Bigg Boss Tamil Season 8: இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவர்தானா? இணையத்தில் கசிந்த தகவல்

இந்த வாரத்திற்கான பிக்பாஸ் கேப்டனாக சத்யா தேர்வாகியுள்ளார். இந்த சீசனில் இந்த  வாரம் முதல் முறையாக ஓபன் நாமினேஷன் பிக்பாஸில் நடைப்பெற்றது. இதில் டைரக்ட் நாமினேஷன் பாஸ் வைத்திருந்த விஷால் பெண்கள் அணியில் இருந்து ஜாக்குலினை நாமினேட் செய்தார். சௌந்தர்யா ஆண்கள் அணியில் இருந்த விஷாலை நாமினேட் செய்தார். அதனைத் தொடர்ந்து நடந்த இந்தவார எவிக்‌ஷன் நாமினேஷனில் இடம் பிடித்தவர்கள் முத்துகுமரன், தீபக், அருண், ரஞ்சித், விஷால் ஆகிய ஐந்து பேர் ஆண்கள் அணியிலிருந்தும் ஜாக்குலின், பவித்ரா ஜனனி, ஆர்.ஜே.ஆனந்தி, அன்ஷிதா, சாச்சனா மற்றும் சுனிதா ஆகிய 6 பேர் பெண்கள் அணியில் இருந்தும் நாமினேட் ஆகியுள்ளனர்.

Bigg Boss Tamil Season 8: இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவர்தானா? இணையத்தில் கசிந்த தகவல்

பிக்பாஸ்

Published: 

10 Nov 2024 11:30 AM

பிக்பாஸ் தமிழ் சீசன் 8-ன் 5-வது வாரத்திற்கான எவிக்‌ஷனில் வீட்டை விட்டு யார் வெளியேறப்போகிறார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் இதுவரை தொகுத்து வழங்கி வந்துள்ளனர். கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் அவர் நிகழ்ச்சியை விட்டு விலகிய பிறகு தற்போது விஜய் சேதுபதி இந்த 8-வது சீசனை தொகுத்து வழங்குகிறார். விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த மாதம் 6-ம் தேதி பிக்பாஸ் தமிழ் 8-வது சீசன் தொடங்கியது.

கடந்த மாதம் 6-ம் தேதி பிக்பாஸ் தமிழ் 8-வது சீசன் தொடங்கியது.இதில், ரவீந்தர் சந்திரசேகர், அருண் பிரசாத், அன்ஷிதா, தீபக்,  தர்ஷிகா, தர்ஷா குப்தா, ஜாக்குலின், முத்துக்குமார்,  ஜெப்ரி, அர்னவ், ரஞ்சித், பவித்ரா ஜனனி, ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா,சுனிதா, செளந்தர்யா, வி.ஜே. விஷால் என 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.

முதல் வார நாமினேஷனில் இடம் பிடித்த ரவீந்தர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது வாரம் அர்னவ் மூன்றாவது வாரம் தர்ஷா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்த வாரத்திற்கான பிக்பாஸ் கேப்டனாக சத்யா தேர்வாகியுள்ளார். இந்த சீசனில் இந்த  வாரம் முதல் முறையாக ஓபன் நாமினேஷன் பிக்பாஸில் நடைப்பெற்றது. இதில் டைரக்ட் நாமினேஷன் பாஸ் வைத்திருந்த விஷால் பெண்கள் அணியில் இருந்து ஜாக்குலினை நாமினேட் செய்தார். சௌந்தர்யா ஆண்கள் அணியில் இருந்த விஷாலை நாமினேட் செய்தார்.

Also read… இணையத்தை கலக்கும் நடிகை ரம்யா பாண்டியனின் கல்யாண போட்டோஸ்

அதனைத் தொடர்ந்து நடந்த இந்தவார எவிக்‌ஷன் நாமினேஷனில் இடம் பிடித்தவர்கள் முத்துகுமரன், தீபக், அருண், ரஞ்சித், விஷால் ஆகிய ஐந்து பேர் ஆண்கள் அணியிலிருந்தும் ஜாக்குலின், பவித்ரா ஜனனி, ஆர்.ஜே.ஆனந்தி, அன்ஷிதா, சாச்சனா மற்றும் சுனிதா ஆகிய 6 பேர் பெண்கள் அணியில் இருந்தும் நாமினேட் ஆகியுள்ளனர்.

கடந்த வாரம் 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தனர். மேலும் மேலும் 6 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர் கடந்த ஞாயிறு அன்று. அதில் ரியா தியாகராஜன், சிவகுமார், ரானவ், மஞ்சரி, ராயன், வர்ஷினி ஆகியவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளனர். கடந்த வாரம் எவிக்‌ஷன் எதுவும் இல்லாததால் தற்போது பிக்பாஸ் வீட்டில் 21 போட்டியாளர்கள் உள்ளனர்.

Also read… ’தளபதி 69’ படப்பிடிப்பின் இடையே ராணுவ வீரர்களை சந்தித்த விஜய்!

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ரீ பாஸ்  டாஸ்கில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற ஆண்கள் அணியினர் வென்றனர். இந்த பாஸை வைத்து நாமினேஷனில் உள்ள ரஞ்சித்தை ஆண்கள் அணியினர் காப்பாற்றியுள்ளனர்.

மேலும் இந்த வாரம் நடைப்பெற்ற டாஸ்கில் தீபக் அடுத்த வாரத்திற்கான நேரடி நாமினேஷனில் இடம் பிடித்த நிலையில் வாரம் முழுவதும் சரியாக தெரியாத நபர்கள் என ஆண்கள் அணியில் இருந்து முத்துகுமரனும் பெண்கள் அணியில் இருந்து வரிஷினியும் தேர்வாகியுள்ள நிலையில் அடுத்த வாரத்திற்கான நேரடி நாமினேஷனில் அவர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று 5-வது வாரத்திற்கான எவிக்‌ஷனில் யார் வெளியேறப்போகிறார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது நாமினேஷனில் உள்ளவர்களில் ஆர்.ஜே.நந்தினி, சாச்சனா, சுனிதா ஆகியோர் குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். இந்த மூவரில் சுனிதா குறைவான வாக்குகள் பெற்று இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்தடுத்து டக் அவுட்.. மோசமான சாதனை படைத்த சாம்சன்..!
சர்க்கரை நோயை எப்போதும் கட்டுக்குள் வைக்க செய்ய வேண்டிய விஷயங்கள்..!
நீண்ட நேரம் கழிவறையில் அமர்வதால் ஏற்படும் உடல்நல கேடுகள்..!
ஹல்தி போட்டோஸை வெளியிட்ட ரம்யா பாண்டியன்