Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன்… யார் யாரை நாமினேட் செய்கிறார்கள்?

கடந்த வாரம் பிக்பாஸ் டாஸ்க்கில் நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க் வழங்கப்பட்டது. இதில் போட்டியாளர்களிடையே பல பிரச்னைகள் வெடித்தது. இந்த டாஸ்க் தொடங்கியது முதலே தனித்தனியாக விளையாட போட்டியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கிய முதல் வாரத்திலேயே கூட்டம் கூட்டமாக இணைந்து இந்த போட்டியில் விளையாடினர்.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன்... யார் யாரை நாமினேட் செய்கிறார்கள்?

பிக்பாஸ்

Published: 

02 Dec 2024 11:06 AM

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 57-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. இந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் இதுவரை தொகுத்து வழங்கி வந்துள்ளனர். கடந்த 7 சீசன்களாக இல்லாத ஒன்றாக இந்த 8-வது சீசனில் பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு அணிகளாக விளையாடினர். இந்த சீசனில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருந்தது. கடந்த அக்டோபர் மாதம் 6-ம் தேதி பிக்பாஸ் தமிழ் 8-வது சீசன் தொடங்கியது. கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் அவர் நிகழ்ச்சியை விட்டு விலகினார். அதன் பிறகு தற்போது விஜய் சேதுபதி இந்த 8-வது சீசனை தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் ரவீந்தர் சந்திரசேகர், அருண் பிரசாத், அன்ஷிதா, தீபக்,  தர்ஷிகா, தர்ஷா குப்தா, ஜாக்குலின், முத்துக்குமார்,  ஜெப்ரி, அர்னவ், ரஞ்சித், பவித்ரா ஜனனி, ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா,சுனிதா, செளந்தர்யா, வி.ஜே. விஷால் என 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.

முதல் வார நாமினேஷனில் இடம் பிடித்த ரவீந்தர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது வார நாமினேஷனில் இடம் பிடித்த அர்னவ் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். மூன்றாவது வாரம் தர்ஷாவும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

Also read… ஓடிடியில் கலக்கும் ’லக்கி பாஸ்கர்’ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

மேலும் 6 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர் கடந்த 3-ம் தேதி அன்று. அதில் ரியா தியாகராஜன், சிவகுமார், ரானவ், மஞ்சரி, ரயான், வர்ஷினி ஆகியவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளனர். இதனால் போட்டியின் நிலவரம் சற்று சூடு பிடித்தது.

4-வது வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எவிக்‌ஷன் இல்லை என்று விஜய் சேதுபதி அறிவித்தார். அதனை தொடர்ந்து 5-வது வாரம் சுனிதா குறைவான வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். மேலும் கடந்த 6-வது வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்த ரியா தியாகராஜன் பிக்பாஸ் வீட்டை விட்டு எவிக்ட் ஆனார்.

இதனை தொடர்ந்து 7-வது வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வர்ஷா வெளியேற்றப்பட்டார். மேலும் கடந்த 8-வது வாரம் வைல்கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்த சிவக்குமார் நேற்று வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். முன்னதாக 50 நாட்களாக இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடி ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினரை கடந்த 7-வது வாரம் முதல் ஒன்றாக்கி இனி பெண்கள் அணிகளுக்கு இடையே போட்டி இல்லை தனி நபர்களுக்கு இடையே போட்டி என்று அறிவிக்கப்பட்டது.

Also read… இணையத்தில் வைரலாகும் சோபிதாவின் நலங்கு போட்டோஸ்

கடந்த வாரம் பிக்பாஸ் டாஸ்க்கில் நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க் வழங்கப்பட்டது. இதில் போட்டியாளர்களிடையே பல பிரச்னைகள் வெடித்தது. இந்த டாஸ்க் தொடங்கியது முதலே தனித்தனியாக விளையாட போட்டியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கிய முதல் வாரத்திலேயே கூட்டம் கூட்டமாக இணைந்து இந்த போட்டியில் விளையாடினர். இதனால் பல மோதல்களும் ஏற்பட்டது. இறுதியாக இந்த போட்டியில் ஜெஃப்ரி வெற்றிப் பெற்றார்.

இந்த போட்டியில் வெற்றிப் பெற்றதால் ஜெஃப்ரியை இந்த வாரம் யாரும் நாமினேட் செய்யமுடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான கேப்டன் போட்டியில் கடந்த வாரம் பெஸ்ட் பர்ஃபாமர்களாக தேர்வான ஜெஃப்ரி மற்றும் சாச்சனா இடையே நடைப்பெற உள்ளது. இதில் ஜெஃப்ரி வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் 57-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் இந்த வாரம் வீட்டில் உள்ளவர்கள் நேரடியாக போட்டியாளர்களை தேர்வு செய்கின்றனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

குளிர் காலத்தில் பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல வேண்டுமா?
எந்த மாதிரி பார்ட்னர் கிடைத்தால் ஓகே சொல்லலாம்?
40 வயதிற்கு பிறகு கைவிட வேண்டிய பழக்கங்கள்..!
பூண்டு சாப்பிடுவது யாருக்கு நல்லதல்ல..?