5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Bigg Boss Tamil: ஆண்கள் அணியை பழிதீர்த்த பெண் போட்டியாளர்கள்.. பிக்பாஸில் இன்று!

Bigg Boss Tamil Season 8: தமிழ் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 8 தமிழ் கடந்த அக்டோபர் 6ம் தேதி ஞாயிற்றுக் கிழமை ஆரம்பமான நிலையில் முதல் நாளிலே 24 மணி நேர எவிக்ஷன் என்ற புதுவித டாஸ்கை கொண்டுவந்து ரசிகர்களை அலறவைத்தனர். இதனைத் தொடர்ந்து சாச்சனா வெளியேற்றப்பட்ட நிலையில் பின் நான்கு நாட்களில் ரீஎன்ட்ரி கொடுத்து போட்டியாளர்களைப் பதறவைத்தார். எந்த சீசனிலும் இல்லாமல் புதுவிதமாக ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி என தனித்தனி குழுக்களாக ஒரே விட்டிலில் பிரிக்கப்பட்டு எந்த சீசனிலும் இல்லாதவாறு சற்று புதுவிதமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் முதல் வார எவிக்ஷனில் ரவீந்தர் மற்றும் இரண்டாம் வார எவிக்ஷனில் அர்னவ் என அடுத்தடுத்த போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது வாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

Bigg Boss Tamil: ஆண்கள் அணியை பழிதீர்த்த பெண் போட்டியாளர்கள்.. பிக்பாஸில் இன்று!
பிக் பாஸ் சீசன் 8 தமிழ்
barath-murugantv9-com
Barath Murugan | Published: 23 Oct 2024 16:32 PM

பிக்பாஸ் தமிழ் சீசன் 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் ஆண்கள் அணியிலிருந்து முத்துக்குமரன், சத்யா மற்றும் அருணும், பெண்கள் அணியிலிருந்து பவித்ரா, சௌந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா மற்றும் தர்ஷா குப்தா என மொத்தம் 8 போட்டியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழில் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற விதத்தில் ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி என இரு குழுக்களாக பிரிந்து ஒரே வீட்டில் இருக்கும்படி இந்த சீசன் 8ல் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வாரம் இரு அணிகளில் இருந்து ஒரு போட்டியாளர் எதிரணி அறைக்கு சென்று தங்கும் விதியும் உள்ளது.

இந்நிகழ்ச்சியை சீசன் 7 வரைக்கும் நடிகர் கமல் தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி அவர் ஸ்டைலில் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது கடந்த ஞாயிற்றுக் கிழமை அர்னவ் வெளியேறிய நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான வாரத்திற்கான நாமினேஷனும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. 17வது நாளான இன்று முதல் இரண்டு ப்ரேமோவை பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ளது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் ஒளிரப்பாகி வருகிறது.  இந்நிகழ்ச்சியை அந்தந்த மொழிகளில் பல முன்னணி நட்சத்திரங்கள் இதுவரை தொகுத்து வழங்கி வருகின்றனர். கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வந்த நிலையில் அவர் நிகழ்ச்சியை விட்டு விலகிய பிறகு தற்போது இரவு 9:30க்கு வெளியாகும் இந்த 8-வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

நடிகர் விஜய் சேதுபதியும் இந்த நிகழ்ச்சியை நன்றாகத் தொகுக்கிறார் என்றும் பல நல்ல விமர்சனங்கள் வந்தாலும், இவருக்குப் பதிலாக நடிகர் கமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் எனவும் மக்கள் கூறிவருகின்றனர். நடிகர் கமல் இருந்தால் அந்த வாரத்திலேயே சண்டையைக் கேட்டு முடித்து சமாதானம் படுத்துவார், ஆனால் இவர் சண்டையை ஏற்படுத்தி விடுகிறார் என்று ஒருபுறம் மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க :’அமரன்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? வெளியானது மாஸ் அப்டேட்!

 

முதல் வாரம் ரவீந்தர் குறைந்த வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது வாரமாக அர்னவ் வெளியேற்றப்பட்டார். வீட்டை விட்டு வெளியேறிய அர்னவ் விஜய் சேதுபதியைச் சந்தித்து பெண்கள் அணி நன்றாக விளையாடுகிறார்கள். ஆனால் ஆண்கள் அணி சுத்த வேஸ்ட் என்றும் தெரிவித்தார்.  பின் பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களைச் சந்தித்த அர்னவ் பெண்கள் டீம் அருமையா விளையாடுறீங்க. ஆண்கள் டீம் ஜால்றா தட்டுகிறார்கள் என கோபத்துடன் பேசி  சர்ச்சைக்கு உள்ளானார்.

இதனை தொடர்ந்து அர்னவை விஜய் சேதுபதி எச்சரித்து அனுப்பினார். அர்னவ் பேசிய பேச்சால் இந்த வாரம் ஞாயிறுக்கிழமை எபிசோட் சூடுபிடித்தது. இந்நிலையில் தொடர்ந்து 17வது நாளான இன்று வெளியான முதல் இரண்டு ப்ரேமோ பற்றிப் பார்க்கலாம்.

இதையும் படிங்க :25 நாட்கள்.. மெய்யழகன் திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் முதல் ப்ரோமோவில் நேற்று மாலை முதல் ஆரம்பித்த பிக் பாஸ் ஸ்டார் ஹோட்டல் என்ற புதிய டாஸ்க் தொடங்கியது. இதில் ஆண்கள் அணி விருந்தினராகவும் மற்றும் பெண்கள் அணி ஹோட்டல் பணிப் பெண்களாகவும் இருந்தனர். இதில் ஆண்கள் அணியினர் பெண்கள் அணியை வைத்து செய்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று பெண்கள் விருந்தினராகவும் மற்றும் ஆண்கள் பணியாளராகவும் இருக்கின்றனர். இந்த முதல் ப்ரோமோவில் ஆண்கள் அணியைப் பெண்கள் டீம் வன்மத்தைக் கொட்டி பழிதீர்க்கும் வகையில் நடந்து கொண்டனர்.

இதையும் படிங்க :Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் அருணால் ஆண்கள் அணிக்கு வரும் சிக்கல்… பெண்கள் அணி கொடுத்த ட்விஸ்ட்!

இரண்டாவது ப்ரோமோவில் இந்த டாஸ்க்கில் பெண்கள் அணி ஆண்கள் அணியினர் மீது புகார்களை முன் வைக்கும் எண்ணத்தில் ஆண்கள் அணி அணி கவனிப்பு சரியில்லை, இந்த அணியின் மேனேஜர் சரியில்லை என்றும் தெரிவிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.   இதனால் ஆண்கள் அணியின் மேனேஜராக இருந்த முத்துக்குமாரனை மாற்றச் சொல்லி பிக் பாஸ் கூறுவது போன்றும் இந்த இரண்டாவது ப்ரோமோவில் இருக்கிறது.

 

Latest News