5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Behind The Video: பாக்யராஜ் படத்தின் இசை..சூர்யவம்சம் பாடலாக மாறிய கதை!

Suriyavamsam: 1997 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல் எவர்க்ரீன் படமாகவும் அமைந்தது சூர்யவம்சம். இந்த படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் ராதிகா, தேவயானி, பிரியா ராமன், மணிவண்ணன், ஆர்.சுந்தரராஜன் என பலரும் நடித்திருந்தார்கள்.

Behind The Video: பாக்யராஜ் படத்தின் இசை..சூர்யவம்சம் பாடலாக மாறிய கதை!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 15 Jul 2024 12:03 PM

1997 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல் எவர்க்ரீன் படமாகவும் அமைந்தது சூர்யவம்சம். இந்த படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் ராதிகா, தேவயானி, பிரியா ராமன், மணிவண்ணன், ஆர்.சுந்தரராஜன் என பலரும் நடித்திருந்தார்கள். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்த இந்த படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் இன்றைக்கும் கொண்டாடப்படுகிறது. அப்படியாக படத்தில் இடம்பெற்ற பாடல்களில் ஒன்று “காதலா காதலா”. இந்த பாடலை ஹரிஹரன், ஸ்வர்ணலதா இருவரும் இணைந்து பாடியிருப்பார்கள். அரண்மனை பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த பாடலின் ஹம்மிங் மிகவும் பிரபலம். படத்திலும் சில இடங்களில் இது பயன்படுத்தப்பட்டிருக்கும்.

Also Read: Sivakarthikeyan: சிவகார்த்திகேயனின் மகனின் பெயர் என்ன தெரியுமா? வெளியானது பெயர் சூட்டு விழா வீடியோ!

இன்ஸ்பிரேஷன் எது தெரியுமா?

உண்மையில் காதலா காதலா பாட்டின் ட்யூன் ஒரு பாக்யராஜ் படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா?. இதனை காப்பி என சொல்வதை காட்டிலும் இன்ஸ்பிரேஷன் என சொல்லலாம். எந்த ஒரு சிந்தனையும் ஏதோ ஒரு முந்தைய வார்த்தையில் இருந்து தான் உருவாகும். இசையும் அப்படித்தான். அதன் வளர்ச்சிக்கு எல்லை இல்லாதபோது ஒன்றை பின்பற்றி மற்றொன்று வந்துக்கொண்டே தான் இருக்கும்.

அப்படி சூர்யவம்சம் படத்தில் இடம் பெற்ற அந்த பாடலின் ட்யூன் 1982 ஆம் ஆண்டு கே.பாக்யராஜின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் வெளியாகி அவரே நடித்த “டார்லிங் டார்லிங் டார்லிங்” படத்தில் இடம் பெற்றிருந்தது. அந்த படத்தின் பின்னணி இசையில் தான் இந்த ட்யூன் கம்போஸிங் செய்யப்பட்டிருக்கும். குறிப்பாக பாக்யராஜின் சோக காட்சிகளில் இந்த இசையை கவனித்திருக்கலாம்.

டார்லிங் டார்லிங் டார்லிங் படத்துக்கு இசையமைத்தது இரட்டை இசையமைப்பாளரான சங்கர்-கணேஷ் ஆவார்கள். இந்த படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், சுமன், கல்லாப்பெட்டி சிங்காரம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 100 நாட்கள் ஓடிய இப்படம் இன்றும் அக்காலத்து ரசிகர்களால் டிவியில் ஒளிபரப்பாகும்போது விரும்பி பார்க்கப்படுகிறது.

Also Read: Aadi Month: ஆடி மாதம் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமார்

இசை வசந்தம் என தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட எஸ்.ஏ.ராஜ்குமார் 90களின் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவை இசையால் கட்டியாண்டவர். ராபர்ட் ராஜசேகர் இயக்கிய சின்னப்பூவே மெல்லப்பேசு படம் மூலம் எண்ட்ரீ கொடுத்த அவர், புது வசந்தம், பூவே உனக்காக, அவள் வருவாளா, சூர்யவம்சம், வானத்தைப்போல, பிரியமான தோழி என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்தார். மேலும் தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தார்.

Latest News