Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் அருணால் ஆண்கள் அணிக்கு வரும் சிக்கல்… பெண்கள் அணி கொடுத்த ட்விஸ்ட்! - Tamil News | Bigg Boss Tamil season 8 show crew released promo video for 16th day october 22nd | TV9 Tamil

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் அருணால் ஆண்கள் அணிக்கு வரும் சிக்கல்… பெண்கள் அணி கொடுத்த ட்விஸ்ட்!

இந்த வாரம் நடைப்பெற்ற ஸ்வாப்பில் ஆண்கள் அணியில் இருந்து ஜெஃப்ரி பெண்கள் அணிக்கும், பெண்கள் அணியில் இருந்து சாச்சனா ஆண்கள் அணிக்கும் சென்றனர். அதனை தொடர்ந்து இந்த வார நாமினேஷனில் பவித்ரா, சௌந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா, தர்ஷா, முத்துகுமரன், அருண், சத்யா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் அருணால் ஆண்கள் அணிக்கு வரும் சிக்கல்... பெண்கள் அணி கொடுத்த ட்விஸ்ட்!

பிக்பாஸ்

Updated On: 

22 Oct 2024 11:11 AM

பிக்பாஸ் தமிழ் சீசன் 8-ன் 16-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. பிக்பாஸ் முதல் சீசனில் ஆரவ் கோப்பையை வென்றார், அதே சமயம் ரித்விகா இரண்டாவது சீசனில் பாடகர் மற்றும் நடிகர் முகேன் ராவ் மூன்றாவது சீசனையும், நடிகர்கள் ஆரி அர்ஜுனா மற்றும் ராஜு ஜெயமோகன் நான்காவது மற்றும் ஐந்தாவது சீசனில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். ஆறாவது மற்றும் ஏழாவது சீசனில் அசீம் மற்றும் அர்ச்சனா வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்களின் பார்வை மொத்தமும் நிகழ்ச்சி போட்டியாளர்களின் தேர்வு பட்டியலின் பக்கம் சென்றது.

பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக, பங்கேற்பாளர்களிலிருந்து ஒருவர், 24 மணி நேரத்தில் வெளியேற்றப்படவுள்ளார் என அறிவித்தார். இந்த அறிவிப்பு போட்டியாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் யார் வெளியேறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்த நிலையில் கடந்த திங்கள் அன்று பிக்பாஸ் அறிவுறுத்தலின்படி நாமினேஷன் நடைப்பெற்றது. அதில் சக போட்டியாளர்களின் அதிக வாக்குகளைப் பெற்ற சாச்சனா நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். பின்னர் அதே வாரம் வெள்ளி அன்று மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் சாச்சிதா.

கடந்த 6-ம் தேதி 8-வது சீசன் தொடங்கியது. இதில், ரவீந்தர் சந்திரசேகர், அன்ஷிதா, அருண் பிரசாத், தீபக், தர்ஷா குப்தா, தர்ஷிகா, ஜாக்குலின், ஜெப்ரி, முத்துக்குமார், அர்னவ், பவித்ரா ஜனனி, ரஞ்சித், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, செளந்தர்யா, சுனிதா, வி.ஜே. விஷால் என 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் இதுவரை தொகுத்து வழங்கி வந்துள்ளனர். கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் அவர் நிகழ்ச்சியை விட்டு விலகிய பிறகு தற்போது விஜய் சேதுபதி இந்த 8-வது சீசனை தொகுத்து வழங்குகிறார்.

Also read… ஆர்.ஜே.பாலாஜியின் ‘சொர்கவாசல்’ பட டீசர் இதோ!

இந்த நிலையில் முதல் வார நாமினேஷனில் இடம் பிடித்த ரவீந்தர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் கடந்த வார நாமினேஷனில் இடம் பிடித்த அர்னவ் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு நேற்று வெளியேற்றப்பட்டார்.

Also read… சூர்யாவின் ‘கங்குவா’ படத்திலிருந்து வெளியானது ‘யோலோ’ லிரிக்கள் வீடியோ

மேலும் நேற்று பிக்பாஸ் வீட்டில் நடைப்பெற்ற கேப்டன்ஸி டாஸ்கில் ரஞ்சித் மற்றும் தர்ஷிகா இருவரும் கலந்து கொண்டனர். இரண்டாவது முறையாக பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக தர்ஷிகா வெற்றிப்பெற்றார். அதனை தொடந்து இந்த வாரம் நடைப்பெற்ற ஸ்வாப்பில் ஆண்கள் அணியில் இருந்து ஜெஃப்ரி பெண்கள் அணிக்கும், பெண்கள் அணியில் இருந்து சாச்சனா ஆண்கள் அணிக்கும் சென்றனர். அதனை தொடர்ந்து இந்த வார நாமினேஷனில் பவித்ரா, சௌந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா, தர்ஷா, முத்துகுமரன், அருண், சத்யா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று 16-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் சாச்சனாவிற்கு வயிறு வலி என்பதால் அவரை கன்ஃபஷன் ரூமிற்கு பிக்பாஸ் அழைக்க அவருடன் அருணும் பெண்கள் வீட்டின் பக்கம் உள்ள கன்ஃபஷன் ரூமிற்கு சென்றுவிட்டார். இதனை பயண்படுத்திக்க பெண்கள் அணியினர் திட்டமிடுகின்றனர். இது ஆண்கள் அணியினருக்கு சிக்கலாக வரும் என்பது குறிப்பிடதக்கது.

வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்..?
முள்ளங்கியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?
கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 தள்ளுபடி!