Bigg Boss Tamil 8 Live Streaming: ”மேடையில ஏறனும்னா மொதல்ல களத்துல இறங்கனும்” – தொடங்கியது பிக்பாஸ் தமிழ் சீசன் 8! - Tamil News | Bigg Boss Tamil Season 8 streaming now on 6pm | TV9 Tamil

Bigg Boss Tamil 8 Live Streaming: ”மேடையில ஏறனும்னா மொதல்ல களத்துல இறங்கனும்” – தொடங்கியது பிக்பாஸ் தமிழ் சீசன் 8!

Published: 

06 Oct 2024 18:44 PM

சில நாள் தொடங்கும் போது பாத்தீங்கனா... பார்த்திபன் சார் ஒரு கவிதை எழுதி இருந்தாரு... சில நாள் எப்படி இருக்கும்னா எங்கையோ தூரமா இருக்க தீவுக்கு துனைக்கு போயிடலாம்னு தோனும், அந்த மாதி சில நாள் எந்திரிக்கும் போதே நாமா ராஜா மாதிரி ஃபீல் ஆவோம். சில நாள் ஒரு அரங்கனை போல ஃபீல் ஆகும். தீர்ப்பு வழங்குற அன்னைக்கு நான் எப்படிப்பட்ட ஆளா இருப்பேன்னு எனக்கு தெரியாது.

Bigg Boss Tamil 8 Live Streaming: ”மேடையில ஏறனும்னா மொதல்ல களத்துல இறங்கனும்” - தொடங்கியது பிக்பாஸ் தமிழ் சீசன் 8!

விஜய் சேதுபதி

Follow Us On

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி பாடகர் அறிவின் பாடலுன் தற்போது தொடங்கியுள்ளது. விஜய் டிவியின் பிக்பாஸ்  நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் இதுவரை தொகுத்து வழங்கி வந்துள்ளனர். தமிழில் 7 சீசன்கள் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக 8-வது சீசன் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. முன்னதாக 7 சீசனை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். அவர் நிகழ்ச்சியை விட்டு விலகிய நிலையில் தற்போது இந்த 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிறார். மேடையில் ஏறனும்னா மொதல்ல களத்துல எறங்கனும்னு விஜய் சேதுபதி நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கூறி தொடங்கி வைத்துள்ளார்.

விஜய் சேதுபதி பேச்சு:

இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி, இந்த பிக்பாஸ் சீசன் 8 பொறத்த வரைக்கும் நான் இந்த ஷோவ எப்படி பன்னப்போறேன்? என்ன பன்னப்போறேன் அப்படினு நிறைய யோசிச்சு பாத்தோம், ரூம்லாம் போட்டு ப்ளான் பன்னி பாத்தோம் எதும் ஒர்க்கவுட் ஆகல. ஏன்னா சில விஷயங்கள பன்னும் போது இந்த உலகத்துல எது நம்ம கண்ட்ரோல்ல இல்லையோ அத நாம கண்ட்ரோல்ல எடுக்க ட்ரை பன்னக் கூடாதுங்குறது நான் பல முறை கத்துக்கிட்டேன் இருக்கேன். இந்த முறையும் கத்துக்கிட்ட முக்கியமான பாடம் இது. ஏன்னா இது ஆடப்போறது நான் இல்ல அவங்கதான். நான் வேடிக்கை தான் பாக்கப்போறேன்.

சில சமயம் ஆட்டத்தில இருக்கும் போது தீர்ப்பு வழங்குறது சுலபம், ஆடுறதுதான் கஷ்டம் தோனும். ஆனா தீர்ப்பு வழங்கும் போது ஆடுறது சுலபம். தீர்ப்பு வழங்குறதுதான் கஷ்டம் தோனும். ஏன்னா தீர்ப்பு வழங்கும் போது பலரை நாம திருப்த்திபடுத்த வேண்டி வரும். அப்படி தானே?

சில நாள் தொடங்கும் போது பாத்தீங்கனா… பார்த்திபன் சார் ஒரு கவிதை எழுதி இருந்தாரு… சில நாள் எப்படி இருக்கும்னா எங்கையோ தூரமா இருக்க தீவுக்கு துனைக்கு போயிடலாம்னு தோனும், அந்த மாதி சில நாள் எந்திரிக்கும் போதே நாமா ராஜா மாதிரி ஃபீல் ஆவோம். சில நாள் ஒரு அரங்கனை போல ஃபீல் ஆகும். தீர்ப்பு வழங்குற அன்னைக்கு நான் எப்படிப்பட்ட ஆளா இருப்பேன்னு எனக்கு தெரியாது. அதனால் எதாவது தப்பாகிடுச்சுனா முன்னப்பின்ன பாத்து பேசிப்போம்னு விஜய் சேதுபதி கூறியபோது அரங்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் கைத்தட்டி சிரித்தனர்.

தொடர்ந்து பேசிய அவர், என்ன கேட்டாங்கனா பாதி பலிய உங்க மேல போட்டுட்றேன். என்ன ஏன்பா கேட்குறீங்க ஓட்டு போட்டவங்கள கேளுங்கனு சொல்லிட்றேன். உங்கள யாராவது கேட்டாங்கனா என்ன ஏன்பா கேட்கிற தீர்ப்பு வழங்குனவன கேளுங்கனு சொல்லிடுங்க என்று கலகலப்பாக பேசினார். அதற்கு முன்னாடி புது ஹோஸ்ட் நான் ரெடி புது வீடு எப்படி இருக்குனு பார்போமா என்று வீட்டின் அறிமுகத்தை தொடங்குகிறார்.

பிக்பாஸ் தமிழ் 8 வீடு:

பிக்பாஸ் வீட்டிற்குள் விஜய் சேதுபதி நுழையும் போது அவருக்கு விக்ரம் வேதா படத்தின் பாடல் போட்டு வரவேற்பு வழங்கப்பட்டது. வீட்டிற்குள் வந்த விஜய் சேதுபதி பேசுகையில், வீடு ரொம்ப அழகா இருக்கு. வெளிய நாம யாரா வேணும்னாலும் இருக்கலாம். ஆனா இந்த வீட்டுக்குள்ள வந்துட்டா இந்த வீட்ல ஒருத்தர் தான். இங்க மேல, கீழ.. கருப்பு, வெள்ளை அப்படின்ற எந்த பாகுபாடுமே கிடையாது. அப்படி யாருகாச்சும் எண்ணம் இருந்தா எல்லாரும் ஒன்னுதான்னு இந்த வீடு புரிய வச்சுடும்னு நான் நம்புறேன் என்று தெரிவித்தார். மேலும் வீடு பற்றி பேசிய அவர்.. இது தான் கார்டன் ஏரியா.. காசிஃப் ஏரியானும் சொல்லலாம். இங்க காதலிச்சு இருக்காங்க,  கைய புடிச்சு இருக்காங்க, கண்ண கசக்கி இருக்காங்க.. ப்ளான் பண்ணி இருக்காங்க. இப்போ வரப்போறவங்க என்ன எல்லாம் பன்றாங்கனு பாப்போம்.

அப்போது ஒலித்த பிக்பாஸின் குரல்.. நைஸ்… இந்த வீட்ட பத்தின உங்க புரிதல் ரொம்ப அழகா இருக்கு. விஜய குருநாத சேதுபதி இந்த பிக்பாஸ் சீசன் 8-ற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. இன்னொரு விஷயம், விஜய குருநாத சேதிபதின்ற இந்த பெயரை முழுமையா கூப்டனுமா இல்ல மக்களுக்கும் எனக்கும் ரொம்ப பிடிச்ச மாதிரி சேதுனு கூப்டனுமா என்று பிக்பாஸ் கேள்வி கேட்க, சிரித்துக்கொண்டே பதிலளித்த விஜய் சேதுபதி என் பேர முழுசா கூப்டா ஷோ முடிஞ்சுடும் அதனால சேதுனே கூப்டுங்க என்று தெரிவித்தார்.

பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள காலிஃபிளவர்..!
உடலுக்கு ஊட்டச்சத்துகளை தாராளமாக தரும் புளி..
தூங்குவதற்கு முன் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள்
நாம் அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வதற்கான அறிகுறிகள்..!
Exit mobile version