Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் மூளை இல்லாதவர் யார்? வெளிப்படையாக சொன்ன சுனிதா - Tamil News | Bigg Boss Tamil season 8 show crew released 1st promo video for 32nd day November 7th | TV9 Tamil

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் மூளை இல்லாதவர் யார்? வெளிப்படையாக சொன்ன சுனிதா

இந்த வார ஸ்வாப்பில் ஆண்கள் அணியில் இருந்து ரானவ் பெண்கள் அணிக்கும் பெண்கள் அணியில் இருந்து ஜாக்குலின் ஆண்கள் அணிக்கும் இடம் மாறியுள்ளனர். இந்த வாரத்திற்கான பிக்பாஸ் வீட்டில் நடைப்பெற்ற வீட்டுப் பணி டாஸ்கில் ஆண்கள் அணியினர் வெற்றிப்பெற்றனர். இதனால் இந்த வாரம் முழுவதும் வீட்டுப்  பணிகள் அனைத்தையும் பெண்கள் அணியினர் செய்ய வேண்டும்.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் மூளை இல்லாதவர் யார்? வெளிப்படையாக சொன்ன சுனிதா

பிக்பாஸ்

Published: 

07 Nov 2024 11:11 AM

பிக்பாஸ் தமிழ் சீசன் 8-ன் 32-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் இதுவரை தொகுத்து வழங்கி வந்துள்ளனர். கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் அவர் நிகழ்ச்சியை விட்டு விலகிய பிறகு தற்போது விஜய் சேதுபதி இந்த 8-வது சீசனை தொகுத்து வழங்குகிறார். விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த மாதம் 6-ம் தேதி பிக்பாஸ் தமிழ் 8-வது சீசன் தொடங்கியது.

இதில், ரவீந்தர் சந்திரசேகர், அருண் பிரசாத், அன்ஷிதா, தீபக்,  தர்ஷிகா, தர்ஷா குப்தா, ஜாக்குலின், முத்துக்குமார்,  ஜெப்ரி, அர்னவ், ரஞ்சித், பவித்ரா ஜனனி, ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா,சுனிதா, செளந்தர்யா, வி.ஜே. விஷால் என 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.

முதல் வார நாமினேஷனில் இடம் பிடித்த ரவீந்தர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது வார நாமினேஷனில் இடம் பிடித்த அர்னவ் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

மூன்றாவது வாரம் நாமினேஷனில் இடம் பிடித்த தர்ஷா குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். கடந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எவிக்‌ஷன் இல்லை என்று விஜய் சேதுபதி அறிவித்தார்.

முன்னதாக 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த நிலையில் மேலும் 6 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர் கடந்த ஞாயிறு அன்று. அதில் ரியா தியாகராஜன், சிவகுமார், ரானவ், மஞ்சரி, ராயன், வர்ஷினி ஆகியவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.

Also read… நடிகை ஓவியா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் இதுதான்!

மேலும் இந்த வாரத்திற்கான பிக்பாஸ் கேப்டனாக சத்யா தேர்வாகியுள்ளார். இந்த சீசனில் இந்த  வாரம் முதல் முறையாக ஓபன் நாமினேஷன் பிக்பாஸில் நடைப்பெற்றது. அதில் புதிதாக வீட்டிற்குள் வந்தவர்களை நாமினேட் செய்ய முடியாது என்று பிக்பாஸ் அறிவித்த பிறகு ஆண்கள் பெண்களையும் பெண்கள் ஆண்களையும் நாமினேட் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

இதில் டைரக்ட் நாமினேஷன் பாஸ் வைத்திருந்த விஷால் பெண்கள் அணியில் இருந்து ஜாக்குலினை நாமினேட் செய்தார். சௌந்தர்யா ஆண்கள் அணியில் இருந்த விஷாலை நாமினேட் செய்தார். அதனைத் தொடர்ந்து நடந்த இந்தவார எவிக்‌ஷன் நாமினேஷனில் இடம் பிடித்தவர்கள் முத்துகுமரன், தீபக், அருண், ரஞ்சித், விஷால் ஆகிய ஐந்து பேர் ஆண்கள் அணியிலிருந்தும் ஜாக்குலின், பவித்ரா ஜனனி, ஆர்.ஜே.ஆனந்தி, அன்ஷிதா, சாச்சனா மற்றும் சுனிதா ஆகிய 6 பேர் பெண்கள் அணியில் இருந்தும் நாமினேட் ஆகியுள்ளனர்.

Also read… மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா… அபர்ணா பாலமுரளியின் நியூ ஆல்பம்

மேலும் இந்த வார ஸ்வாப்பில் ஆண்கள் அணியில் இருந்து ரானவ் பெண்கள் அணிக்கும் பெண்கள் அணியில் இருந்து ஜாக்குலின் ஆண்கள் அணிக்கும் இடம் மாறியுள்ளனர். இந்த வாரத்திற்கான பிக்பாஸ் வீட்டில் நடைப்பெற்ற வீட்டுப் பணி டாஸ்கில் ஆண்கள் அணியினர் வெற்றிப்பெற்றனர். இதனால் இந்த வாரம் முழுவதும் வீட்டுப்  பணிகள் அனைத்தையும் பெண்கள் அணியினர் செய்ய வேண்டும்.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ரீ பாஸ்  டாஸ்கில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற ஆண்கள் அணியினர் வென்றனர். இந்த பாஸை வைத்து நாமினேஷனில் உள்ள ரஞ்சித்தை ஆண்கள் அணியினர் காப்பாற்றியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று வெளியான வீடியோவில் வீட்டில் உள்ளவர்களுக்கு பட்டை பெயர் கொடுக்கப்படுகிறது. அது எந்த போட்டியாளருக்கு பொருந்தும் என்று கேட்கையில் ஆர்வகோலாரு சாச்சனா என்று சௌந்தர்யா கூறினார். மண்டையில் ஒன்னும் இல்லை என்பது வர்ஷினி என்று சுனிதா வெளிப்படையாக கூறிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

வெங்காயம் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்குமா?
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமா? இதை பாலோ பண்ணுங்க..
பாலை காய்ச்சாமல் குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகள்!
காலிஃபிளவர் சாப்பிடுவது உடலுக்கு இவ்வளவு நன்மைகளை தருமா?