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு தனது கணவரை பிரிவதாக அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் தனது கணவர் ஏ.ஆர். ரஹ்மானை பிரிவதாக தெரிவித்துள்ளார். சுமார் 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக இந்தியா டுடேக்கு அளித்துள்ள அறிக்கையில், “திருமணமாகி பல வருடங்கள் கழித்து, திருமதி சாய்ரா தனது கணவர் திரு. ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவு அவர்களின் உறவில் குறிப்பிடத்தக்க உணர்ச்சி அழுத்தத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், அந்தத் தம்பதியினருக்கு இடையே பதட்டங்களும் சிரமங்களும் ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளது, இந்த நேரத்தில் எந்த தரப்பினரும் இதற்கு தீர்வு காண முடியாது என்று நினைக்கிறார்கள்.
பிரிவதற்கான காரணம என்ன?
வலி மற்றும் வேதனையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக சாய்ரா பானு தெரிவித்துள்ளார். திருமதி சாய்ரா பானு இந்த சவாலான நேரத்தில் பொதுமக்களிடமிருந்து தனியுரிமை மற்றும் புரிதலைக் கோரியுள்ளார், அவர் தனது வாழ்க்கையில் இந்த கடினமான அத்தியாயத்தை கடக்க அனைவரும் ஒத்துழைக்குமாறு தெரிவித்துள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சபரிமலைக்கு மாலை.. தர்காவில் வழிபாடு.. ராம்சரண் சம்பவம்!
ரஹ்மான் 1995 இல் சைரா பானுவை மணந்தார். இருவரும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்து கொண்டனர். சிமி கரேவால் உடனான நிகழ்ச்சியில், “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், மணப்பெண்ணைத் தேடிச் செல்ல எனக்கு நேரமில்லை. நான் ரங்கீலா போன்ற படத்திற்கு இசையமைதற்காக மும்பையில் இருந்தேன். அதனால் நான் அதில் மிகவும் பிஸியாக இருந்தேன். ஆனால், எனக்கு திருமணம் செய்துகொள்ள இதுவே சரியான நேரம் என்று எனக்குத் தெரியும். எனக்கு 29 வயது, நான் என் அம்மாவிடம் சொன்னேன்.
எனக்கு அதிக சிரமம் தராத ஒரு ‘எளிமையான’ பெண்ணைக் தேர்ந்தெடுக்கும்படி எனது தாயிடம் கேட்டுக் கொண்டேன், அப்போது தான் என் வேலைக்கும் இடையூறு இருக்காது. அப்படி பார்த்த பெண் தான் சாய்ரா பானு” என தெரிவித்தார்.
முடிவுக்கு வந்த 29 ஆண்டுகால திருமண பந்தம்:
1995 ஆம் ஆண்டு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் சாய்ரா பானுக்கு திருமணம் ஆனது. இந்த தம்பதியினருக்கு கதிஜா, ரஹீமா மற்றும் அமீன் ரஹ்மான் என மூன்று குழந்தைகள் உள்ளது. கதிஜாவிற்கு அன்மையில் திருமணம் நடந்தது. கதிஜா மற்றும் அமீன் ரஹ்மான் இருவருமே இசை துறையை தேர்வு செய்துள்ளனர். ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்றுள்ளனர்.
மேலும் படிக்க: த்ரிஷ்யம் படம் மாதிரி பரபர கதை.. ஓடிடிக்கு வந்த ’கிஷ்கிந்தா காண்டம்’ படம்!
இவர்கள் இருவருக்கும் இடையிலான அன்பை கண்டு பலரும் வியப்புடன் பார்த்ததுண்டு. பலரும் இந்த தம்பதியினரை ஒரு ரோல் மாடலாக எடுத்ததும் உண்டு. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அதாவது 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வந்தால் இவர்களுக்கு திருமணமாகி 3 தசாதங்கள் அதாவது 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில், ஏ.ஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு கணவரை பிரிவதாக அறிவித்துள்ளது பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.