Vijay Sethupathi: பிக்பாஸால் வந்த வினை.. நடிகர் விஜய் சேதுபதி மீது போலீசில் புகார்!
BiggBoss Season 8: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் உள்ள விஜய் சேதுபதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய 8வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாரம்பரியமான ஆத்தங்குடி டைல்ஸ் பற்றி தவறான கருத்து கூறப்பட்டதாக விஜய் தொலைக்காட்சி மீதும் நடிகர் விஜய் சேதுபதி மீதும் காரைக்குடி காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் உள்ள விஜய் சேதுபதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய 8வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான முன்னணி பலத்துறை சார்ந்த நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்துள்ள நிலையில் அவர்கள் தொடர்பான விளம்பரங்களும் நிகழ்ச்சியின் வாயிலாக ஒளிபரப்பப்பட்டும், பிரபலங்கள் மூலம் சொல்லப்பட்டும் வருகிறது. இப்படியான நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள் போலீசில் விஜய்சேதுபதி மீதும், விஜய் தொலைக்காட்சி மீதும் புகாரளித்தனர்.
Also Read: Actress Ritika Singh : குத்துச்சண்டை டூ சினிமா.. நடிகை ரித்திகாசிங் சினிமா பயணம்
நடந்தது என்ன?
அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகர் தீபக் அதன் ஸ்பான்சர் நிறுவனம் ஒன்றை குறிப்பிடும்போது உண்மைக்கு மாறாக அந்த டைல்ஸ் தான் அசல் ஆத்தங்குடி டைல்ஸ் என உண்மைக்கு மாறான கருத்தை தெரிவித்தார். அதனை ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சி மீதும், விஜய் சேதுபதி மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபனிடம் புகார் மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர் அலெக்ஸ், இந்தியாவில் இன்றும் குடிசைத் தொழிலாக ஆத்தங்குடி டைல்ஸ் தயாரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் எங்கள் தொழில் மீது தவறான கருத்து பரப்பப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார இழப்பு ஏற்படுவதோடு எங்களுடைய தனிச்சிறப்பையும் இழிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தீபக் கூறியதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடையாது. எனவே தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளோம்” என கூறினார்.
Also Read: Ilaiyaraaja: சுயமரியாதையை விட்டுக் கொடுக்கவே மாட்டேன்.. கோயில் விவகாரத்தில் இளையராஜா விளக்கம்
புகழ்பெற்ற ஆத்தங்குடி டைல்ஸ்
காரைக்குடி என்றாலே நாம் அனைவருக்கும் செட்டிநாடு அரண்மனைகள் தான் ஞாபகம் வரும். அந்த அரண்மனைகளின் அழகுக்கு ஆத்தங்குடி டைல்ஸ் தான் ஒரு வகையில் காரணம். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கேரளா கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகும் ஆத்தங்குடி டைல்ஸ் பாரம்பரிய சிறப்பு பெற்றது. ஆத்தங்குடி கிராமத்துக்குள் நாம் நுழைந்தால் இரு பக்கமும் டைல்ஸ் கடைகளாக தான் காட்சியளிக்கும். இயந்திரங்கள் எதுவும் இன்றி முழுக்க முழுக்க மனிதர்களின் உழைப்பால் தயாராவது தான் இந்த டைல்ஸ் இன் தனி சிறப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.