Bigg Boss Tamil Season 8: பிக்பாஸிற்கு வந்த கவின்… உற்சாகத்தில் போட்டியாளர்கள்!
இந்த வாரத்திற்கான வீக்லி டாஸ்க் என்ன என்பது தெரியவந்துள்ளது. அதன்படி வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மற்ற போட்டியாளர்களாக மாறி அவர்கள் குறித்து மக்கள் எதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதை நடித்து வெளிப்படுத்த வேண்டும் என்று பிக்பாஸ் அறிவித்தார். அதனை தொடர்ந்து போட்டியாளர்கள் பலர் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினர்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8-ன் 25-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் அவர் நிகழ்ச்சியை விட்டு விலகிய பிறகு தற்போது விஜய் சேதுபதி இந்த 8-வது சீசனை தொகுத்து வழங்குகிறார். கடந்த 6-ம் தேதி பிக்பாஸ் தமிழ் 8-வது சீசன் தொடங்கியது. இதில், ரவீந்தர் சந்திரசேகர், அருண் பிரசாத், அன்ஷிதா, தீபக், தர்ஷிகா, தர்ஷா குப்தா, ஜாக்குலின், முத்துக்குமார், ஜெப்ரி, அர்னவ், ரஞ்சித், பவித்ரா ஜனனி, ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா,சுனிதா, செளந்தர்யா, வி.ஜே. விஷால் என 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக, பங்கேற்பாளர்களிலிருந்து ஒருவர், 24 மணி நேரத்தில் வெளியேற்றப்படவுள்ளார் என அறிவித்தார். இந்த அறிவிப்பு போட்டியாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதில் யார் வெளியேறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்த நிலையில் முதல் வார திங்கள் அன்று பிக்பாஸ் அறிவுறுத்தலின்படி நாமினேஷன் நடைப்பெற்றது. அதில் சக போட்டியாளர்களின் அதிக வாக்குகளைப் பெற்ற சாச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். பின்னர் அதே வாரம் வெள்ளி அன்று மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் சாச்சனா.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் இதுவரை தொகுத்து வழங்கி வந்துள்ளனர். விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் வார நாமினேஷனில் இடம் பிடித்த ரவீந்தர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது வார நாமினேஷனில் இடம் பிடித்த அர்னவ் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் கடந்த வாரம் நாமினேஷனில் இடம் பிடித்த தர்ஷா குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
Also read… பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டேனா? நடிகை நயன்தாரா விளக்கம்
முத்துகுமரன் இந்த வார பிக்பாஸ் வீட்டின் கேப்டன் ஆனார். அதனை தொடர்ந்து நடைப்பெற்ற இந்த வாரத்திற்கான நாமினேஷனில் ஜாக்குலின், சுனிதா, அன்சிதா, பவித்ரா, தீபக், ரஞ்சித், ஜெஃப்ரி, அருண், சத்யா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். தொடர்ந்து ஆண்கள் அணியில் இருந்து விஷால் பெண்கள் அணிக்கும், பெண்கள் அணியில் இருந்து சௌந்தர்யா ஆண்கள் அணிக்கும் இந்த வாரம் ஸ்வாப் ஆகியுள்ளனர்.
இந்த வாரத்திற்கான வீக்லி டாஸ்க் என்ன என்பது தெரியவந்துள்ளது. அதன்படி வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மற்ற போட்டியாளர்களாக மாறி அவர்கள் குறித்து மக்கள் எதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதை நடித்து வெளிப்படுத்த வேண்டும் என்று பிக்பாஸ் அறிவித்தார். அதனை தொடர்ந்து போட்டியாளர்கள் பலர் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் 25-வது நாள் மற்றும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்ப்டுகின்றது. இந்த நிலையில் இதனை கொண்டாடும் வகையிலும், ப்ளடி பெக்கர் படத்தின் புரமோஷன் பணிக்காவும் நடிகர் கவின் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். கவின் கடந்த 3-வது சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் என்பது குறிப்பிடதக்கது.