5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Bigg Boss 8 Tamil : சூடு பிடிக்கும் ஆட்டம்.. யார் பெஸ்ட்? சண்டையில் பிக்பாஸ் வீடு..!

Bigg Boss 8 Tamil : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை வெளியான எந்த சீசனிலும் இல்லாத புதிய தோற்றத்தில் வெளியான சீசன் பிக் பாஸ் சீசன் 8 தமிழ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தற்போது நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வருகிறார்.

Bigg Boss 8 Tamil : சூடு பிடிக்கும் ஆட்டம்.. யார் பெஸ்ட்? சண்டையில் பிக்பாஸ் வீடு..!
பிக் பாஸ் சீசன் 8 தமிழ்
barath-murugantv9-com
Barath Murugan | Published: 16 Oct 2024 15:52 PM

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே பல போட்டிகள் நடைபெற்றதை விடப் பெண்கள் அணியினருக்கு இடையே பல சண்டைகள் இருந்தது. அந்த வகையில் ஆண்கள் அணியினர் ஒற்றுமையாக இருக்கின்றனர் ஆனால் பெண்கள் தங்களின் குழுக்கு உள்ளேயே சண்டையிட்டுக் கொள்கின்றனர். பெண்கள் டீமிற்கு ஆண்கள் டீம் எவ்வளவோ மேல் என்று தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 10வது நாளான இன்று யார் முதல் இடத்திற்குத் தகுதியானவர் என்ற எண்ணத்தில் போட்டியிடுவது போல இந்த பிரமோவில் உள்ளது.

மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் ஆண்டுதோறும் வெளியாகும் இந்நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த அக்டோபர் 6ல் வெளியானது. இந்த போட்டியில் ரவீந்தர் சந்திரசேகர், அன்ஷிதா, அருண் பிரசாத், தீபக், தர்ஷா குப்தா, தர்ஷிகா, ஜாக்குலின், ஜெப்ரி, முத்துக்குமார், அர்னவ், பவித்ரா ஜனனி, ரஞ்சித், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, செளந்தர்யா, சுனிதா, வி.ஜே. விஷால் என 18 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிங்க :Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் ஆண்கள் அணியில் வெடியை கொளுத்தி போட்ட தர்ஷா… கொண்டாட்டத்தில் பெண்கள்

இதுவரை வெளியான சீசனில் பிக்பாஸ் சீசன் 8 வரலாற்றில் முதல் முறையாக, 24 மணி நேர ஏவிக்ஷன் இந்த சீசனில் தான் அரங்கேறியுள்ளது. இந்த அறிவிப்பு போட்டியாளர்கள் மட்டுமில்லாமல் மக்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் போட்டியாளர்கள் தங்களுக்குள்ளே நாமினேஷன் செய்துகொள்ளவேண்டும் என்று கூறப்பட்டது இதன் காரணமாக சாச்சனாவை வெளியேற்றினர் . இதனைத் தொடர்ந்து கடந்தவாரம் அவர் உள்ளே வந்த நிலையில் ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

இதையும் படிங்க :Today’s Cinema News: அஜித்தின் அடுத்த திரைப்படம் முதல் வேட்டையன் வசூல் வரை.. டாப் சினிமா செய்திகள்!

தற்போது கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வந்த நிலையில் அவர் நிகழ்ச்சியை விட்டு விலகிய பிறகு தற்போது விஜய் சேதுபதி இந்த 8-வது சீசனை தொகுத்து வழங்குகிறார். இவரின் கடந்த இரண்டு நாட்களாக விஜய் சேதுபதி போட்டியாளர்களிடையே உரையாடியது இணையத்தில் வைரலானது. மற்றும் பிக் பாஸ் ரசிகர்களிடம் பல விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் வரலாற்றில் பெஸ்ட் வீக்கெண்ட் எபிசோட் என்று ரசிகர்கள் இணையத்தில் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையில் வெளியான எபிசோடில் போட்டியாளர் ரவீந்தர் குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேற்றப்பட்டார். இந்த எலிமிநேஷனை மக்கள் பலரும் இது முறையற்ற வெளியேற்றம் என இணையத்தில் தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் அணியிலிருந்து தீபக் பெண்கள் அணிக்கும், பெண்கள் அணியிலிருந்து தர்ஷா ஆண்கள் அணிக்கும் இந்த வாரம் மாறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த வார பிக்பாஸ் வீட்டின் தலைவராக சத்யா வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் தற்போது 10வது நாளின் பிரமோவை வெளியிட்டுள்ளனர்.

 

இந்த பிரமோவில் யார் பெஸ்ட் என முத்துக்குமரன், விஷால் மற்றும் ஆனந்தி இவர்கள் மூவரும் மோதிக்கொள்ளுவது போல் இருக்கிறது. இதில் யார் பெஸ்ட் என்ற இடத்திற்கு போட்டியிடுகின்றனர். ஒவ்வொருவரும் தனது வாதங்களை முன்வைத்த நிலையில் ஹவுஸ்மேட்ஸிடம் முத்துக்குமரன் வாக்குவாதம் செய்வதுபோல் இந்த பிரமோவில் இருக்கிறது.

இதையும் படிங்க :நடிகை சோபிதா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

Latest News