Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் வர்ஷினிக்கு எதிராக போராட்டம் பன்னும் மற்ற போட்டியாளர்கள் – வெளியானது வீடியோ

இந்த வாரம் தொடங்கள் இருந்து பிக்பாஸ் வீடு பிக்பாஸ் ரெஸிடென்சியல் பள்ளியாக மாறியுள்ளது. டாஸ்க் தொடங்கிய முதல் நாள் விறுவிறுப்பாக சென்ற நிலையில் நேற்று சற்று தொய்வாகவே டாஸ்க் ஆரம்பித்தது. இதனால் பிக்பாஸ் வீட்டில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் சீக்ரெட் டாஸ்க் வழங்கினார். இதனை அடுத்து டாஸ்க் விறுவிறுப்பாக சென்றது. இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் பிரின்சிபலாக இருக்கும் வர்ஷினிக்கு எதிராக மாணவர்கள் போராடுவது போன்ற வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் வர்ஷினிக்கு எதிராக போராட்டம் பன்னும் மற்ற போட்டியாளர்கள் - வெளியானது வீடியோ

பிக்பாஸ்

Published: 

14 Nov 2024 10:21 AM

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8-ன் 39-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த மாதம் 6-ம் தேதி பிக்பாஸ் தமிழ் 8-வது சீசன் தொடங்கியது. கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் அவர் நிகழ்ச்சியை விட்டு விலகினார். அதன் பிறகு தற்போது விஜய் சேதுபதி இந்த 8-வது சீசனை தொகுத்து வழங்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் இதுவரை தொகுத்து வழங்கி வந்துள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ரவீந்தர் சந்திரசேகர், அருண் பிரசாத், அன்ஷிதா, தீபக்,  தர்ஷிகா, தர்ஷா குப்தா, ஜாக்குலின், முத்துக்குமார்,  ஜெப்ரி, அர்னவ், ரஞ்சித், பவித்ரா ஜனனி, ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா,சுனிதா, செளந்தர்யா, வி.ஜே. விஷால் என 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.

மேலும் 6 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர் கடந்த 3-ம் தேதி அன்று. அதில் ரியா தியாகராஜன், சிவகுமார், ரானவ், மஞ்சரி, ரயான், வர்ஷினி ஆகியவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளனர். இதனால் போட்டியின் நிலவரம் சற்று சூடு பிடித்தது.

முதல் வார நாமினேஷனில் இடம் பிடித்த ரவீந்தர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது வார நாமினேஷனில் இடம் பிடித்த அர்னவ் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

மூன்றாவது வாரம் நாமினேஷனில் இடம் பிடித்த தர்ஷா குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். கடந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எவிக்‌ஷன் இல்லை என்று விஜய் சேதுபதி அறிவித்தார். அதனை தொடர்ந்து கடந்த 5-வது வாரம் சுனிதா குறைவான வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்த சீசனில் இந்த  வாரமும் ஓபன் நாமினேஷன் பிக்பாஸில் நடைப்பெற்றது. இதனை தொடர்ந்து டைரக்ட் நாமினேஷன் பாஸ் வைத்திருந்த ரானவ் பெண்கள் அணியில் இருந்து சௌந்தர்யாவை நாமினேட் செய்தார். ஜாக்குலின் ஆண்கள் அணியில் இருந்த சிவக்குமாரை நாமினேட் செய்தார்.

அதில் ஆண்கள் பெண்களையும் பெண்கள் ஆண்களையும் நாமினேட் செய்ய அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் பாம் பெற்ற தீபக் மற்றும் சிறப்பான பங்களிப்பு இல்லை என்று தேர்வான வர்ஷினி மற்றும் முத்துகுமரன் நேரடியாக நாமினேஷனின் இடம் பிடித்தனர்.

Also read… கார்த்தியின் நடிப்பில் வெளியானது ‘வா வாத்தியார்’ படத்தின் டீசர்!

அதனைத் தொடர்ந்து நடந்த இந்தவார எவிக்‌ஷன் நாமினேஷனில் இடம் பிடித்தவர்கள் முத்துகுமரன், தீபக், சிவகுமார், சத்யா, ஜெஃப்ரி, ரானவ், வர்ஷினி, ஜாக்குலின், தர்ஷா, ரியா, மஞ்சரி, ஜாக்குலின், சௌந்தர்யா மற்றும் சாச்சனா ஆகிய 14 நபர்கள் நாமினேட் ஆகியுள்ளனர்.

இந்த வாரத்திற்கான பிக்பாஸ் கேப்டனாக அருண் பிரசாத் தேர்வாகியுள்ளார். அதனை தொடர்ந்து இந்த வாரம் ஆண்கள் அணியில் இருந்த ரயான் பெண்கள் அணிக்கும், பெண்கள் அணியில் இருந்து அன்ஷிதா ஆண்கள் அணிக்கும் ஸ்வாப் ஆகியுள்ளனர்.

Also read… ‘அமரன்’ படத்திலிருந்து வெளியானது ‘ஹே மின்னலே’ வீடியோ பாடல்!

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான வீட்டு பணி டாஸ்க் கடந்த திங்கள் அன்று நடைப்பெற்றது. அதில் பெண்கள் அணியினர் வெற்றிப்பெற்றனர். இதனால் இந்த வாரம் முழுவதும் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் ஆண்கள் அணியினர் செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து வீடு பிக்பாஸ் ரெசிடென்சியல் பள்ளியாக மாறியது.

இந்த நிலையில் இந்த வாரம் தொடங்கள் இருந்து பிக்பாஸ் வீடு பிக்பாஸ் ரெஸிடென்சியல் பள்ளியாக மாறியுள்ளது. டாஸ்க் தொடங்கிய முதல் நாள் விறுவிறுப்பாக சென்ற நிலையில் நேற்று சற்று தொய்வாகவே டாஸ்க் ஆரம்பித்தது. இதனால் பிக்பாஸ் வீட்டில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் சீக்ரெட் டாஸ்க் வழங்கினார்.

இதனை அடுத்து டாஸ்க் விறுவிறுப்பாக சென்றது. இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் பிரின்சிபலாக இருக்கும் வர்ஷினிக்கு எதிராக மாணவர்கள் போராடுவது போன்ற வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மாதவிடாய் காலத்தில் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்யலாம்?
இரவு தூங்கும் முன் இந்த பழங்களை நிச்சயம் சாப்பிடக்கூடாது..
இந்த பிரச்சனை இருப்பவர்கள் தப்பி தவறி கூட பாதாம் சாப்பிடக்கூடாது..
குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது எப்படி?