ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டம்… ஓபனாக பேசிய நடிகை நோரா ஃபதேஹி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை நோரா பதேகிக்கு அந்நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவானது. அந்நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் பிசியானார். அவருக்கு தெலுங்கி, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் கவர்ச்சி நடனம் ஆட வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து பாகுபலி படத்தில் உருக்கியோ எனும் பாடலில் நடனமாடி ரசிகர்களை ஈர்த்த நோரா ஃபதேஹி, அதன் பின் தன் நடனத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பாடல்களில் நடனமாடி ரசிகர்களைப் பெற்றார்.

ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டம்... ஓபனாக பேசிய நடிகை நோரா ஃபதேஹி!

நடிகை நோரா ஃபதேஹி!

Published: 

01 Aug 2024 14:16 PM

பிரபல பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி ஒரு வேளை சாப்பாட்டிற்கே தான் கஷ்டப்பட்டதாகவும் ஒரு முட்டை மற்றும் ஒரு ப்ரட் ஸ்லைஸ் மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்ததாகவும் தனது கண்ணீர் கதையை பேசியுள்ளார். கனடாவில் 1992-ம் ஆண்டு பிறந்தவர் நோரா ஃபதேஹி. இங்கேயே பள்ளிப்படிப்பை முடித்த இவர், யார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு இந்திய சினிமா மற்றும் நடிப்பின் மீது இருந்த ஆர்வ்த்தால் இந்தியா வந்து பிரபல நடிகையாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார். நடிகை நோரா ஃபதேஹி. நடிகை நோரா ஃபதேஹி. தன்னை ஒரு நடிகை என்ற வட்டத்திற்குள் மட்டும் வைத்துக்கொள்ளாமல், டான்சர், தயாரிப்பாளர், நடுவர் என பலதரப்பட்ட தளங்களில் இயங்குவது இவரது வழக்கம்.

நடிகை நோரா ஃபதேஹி கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த ரோர் : டைகர்ஸ் ஆஃப் சுந்தர்பேன்ஸ் என்கிற பாலிவுட் படம் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் நடித்து முடித்த கையோடு அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. 2015 ஆம் ஆண்டு ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான இந்தி பிக் பாஸ் சீசன் 9ல் நோரா ஃபதேஹியும் போட்டியாளராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனதை வென்று 84 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தார்.

Also read… Taapsee Pannu : கோலிவுட் எண்ட்ரி.. பாலிவுட் கலக்கல்.. நடிகை டாப்ஸி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை நோரா பதேகிக்கு அந்நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவானது. அந்நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் பிசியானார். அவருக்கு தெலுங்கி, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் கவர்ச்சி நடனம் ஆட வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து பாகுபலி படத்தில் உருக்கியோ எனும் பாடலில் நடனமாடி ரசிகர்களை ஈர்த்த நோரா ஃபதேஹி, அதன் பின் தன் நடனத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பாடல்களில் நடனமாடி ரசிகர்களைப் பெற்றார். இந்த படத்திற்கு பிறகு இவரை ரசிகர்கள் செல்லமாக மனோகரி என்றே அழைத்து வருகின்றனர். அந்தப்படம் மட்டுமில்லாமல், தமிழில், கார்த்தி நடித்த தோழா படத்தில் டோர் நம்பர் பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர் நோரா ஃபதேஹி தான். தற்போது பாலிவுட்டில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ள நோரா ஃபதேஹி.

இந்த நிலையில் நடிகை நோரா அளித்துள்ள பேட்டி ஒன்றில், இந்தியாவிற்கு வந்த போது,​என்னிடம் ரூ. 5,000 ரூபாய் மட்டுமே இருந்தது, நான் என் நண்பர்கள் ஒன்பது பேருடன் மூன்று படுக்கை அறை கொண்ட வீட்டில் குடியிருந்தோம். என் அறையில் வேறு இரண்டு பெண்கள் பகிர்ந்து கொண்டனர். அந்த வாழ்க்கை நரகமான வாழ்க்கையாக இருந்தது. அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் ரொம்ப பயமா இருக்கும் என்றும் அவர் தனது சோகக் கதையை தெரிவித்துள்ளார்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!