Bigg Boss Tamil Season 8: சூடுபிடிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி… ஓபன் நாமினேஷனால் அதிரடியான ஆட்டம்!
இந்தியில் கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மற்ற மொழிகளில் ஸ்டார் சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது. ஓடிடி உரிமையை ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமாவில் ஒளிபரப்பப்படுகின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 71-வது நாளிற்கான இரண்டாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்தில் பிக் பிரதர் என்று ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சி இந்தியில் பிக்பாஸ் என்று முதலில் ஒளிபரப்ப தொடங்கினர். இந்தியில் கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மற்ற மொழிகளில் ஸ்டார் சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது. ஓடிடி உரிமையை ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமாவில் ஒளிபரப்பப்படுகின்றது. தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தப் பிறகு தற்போது இந்த 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த அக்டோபர் மாதம் 6-ம் தேதி இந்த 8-வது சீசன் தொடங்கியது. அதன்படி கடந்த 7 சீசன்களில் இல்லாத ஒன்று இந்த 8-வது சீசனில் நடைப்பெற்றது. பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டது. அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடினர். இந்த சீசனில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் ரவீந்தர் சந்திரசேகர், அருண் பிரசாத், அன்ஷிதா, தீபக், தர்ஷிகா, தர்ஷா குப்தா, ஜாக்குலின், முத்துக்குமார், ஜெப்ரி, அர்னவ், ரஞ்சித், பவித்ரா ஜனனி, ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா,சுனிதா, செளந்தர்யா, வி.ஜே. விஷால் உட்பட 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.
Also read… அரசு சொத்தை விலை பேசினேனா? விக்னேஷ் சிவன் விளக்கம்!
அதனை தொடர்ந்து 6 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர் கடந்த நவம்பர் 3-ம் தேதி அன்று. அதில் ரியா தியாகராஜன், சிவகுமார், ரானவ், மஞ்சரி, ரயான், வர்ஷினி ஆகியவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளனர். இதனால் போட்டியின் நிலவரம் சற்று சூடு பிடித்தது.
முன்னதாக 50 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடிய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் கடந்த 7-வது வாரம் முதல் ஒன்றாக்கி இனி ஆண்கள் பெண்கள் அணிகளுக்கு இடையே போட்டி இல்லை தனி நபர்களுக்கு இடையே போட்டி என்று அறிவிக்கப்பட்டது. ரவீந்தர் முதல் வாரம் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
Also read… ஆண்டாள் கோவில் கருவறைக்குள் சென்ற இளையராஜாவை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
அதனைத் தொடர்ந்து 2-வது வாரம்அர்னவ்3-வது வாரம் தர்ஷா வெளியேற்றப்பட்டார். கடந்த 4-வது வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எவிக்ஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 5-வது வாரம் சுனிதா, 6-வது வாரம் ரியா, 7-வது வாரம் வர்ஷினி, 8-வது வாரம் சிவக்குமார், 9-வது வாரம் டபுள் எவிக்ஷனில் ஆனந்தி, சாச்சனா அதனை தொடர்ந்து கடந்த சனிகிழமை சத்யா ஞாயிரு தர்ஷிகாவும் எவிக்டாகியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது 11-வது வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி அடியெடுத்து வைத்துள்ள நிலையில் இன்று ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது. இதில் போட்டியாளர்கள் நேரடியாக நாமினேட் செய்வது அந்த வீடியோவில் தெரியவந்துள்ளது.