ஏ ஆர் ரகுமான் எனக்கு அப்பா மாதிரி… மோகினி டே ஓபன் டாக்!

ஏ ஆர் ரகுமான் தனது மனைவியை பிரிவதாக அறிவித்த அடுத்த நாளே அவரது இசைக்குழுவில் இருந்த மோகினி டே  கணவனை பிரிவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து ஏ ஆர் ரகுமானையும் மோகினி டேவையும் இணைத்து பல வதந்திகள் பரவத் தொடங்கியது. இந்த நிலையில் மோகினி டே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஏ ஆர் ரகுமான் எனக்கு அப்பா மாதிரி... மோகினி டே ஓபன் டாக்!

ஏ ஆர் ரகுமான். மோகினி டே

Published: 

26 Nov 2024 11:22 AM

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தனது மனைவி சாயிரா பானுவை விட்டு பிரிவதாக அறிவித்த பிறகு அவரது இசைக்குழுவில் இருந்த மோகினி டே தனது கணவரிடம் இருந்து பிரிவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து சமூக வலைதளத்தில் ஏ ஆர் ரகுமான் மற்றும் மோகினி டே இருவரையும் இணைத்து பல வதந்திகள் வைரலாக தொடங்கின. இந்த நிலையில் மோகினி டே ஏ ஆர் ரகுமான் தனக்கு தந்தை மாதிரி என்றும் அவர் மீது எனக்கு அதிகப்படியான மரியாதையும் உள்ளது அவரையும் என்னையும் இணைத்து சமூக வலைதளங்களில் பரவும் கருத்தும் வதந்திகளும் வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஏ ஆர் ரகுமானின் மகளுக்கும் எனக்கு கிட்டதட்ட ஒரே வயது தான் இருக்கும் இப்படி வதந்திகளை பரப்பி காயப்படுத்தாதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 19-ம் தேதி தங்களது  29  ஆண்டு கால திருமண உறவைப் விட்டுப் பிரிவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் அவரது மனைவி சாயிரா பானு ஆகியோர் அறிவித்தனர். இது ரசிகரக்ளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த செய்தி வெளியான பிறகு சமூக வலைதளங்களிலும் சில செய்தி ஊடகங்களிலும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் குறித்தும் அவரது மனைவி சாயிரா பானு குறித்தும் பல்வேறு வதந்திகள் உலா வரத் தொடங்கியது. இதற்கு ஏ ஆர் ரகுமானின் மகன் அமீன் மகள் என குடும்ப உறுப்பினர்கள் தங்களது வலி நிறைந்த எதிர்ப்பை சமூக வலைதளம் மூலம் பதிவிட்டு வந்தனர்.

இதுகுறித்து ஏ ஆர் ரகுமானின் மகன் அமீன் தனது சமூகவலைதள பக்கத்தில் தயவு செய்து வதந்தியை பரப்பாதீர்கள் என்று வேதனையான பதிவை வெளியிட்டார். அதில் என் அப்பா ஒரு லெஜண்ட் என்றும் இசைத்துறையில் அவர் செய்த சாதனைக்காக மட்டும் அல்லாமல் பல ஆண்டுகளாக அவர் பெற்ற மதிப்பு, மரியாதை, அன்பு ஆகியவற்றிற்காகவும் அவர் லெஜண்ட்டாக இருக்கிறார் என்றும் அமீன் அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.

இந்திய சினிமாவில் இசைப்புயல் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் ஏ.ஆர்.ரகுமான். ஆஸ்கர் நாயகன் என்று ரசிகரக்ளால் அழைக்கப்படும் ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்து கோலிவுட், பாலிவுட் என பிசியாக இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கையை விட்டு விலகுவதாக இவர் அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Also read… ’அமரன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்

இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் தரப்பில் இருந்து அவதூறு பரப்பும் சமூக வலைதளம் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு எதிராகா நோட்டீஸ் ஒன்று வெளியிடப்பட்டது. அதில், சில சமூக வலைதள பக்கங்களிலும் சில யூடியூப் வீடியோக்களிலும் ஏ ஆர் ரகுமான் மற்றும் சாயிரா பானு பிரிவை குறித்து பல வதந்திகளை பரப்பி வருகின்றனர். சிலர் அவர்களின் தனிபட்ட வாழ்க்கை குறித்து பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இது தேவையற்ற செயல் ஆகும்.

சமூக வலைதளத்தில் யூடியூப் பக்கங்களிலும் சிலர் கற்பனையில் வெளியிட்ட பதிவுகளையும் வீடியோக்களையும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அப்படி நீக்காவிட்டால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Also read… எம்.ஜி.ஆர் குறித்து அன்றே கணித்தார் ஜானகி… நூற்றாண்டு விழாவில் ரஜினி சொன்ன சுவாரஸ்ய தகவல்!

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சாயிரா பானு ஒரு ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ஏ ஆர் ரகுமானை தவறாக பேசாதீர்கள். இந்த உலகத்திலேயே சிறந்த மனிதர் அவர். என் வாழ்க்கையில் அவரை நான் நம்புகிறேன். நான் அவ்வளவு அதிகமாக அவரை நேசிக்கிறேன். ரகுமான் குறித்து அவதூறு பரப்பாதீர்கள் என்றும் பிரித்ததற்கான காரணம் என்ன என்பது குறித்தும் சாயிரா பேசியிருந்தார்.

இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் தனது மனைவியை பிரிவதாக அறிவித்த அடுத்த நாளே அவரது இசைக்குழுவில் இருந்த மோகினி டே  கணவனை பிரிவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து ஏ ஆர் ரகுமானையும் மோகினி டேவையும் இணைத்து பல வதந்திகள் பரவத் தொடங்கியது. இந்த நிலையில் மோகினி டே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ஏ ஆர் ரகுமான் அற்புதமான மனிதர். எனக்கு பலர் ரோல் மாடல்களாக உள்ளனர். அதில் ஏ ஆர் ரகுமானும் ஒருவர். அவர் எனக்கு தந்தை மாதிரி. அவரது மகளுக்கும் எனக்கும் கிட்டதட்ட ஒரே வயது இருக்கும் என்றே நினைக்கிறேன். அவரையும் என்னையும் இணைத்து சமூக வலைதளங்களில் பரவும் கருத்தும் வதந்திகளும் வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!
இந்தியாவின் பிரபலமான தேயிலை தோட்டங்கள்!
காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்
உருளைக்கிழங்கு இப்படி இருந்தால் சாப்பிட வேண்டாம்..!