Bigg Boss Tamil Season 8: டாஸ்கில் சலசலப்பு… கேள்வி கேட்ட ஜாக்குலின் – கடுப்பான விஷால்
10 வாரங்களை கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 11 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது 13 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் போட்டியாளர்களிடையே சண்டைகள் அனல் பறக்கிறது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இன்று 73-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீசனில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 7 சீசன்களில் இல்லாத ஒன்று இந்த 8-வது சீசனில் நடைப்பெற்றது. பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டது. அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடினர். கடந்த அக்டோபர் மாதம் 6-ம் தேதி இந்த சீசன் தொடங்கியது. கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தப் பிறகு தற்போது இந்த 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் ரவீந்தர் சந்திரசேகர், அருண் பிரசாத், அன்ஷிதா, தீபக், தர்ஷிகா, தர்ஷா குப்தா, ஜாக்குலின், முத்துக்குமார், ஜெப்ரி, அர்னவ், ரஞ்சித், பவித்ரா ஜனனி, ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா,சுனிதா, செளந்தர்யா, வி.ஜே. விஷால் உட்பட 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.
Also read… வெறுப்பை பரப்பாதீங்க… அட்லியை உருவ கேலி செய்ததாக எழுந்த சர்ச்சை – கபில் சர்மா விளக்கம்
6 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர் கடந்த நவம்பர் 3-ம் தேதி அன்று. அதில் ரியா தியாகராஜன், சிவகுமார், ரானவ், மஞ்சரி, ரயான், வர்ஷினி ஆகியவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக களம் இறங்கினர். இதனால் போட்டியின் நிலவரம் சற்று சூடு பிடித்தது.
10 வாரங்களை கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 11 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது 13 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் போட்டியாளர்களிடையே சண்டைகள் அனல் பறக்கிறது.
Also read… ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் எப்போது? வைரலாகும் அப்டேட்
மேலும் இந்த 11-வது வாரம் பிக்பாஸ் வீட்டில் விஷால் கேப்டனாக தேர்வாகியுள்ளார். மேலும் இந்த வார நாமினேஷன் ஃப்ரீ பாஸ் பெற்ற ஜெஃப்ரி இவர்கள் இருவரையும் தவிர வீட்டில் உள்ள மற்றப் போட்டியாளர்கள் அனைவரும் இந்த வார எவிக்ஷனுக்காக நாமினேட் செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வார டாஸ்க் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 3 அல்லது 2 நபர்களாக பிரிந்து விளையாட அறிவுறுத்தப்பட்டது. நேற்று டாஸ்கில் ராணவிற்கு அடிபட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று 73-வது நாளிற்கான புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.
அதில், டாஸ்கில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்படுகின்றது. அப்போது ரஞ்சித், ஜெஃப்ரி, அன்சிதா, ஜாக்குலின் சண்டை போடுகின்றனர். அவர்களை தடுக்க வீட்டின் கேப்டன் விஷால் முயற்சி செய்கிறார். அப்போது அவர் ஜாக்குலினிடம் கோவப்படுவதால் வீட்டில் சலசலப்பு ஏற்படுகின்றது.