Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் ஆண்கள் அணியில் வெடியை கொளுத்தி போட்ட தர்ஷா… கொண்டாட்டத்தில் பெண்கள் - Tamil News | Bigg Boss Tamil season 8 show crew released first promo video for 9th day | TV9 Tamil

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் ஆண்கள் அணியில் வெடியை கொளுத்தி போட்ட தர்ஷா… கொண்டாட்டத்தில் பெண்கள்

கடந்த வாரம் முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே பல போட்டிகள் நடைப்பெற்றதை விட பெண்கள் அணியினருக்கு இடையே பல சண்டைகள் இருந்தது. ஆண்கள் அணியினர் இடையே இருக்கும் ஒற்றுமை பெண்களிடையே குறைவாகவே இருக்கிறது என்றும் மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் ஆண்கள் அணியில் வெடியை கொளுத்தி போட்ட தர்ஷா... கொண்டாட்டத்தில் பெண்கள்

பிக்பாஸ்

Published: 

15 Oct 2024 11:27 AM

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இன்று 9-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்களின் பார்வை மொத்தமும் நிகழ்ச்சி போட்டியாளர்களின் தேர்வு பட்டியலின் பக்கம் சென்றது. முதல் சீசனில் ஆரவ் கோப்பையை வென்றார், அதே சமயம் ரித்விகா இரண்டாவது சீசனில் பாடகர் மற்றும் நடிகர் முகேன் ராவ் மூன்றாவது சீசனையும், நடிகர்கள் ஆரி அர்ஜுனா மற்றும் ராஜு ஜெயமோகன் நான்காவது மற்றும் ஐந்தாவது சீசனில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். ஆறாவது மற்றும் ஏழாவது சீசனில் அசீம் மற்றும் அர்ச்சனா வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

கடந்த 6-ம் தேதி 8-வது சீசன் தொடங்கியது. இதில், ரவீந்தர் சந்திரசேகர், அன்ஷிதா, அருண் பிரசாத், தீபக், தர்ஷா குப்தா, தர்ஷிகா, ஜாக்குலின், ஜெப்ரி, முத்துக்குமார், அர்னவ், பவித்ரா ஜனனி, ரஞ்சித், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, செளந்தர்யா, சுனிதா, வி.ஜே. விஷால் என 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் இதுவரை தொகுத்து வழங்கி வந்துள்ளனர். கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் அவர் நிகழ்ச்சியை விட்டு விலகிய பிறகு தற்போது விஜய் சேதுபதி இந்த 8-வது சீசனை தொகுத்து வழங்குகிறார்.

Also read… இணையத்தை கலக்கும் நடிகை ரம்யா நம்பீசனின் ரீசென்ட் போட்டோ

பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக, பங்கேற்பாளர்களிலிருந்து ஒருவர், 24 மணி நேரத்தில் வெளியேற்றப்படவுள்ளார் என அறிவித்தார். இந்த அறிவிப்பு போட்டியாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் யார் வெளியேறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்த நிலையில் கடந்த திங்கள் அன்று பிக்பாஸ் அறிவுறுத்தலின்படி நாமினேஷன் நடைப்பெற்றது. அதில் சக போட்டியாளர்களின் அதிக வாக்குகளைப் பெற்ற சாச்சனா நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். பின்னர் கடந்த வெள்ளி அன்று மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் சாச்சிதா. மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். மேலும் கடந்த வாரம் நடந்த எவிக்‌ஷனின் ரவிந்தர் சந்திரசேகர் வீட்டில் இருந்து வெளியேறினார்.

Also read… Cinema Rewind: ஷங்கர பாத்து சூடு போட்டுகிட்ட கதைதான்… கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன விஷயம்

கடந்த வாரம் முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே பல போட்டிகள் நடைப்பெற்றதை விட பெண்கள் அணியினருக்கு இடையே பல சண்டைகள் இருந்தது. ஆண்கள் அணியினர் இடையே இருக்கும் ஒற்றுமை பெண்களிடையே குறைவாகவே இருக்கிறது என்றும் மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் அணியில் இருந்து தீபக் பெண்கள் அணிக்கும், பெண்கள் அணியில் இருந்து தர்ஷா ஆண்கள் அணிக்கும் இந்த வாரம் மாறி உள்ளனர். மேலும் இந்த வாரம் நடந்த கேப்டன் டாஸ்கில் சத்யா வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று நடைப்பெற்ற ஷாப்பிங் டாஸ்கிற்கு ஆண்கள் அணியில் இருந்த தர்ஷா உள்ளே போக கேட்க ஆனால் அவரை அனுப்ப ஆண்கள் அணியினர் மறுத்துவிட்டனர். ஆனால் அந்த டாஸ்கில் ஆண்கள் அணியினர் தோற்றதால் கடுப்பான தர்ஷா அவர்களிடம் சண்டையிட அதைப் பார்த்த பெண்கள் அணியினர் கொண்டாடுகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
தண்ணீரின்றி உயிர் வாழும் பாலைவன விலங்குகள் என்னென்ன?
உங்களைச் சுற்றி மகிழ்ச்சியான உறவுகளை உருவாக்குவது எப்படி?
மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் அப்துல் கலாமின் பொன்மொழிகள்...!