Bigg Boss 8 Contestants List: பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற 18 போட்டியாளர்கள் இவர்கள் தானா? வைரலாகும் தகவல் - Tamil News | Bigg Boss tamil 8 Contestants List Start Date Hosts update viral on social media | TV9 Tamil

Bigg Boss 8 Contestants List: பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற 18 போட்டியாளர்கள் இவர்கள் தானா? வைரலாகும் தகவல்

Published: 

06 Oct 2024 16:23 PM

Bigg Boss Tamil Season 8 Contestants List: விஜய் டிவியின் முக்கியமான மற்றும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சியாக காணப்படும் நிலையில், இன்றைய தினம் பிரம்மாண்ட துவக்கவிழாவுடன் துவங்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொருவராக நிகழ்ச்சியின் ஹோஸ்ட் விஜய் சேதுபதி சிறப்பான அறிமுகத்துடன் பிக்பாஸ் வீட்டில் அனுப்பி வைக்கவுள்ளார்.

Bigg Boss 8 Contestants List: பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற 18 போட்டியாளர்கள் இவர்கள் தானா? வைரலாகும் தகவல்

பிக்பாஸ்

Follow Us On

விஜய் டிவியில் இன்று ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்களின் விவரங்கள் குறித்து தற்போது இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது. விஜய் டிவியின் பிக்பாஸ்  நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் இதுவரை தொகுத்து வழங்கி வந்துள்ளனர். தமிழில் முன்னதாக வெளியான 7 சீசன்களை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நேற்று முடிந்துள்ள நிலையில் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள நிலையில் போட்டியாளர்களின் விவரங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த நிகழ்ச்சி விஜய் டிவியின் முக்கியமான மற்றும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சியாக காணப்படும் நிலையில், இன்றைய தினம் பிரம்மாண்ட துவக்கவிழாவுடன் துவங்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொருவராக நிகழ்ச்சியின் ஹோஸ்ட் விஜய் சேதுபதி சிறப்பான அறிமுகத்துடன் பிக்பாஸ் வீட்டில் அனுப்பி வைக்கவுள்ளார். இந்த சீசனில் பிக்பாஸ் வீடு மேலும் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிக்பாஸ் புது வீடு ரொம்ப அழகாக இருக்கு என்று பிரமோவில் பேசியிருந்தார் விஜய் சேதுபதி.

நடிகர் தீபக்: தமிழ் சின்னத்திரையில் நடிகராக வலம் வருபவர் தீபக். பல்வேறு சீரியல்களில் முன்னணி நடிகராக நடித்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சஞ்சனா: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அவரது 50-வது படமாக வெளியான ‘மகாராஜா’ படத்தில் நடித்தவர் நடிகை சஞ்சனா. இவர் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகளாக நடித்து பிரபலமானார். பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ள இளம் போட்டியாளராக சஞ்சனா உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

சுனிதா: விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனவர் சுனிதா. பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வந்த சுனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

ஆர்.ஜே.ஆனந்தி: ரேடியோவில் ஆர்.ஜே.வாக பணியாற்றி பின்னர் கோமாளி படத்தில்  நடிகர் ஜெயம் ரவியின் தங்கையாகவும் நடிகர் யோகிபாபுவுக்கு மனைவியாக நடித்து பிரபலம் ஆனவர் தான் ஆர்.ஜே.ஆனந்தி. இவரும் பிக்பாஸில் களமிறங்கி இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ரஞ்சித்: பொன்விலங்கு திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரஞ்சித். சிந்து நதி பூ, மைனர் மாப்பிள்ளை, அவதார புருஷன், பாரதி கண்ணம்மா, மறுமலர்ச்சி, நினைத்தேன் வந்தாய், நட்புக்காக, தேசிய கீதம், புதுமைப்பித்தன், சேரன் சோழன் பாண்டியன், நினைவிருக்கும் வரை, சபாஷ், பாண்டவர் பூமி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். பின்னர் சில வருடங்களாக சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கினார். இவரும் பிக்பாஸில் களமிறங்கி இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

தர்ஷிகா: விஜய் டிவி சீரியல்களில் நடித்தது மட்டுமின்றி அண்மையில் நடந்து முடிந்த ஜோடி ஆர் யூ ரெடி நடன நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துகொண்டு அசத்திய தர்ஷிகா பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.

வி.ஜே. விஷால்: விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாப்பாத்திரமான எழில் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் வி.ஜே. விஷால். தற்போது சீரியலை விட்டு வெளியேறிய நிலையில் வி,ஜே.விஷால் பிக்பாஸில் களமிறங்கி இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

அன்ஷிதா: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செல்லம்மா சீரியலில் முன்னணி நடிகையாக நடித்து பிரபலம் ஆனவர் அன்ஷிதா. இவர் குக் வித் கோமாளி 5ல் கோமாளியாக பங்கேற்று ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.

அருண் பிரசாத்: விஜய் டிவியில் சக்கைப்போடு போட்ட பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியாக நடித்து பேமஸ் ஆனவர் அருண் பிரசாத். இவரும் இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார்.

பவித்ரா ஜனனி: விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியலில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் பவித்ரா ஜனனி. இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று உள்ளார்.

சத்யா: சீரியல் நடிகர் சத்யா பிக்பாஸ் சீசன் 8ல் கலந்துகொண்டுள்ளார். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அண்ணா சீரியலில் வில்லனாக நடித்து பேமஸ் ஆனார். இவரது மனைவி ரம்யா பிக்பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவீந்தர் சந்திரசேகர்: தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். கடந்த ஆண்டு வரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சகராக இருந்த ரவீந்தர் தற்போது பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.

அர்னவ்: செல்லம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் அர்னவ். அந்த சீரியல் முடிந்த கையோடு பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார் சீரியல் நடிகர் அர்னவ்.

முத்துக்குமார்: யூடியூப் சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றியதோடு, இன்ஸ்டாவில் பிரபலாமனவராக இருக்கும் முத்துக்குமார் பிக்பாஸ் 8-ல் எண்ட்ரி கொடுத்துள்ளார். இவர் தமிழ்பேச்சு எங்கள் மூச்சு என்கிற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டவர் ஆவார்.

தர்ஷா குப்தா: நடிகை தர்ஷா குப்தாவும் பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கி உள்ளார். இவர் விஜய் டிவி சீரியல்களில் நடித்ததோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

செளந்தர்யா: ஆதித்ய வர்மா, தர்பார் போன்ற படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்திருந்தவர் செளந்தர்யா. இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கெடுத்து உள்ளார்.

ஜாக்குலின்: விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி பேமஸ் ஆனவர் ஜாக்குலின். இவரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று உள்ளார்.

கானா ஜெப்ரி: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருடந்தோறும் ஒரு பாடகரை அனுப்புவார்கள். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஜெப்ரி என்பவரை அனுப்பி இருக்கிறார்கள். இவர் கானா பாடல் பாடுவதில் கில்லாடி.

பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள காலிஃபிளவர்..!
உடலுக்கு ஊட்டச்சத்துகளை தாராளமாக தரும் புளி..
தூங்குவதற்கு முன் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள்
நாம் அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வதற்கான அறிகுறிகள்..!
Exit mobile version