5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பிக்பாஸ் 8 போட்டியாளர்கள் இவர்கள்தானா? இணையத்தில் வெளியான தகவல்!

BIGG BOSS 8 Tamil : தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று இந்த "பிக் பாஸ்"நிகழ்ச்சி. தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் போன்ற இந்த நிகழ்ச்சியானது தமிழ் மட்டுமில்லாமல் பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தமிழில் சுமார் 7 சீசன்களை கடந்து தற்போது பிக்பாஸ் 8 வருகின்ற அக்டோபர் 6 முதல் ஒளிபரப்பாக உள்ளது

பிக்பாஸ் 8 போட்டியாளர்கள் இவர்கள்தானா?  இணையத்தில் வெளியான தகவல்!
பிக் பாஸ் 8 தமிழ்
Follow Us
barath-murugantv9-com
Barath Murugan | Published: 03 Oct 2024 08:59 AM

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களிடையே மிக வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி “பிக் பாஸ்”. இந்த நிகழ்ச்சியானது கடந்த 2017ல் இருந்து தனியார் தொலைக்காட்சியான விஜய் டி.வில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியானது நெதர்லாந்தில் வெளியான “பிக் பிரதர்ஸ்” என்ற நிகழ்ச்சியைத் தழுவி தமிழில் “பிக் பாஸ்” என ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி எனப் பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிகளைப் பல முன்னணி பிரபலங்கள் தொகுத்து வழங்கினார்கள்.

அதைப் போல் தமிழில் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இவர் சுமார் 7 சீசனாக இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது வெளியாகவுள்ள “பிக் பாஸ் 8” சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுக்கவுள்ளதாக உறுதியான தகவல் கடந்த மாதம் வெளியாகியது.

இதையும் படிங்க :எதிர்பாராததை எதிர்பாருங்கள்… பிக் பாஸில் வரப்போகும் புது விஷயம்!

இந்த பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்கான வேலைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கிய நிலையில் கடந்த மாதம் நடிகர் கமல்ஹாசன்,  பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப்போவது இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, “அன்பான பார்வையாளர்களே, 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பிக்பாஸ் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன்னதாகவே நான் ஏற்றுக்கொண்ட சில திரைப்பட பணிகள் காரணமாக, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நான் தற்பொழுது பிக் பாஸில் இருந்து விலகுகிறேன்.

ஆகவே எதிர்வரும் பிக் பாஸ் சீசனை நான் தொகுத்து வழங்க முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியின் மூலமாக என் மீது அன்பு மழை பொழிந்த எனது ரசிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க :“என்கிட்ட இருந்து அவன யாராலயும் காப்பாத்த முடியாது” – வெளியானது ரஜினியின் வேட்டையன் டிரெய்லர்..

 

 

இந்நிகழ்ச்சியிலிருந்து நடிகர் கமல்ஹாசன் விலகிய நிலையில் தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார்.  இந்த நிகழ்ச்சியானது வரும் அக்டோபர் 6ல் வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சிகளில் யார் யார் பங்கேற்க உள்ளனர் என இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதையும் படிங்க :“நான் சினிமாவிற்கு வர காரணமே சிம்பு தான்”.. பிரபல நடிகர் சொன்ன கதை!

பிக்பாஸ் 8 பங்கேற்பாளர்கள் லிஸ்ட் இதோ..!

1.வி.ஜெ விஷால்
2.ஐஸ்வர்யா(நடிகை )
3. VTV கணேஷ் (நடிகர் மற்றும் தயாரிப்பாளர்)
4.பால் டப்பா அனிஷ் (பாடகர்)
5.சுனிதா (டான்சர்)
6.சௌந்தர்யா நஞ்சுண்டன் (நடிகை)
7.கே.ஆர்.கோகுல் (டான்சர்)
8.அன்ஸிதா அஃபர் (சீரியல் நடிகை)
9.தர்ஷிகா
10.அருண் பிரசாந்த் (சீரியல் நடிகர்)

இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியின் 10 போட்டியாளர்களின் லிஸ்ட் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த 10 போட்டியாளர்கள் கண்டிப்பாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாவார்கள் என பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இதையும் படிங்க :அதே ஜோடி.. தளபதி 69 நாயகி இவங்கதானா? வெளியான நியூ அப்டேட்..!

Latest News