5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் டாஸ்கில் ஏற்பட்ட விபரீதம்… மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட ராணவ்

இன்று நடைபெறும் டாஸ்கில் ஜெஃப்ரி மற்றும் ராணவ் இடையே கைகலப்பு ஏற்படுகிறது. அதில் ராணவின் கை அடிபட்டதாக தெரிகிறது. கை வலிக்கிறது என்று ராணவ் அழும் போது அவன் நடிக்கிறான் என்று ஜெஃப்ரி மற்றும் அன்சிதா கூறுகின்றனர்.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் டாஸ்கில் ஏற்பட்ட விபரீதம்… மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட ராணவ்
மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட ராணவ்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Dec 2024 09:51 AM

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் இன்று 72-வது நாளிற்கான புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் டாஸ்க் விளையாடும்போது ராணவிற்கு காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது போட்டியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 6-ம் தேதி இந்த 8-வது சீசன் தொடங்கியது. அதன்படி கடந்த 7 சீசன்களில் இல்லாத ஒன்று இந்த 8-வது சீசனில் நடைப்பெற்றது.  பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டது. அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடினர். இந்த சீசனில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருந்தது. கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தப் பிறகு தற்போது இந்த 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் ரவீந்தர் சந்திரசேகர், அருண் பிரசாத், அன்ஷிதா, தீபக்,  தர்ஷிகா, தர்ஷா குப்தா, ஜாக்குலின், முத்துக்குமார்,  ஜெப்ரி, அர்னவ், ரஞ்சித், பவித்ரா ஜனனி, ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா,சுனிதா, செளந்தர்யா, வி.ஜே. விஷால் உட்பட 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.

முன்னதாக 50 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடிய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் கடந்த 7-வது வாரம் முதல் ஒன்றாக்கி இனி ஆண்கள் பெண்கள் அணிகளுக்கு இடையே போட்டி இல்லை தனி நபர்களுக்கு இடையே போட்டி என்று அறிவிக்கப்பட்டது.

Also read… இணையத்தில் கவனம் பெறும் SK25 படத்தின் பூஜை வீடியோ!

6 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர் கடந்த நவம்பர் 3-ம் தேதி அன்று. அதில் ரியா தியாகராஜன், சிவகுமார், ரானவ், மஞ்சரி, ரயான், வர்ஷினி ஆகியவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளனர். இதனால் போட்டியின் நிலவரம் சற்று சூடு பிடித்தது.

ரவீந்தர் முதல் வாரம் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2-வது வாரம்அர்னவ்3-வது வாரம் தர்ஷா வெளியேற்றப்பட்டார். கடந்த 4-வது வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எவிக்‌ஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

Also read… Cinema Year Ender: 2024-ல் வசூல் சாதனை படைத்த படங்களை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

அதனை தொடர்ந்து 5-வது வாரம் சுனிதா,  6-வது வாரம் ரியா, 7-வது வாரம் வர்ஷினி, 8-வது வாரம் சிவக்குமார், 9-வது வாரம்  டபுள் எவிக்‌ஷனில் ஆனந்தி, சாச்சனா அதனை தொடர்ந்து கடந்த சனிகிழமை சத்யா ஞாயிரு தர்ஷிகாவும் எவிக்டாகியுள்ளனர். இந்த நிலையில் இன்று நிகழ்ச்சியின் 72-வது நாளிற்கான புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.

அதில் இன்று நடைபெறும் டாஸ்கில் ஜெஃப்ரி மற்றும் ராணவ் இடையே கைகலப்பு ஏற்படுகிறது. அதில் ராணவின் கை அடிபட்டதாக தெரிகிறது. கை வலிக்கிறது என்று ராணவ் அழும் போது அவன் நடிக்கிறான் என்று ஜெஃப்ரி மற்றும் அன்சிதா கூறுகின்றனர். ஆனால் மருத்துவரை பார்க்க சென்ற ராணவை வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக பிக்பாஸ் தெரிவித்துள்ளார்.

Latest News