BiggBoss Tamil: போட்டியாளர்களிடையே ஏற்படும் பிரிவினை.. பிக்பாஸில் வெடிக்கும் பிரச்னை! - Tamil News | Bigg Boss Season 8 Tamil Show Crew Released Promo Video For 24rd Day October 30th | TV9 Tamil

BiggBoss Tamil: போட்டியாளர்களிடையே ஏற்படும் பிரிவினை.. பிக்பாஸில் வெடிக்கும் பிரச்னை!

எந்த சீசனிலும் இல்லாதா புதுவிதமாக உருவாக்கியது இந்த பிக் பாஸ் சீசன் 8. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த நிகழ்ச்சியில் முதல் வார ஏவிக்ஷ்சனில் ரவீந்தர், இரண்டாவது வாரம் அர்னவ் மற்றும் தற்போது மூன்றாவது வாரம் எவிக்ஷனில் தர்ஷா குப்தா குறைந்த வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் தொடங்கி மூன்று நாட்களான நிலையில் இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவர் போட்டியில் முத்துக்குமாரன் மற்றும் வி.ஜெ. ஆனந்தி இருவரும் போட்டியிட்டனர் பிறகு ஆனந்தி வெற்றிபெற்று இந்த வாரத் தலைவராக இருக்கிறார்.

BiggBoss Tamil: போட்டியாளர்களிடையே ஏற்படும் பிரிவினை.. பிக்பாஸில் வெடிக்கும் பிரச்னை!

பிக் பாஸ் சீசன் 8

Published: 

30 Oct 2024 19:13 PM

பிக்பாஸ் தமிழ்: பிக்பாஸ் வீட்டில் 24-வது நாளான இன்று வெளியான ப்ரோமோ வீடியோவை பிக்பாஸ் குழு வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் நாமினேஷனில் குறைந்த வாக்குகள் அடிப்படையில் தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்த வார நாமினேஷனில் ஆண்கள் அணியிலிருந்து ரஞ்சித், ஜெஃப்ர, தீபக், அருண் மற்றும் சத்யாவும் மற்றும் பெண்கள் அணியிலிருந்து சுனிதா, ஜாக்குலின், பவித்ரா மற்றும் அன்சிதா என மொத்தம் 9 போட்டியாளர்கள் இந்த வாரநாமினேஷன் லிஸ்டில் உள்ளனர். தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கடந்த 2017ல் இருந்து தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ்.

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சியானது தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், இந்தி , தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற பல மொழிகளிலும் ஒளிபரப்பாகிவருகிறது. தமிழில் பிக் பாஸ் சீசன் ஆரம்பம் முதல் சீசன் 7 வரை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் சில பல காரணங்களால் 8-வது சீசனை தொகுக்க முடியாது என முன்னதாகவே அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது வெளியாகிவரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

இதையும் படிங்க :நடிகர் விஜய்க்கு டப் கொடுத்து அவரை விட அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா?

அக்டோபர் 6ம் தேதி முதல் ஆரம்பமான இந்த நிகழ்ச்சி தற்போது 23 நாட்களைக் கடந்து தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தமிழ் மக்களிடையே உற்சாகமாகப் பார்த்து வரும் நிகழ்ச்சிகளில் முக்கியமான ரியாலிட்டி ஷோவாக இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சி. தற்போது வெளியாகிவரும் இந்த நிகழ்ச்சியானது நல்ல வரவேற்பைப் பெற்று டிஆர்பி ரேட்டிங்கை அள்ளிக்கொடுக்கும் நிகழ்ச்சிகளில் முதலிடத்தில் இருக்கிறது.

தமிழ் பிக்பாஸ் எந்த அளவிற்குப் பிரபலமானதோ அதே அளவிற்கு இந்தி பிக் பாஸ் அந்த அளவிற்குப் பிரபலமானது. இந்த இந்தி பிக் பாஸை பிரபல முன்னணி நடிகரான சல்மான்கான் தொகுத்துவருகிறார். தற்போது வெளியாகிவரும் பிக்பாஸ் சீசன் 18 இந்தியில் தமிழ் பிரபல நடிகையும் , குக் வித் கோமாளியில் புகழ் பெற்ற ஸ்ருதிக்கா கலந்து கொண்டுள்ளார். இந்தி பிக்பாஸாக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சம் தமிழில் பேசி இந்தி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இந்தி பிக்பாஸில் முதன்மை போட்டியாளராக விளங்கும் ஸ்ருதிகா டைட்டில் வின்னர் ஆக வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க :பர பர திகில்.. பதறவைக்கும் த்ரில்லர் மூவி.. மிஸ் பண்ணாம பாருங்க!

 

தமிழில் ஆட்டம் சூடு பிடிக்கும் பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்களாக ஆர்.ஜே.ஆனந்தி, அன்ஷிதா,வி.ஜே. விஷால், அர்னவ், ரஞ்சித், பவித்ரா ஜனனி, ரவீந்தர் சந்திரசேகர்,அருண் பிரசாத், தீபக்,தர்ஷா குப்தா, சுனிதா, தர்ஷிகா, ஜாக்குலின், சத்யா , ஜெப்ரி, முத்துக்குமார், செளந்தர்யா, சாச்சனா என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ரவிந்தர், அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா என மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 15 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். மொத்தம் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த நிகழ்ச்சியில் முதல் வார ஏவிக்ஷ்சனில் ரவீந்தர், இரண்டாவது வாரம் அர்னவ் மற்றும் தற்போது மூன்றாவது வாரம் எவிக்ஷனில் தர்ஷா குப்தா குறைந்த வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் தொடங்கி மூன்று நாட்களான நிலையில் இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவர் போட்டியில் முத்துக்குமாரன் மற்றும் வி.ஜே.ஆனந்தி இருவரும் போட்டியிட்டனர் பிறகு ஆனந்தி வெற்றிபெற்று இந்த வாரத் தலைவராக இருக்கிறார். இந்த வார ஸ்வாப் பெண்கள் அணியிலிருந்து சௌந்தர்யா ஆண்கள் அணிக்கும் மற்றும் ஆண்கள் அணியிலிருந்து வி.ஜெ. விஷால் பெண்கள் அணிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். விறுவிறுப்பாகச் சூடுபிடிக்கும் ஆட்டத்துடன் நான்காவது வாரம் தொடங்கிய நிலையில் 24-வது நாளான இன்று ப்ரோமோக்களை  பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ளது.

 

 

இதையும் படிங்க :பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டேனா? நடிகை நயன்தாரா விளக்கம்

தற்போது வெளியான முதல் வீடியோவில் வீக்லி டாஸ்கான ஒவ்வொரு போட்டியாளர்களும் மற்றொரு போட்டியாளர்களைப் போல நடிக்கவேண்டும் என்ற டாஸ்க் நேற்று ஆரம்பித்த நிலையில் இரண்டாவது நாளான இன்று மற்றொரு போட்டியாளர்களின் வேடத்தில் இருக்கும் நபர்கள் அந்த போட்டியாளர்கள் இந்த குணத்தை மாற்றிக்கொண்டால் நன்றாக இருக்கும் என்ற விதத்தில் நடித்துக்காட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இன்று வெளியாகி உள்ள இந்த எபிசோடில் பயங்கரமான வாக்குவாதம் ஆகுமா இல்லை சண்டை ஆகுமா என இனி வரப்போகும் நாட்களில் தான் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது ப்ரோமோவில் ஜெஃப்ரி போல ரஞ்சித் செய்து காட்டும் காட்சிகளும்,  3வது ப்ரோமோவில் ஜாக்குலின் வாக்குவாதம் செய்யும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

 

ப்ரோக்கோலியில் இவ்வளவு நன்மைகளா?
சர்க்கரை பதில் வெல்லம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?
சாப்பாட்டில் நெய் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
உறவுகளில் நம்பிக்கையை வளர்க்க ஈஸியான டிப்ஸ்!