5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Bigg Boss Tamil Season 8: பேய்க்கும் பேய்க்கும் சண்ட… பிக்பாஸ் வீட்டில் நேரடியாக மோதிக்கொள்ளும் ஜாக்குலின் மற்றும் தர்ஷிகா

இந்த வாரத்திற்கான நாமினேஷன் ஃப்ரீ பாஸிற்காக பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு ஏஞ்சல் மற்றும் டெவில் என்று டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஏஞ்சல்ஸ் அணியில் 8 போட்டியாளர்களும் டெவில் அணியில் 9 போட்டியாளர்களும் உள்ளனர்.

Bigg Boss Tamil Season 8: பேய்க்கும் பேய்க்கும் சண்ட… பிக்பாஸ் வீட்டில் நேரடியாக மோதிக்கொள்ளும் ஜாக்குலின் மற்றும் தர்ஷிகா
பிக்பாஸ்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Dec 2024 10:41 AM

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இன்று 59-வது நாளிற்கான புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. இதில் டெவில் வேசத்தில் இருக்கும் ஜாக்குலின் மற்றும் தர்ஷிகா இடையே நேரடியாக சண்டை ஏற்படுவது வெளிப்படையாக தெரிந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 6-ம் தேதி பிக்பாஸ் தமிழ் 8-வது சீசன் தொடங்கியது. கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் அவர் நிகழ்ச்சியை விட்டு விலகினார். அதன் பிறகு தற்போது விஜய் சேதுபதி இந்த 8-வது சீசனை தொகுத்து வழங்குகிறார். கடந்த அக்டோபர் மாதம் 6-ம் தேதி இந்த சீசன் தொடங்கியது.

கடந்த 7 சீசன்களாக இல்லாத ஒன்றாக இந்த 8-வது சீசனில் பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு அணிகளாக விளையாடினர். இந்த சீசனில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருந்தது.

முன்னதாக 50 நாட்களாக இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடி ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினரை கடந்த 7-வது வாரம் முதல் ஒன்றாக்கி இனி பெண்கள் அணிகளுக்கு இடையே போட்டி இல்லை தனி நபர்களுக்கு இடையே போட்டி என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ரவீந்தர் சந்திரசேகர், அருண் பிரசாத், அன்ஷிதா, தீபக்,  தர்ஷிகா, தர்ஷா குப்தா, ஜாக்குலின், முத்துக்குமார்,  ஜெப்ரி, அர்னவ், ரஞ்சித், பவித்ரா ஜனனி, ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா,சுனிதா, செளந்தர்யா, வி.ஜே. விஷால் என 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.

மேலும் 6 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர் கடந்த 3-ம் தேதி அன்று. அதில் ரியா தியாகராஜன், சிவகுமார், ரானவ், மஞ்சரி, ரயான், வர்ஷினி ஆகியவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளனர். இதனால் போட்டியின் நிலவரம் சற்று சூடு பிடித்தது

முதல் வார நாமினேஷனில் இடம் பிடித்த ரவீந்தர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது வார நாமினேஷனில் இடம் பிடித்த அர்னவ் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

மூன்றாவது வாரம் தர்ஷாவும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். 4-வது வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எவிக்‌ஷன் இல்லை என்று விஜய் சேதுபதி அறிவித்தார். அதனை தொடர்ந்து 5-வது வாரம் சுனிதா குறைவான வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

Also read… அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டது படக்குழு

மேலும் கடந்த 6-வது வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்த ரியா தியாகராஜன் பிக்பாஸ் வீட்டை விட்டு எவிக்ட் ஆனார். இதனை தொடர்ந்து 7-வது வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வர்ஷினி வெளியேற்றப்பட்டார். கடந்த 8-வது வாரம் வைல்கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்த சிவக்குமார் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

9-வது வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக ஜெஃப்ரி தேர்வாகியுள்ளார். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் நடைப்பெற்றது. அதில், ஜாக்குலின், சௌந்தர்யா, மஞ்சரி, பவித்ரா ஜனனி, தர்ஷிகா, ஆனந்தி, சாச்சனா, ரயன், முத்துகுமரன், ரானவ், சத்யா மற்றும் ரஞ்சித் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். இதில் யார் வெளியேறுவார்கள் என்று இந்த வார இறுதியில் தெரியவரும்.

Also read… கடல் பாறையில் அமர்ந்து யோகா செய்த போது விபத்து.. உயிரிழந்த இளம் நடிகை!

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ஃப்ரீ பாஸிற்காக பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு ஏஞ்சல் மற்றும் டெவில் என்று டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஏஞ்சல்ஸ் அணியில் 8 போட்டியாளர்களும் டெவில் அணியில் 9 போட்டியாளர்களும் உள்ளனர்.

ஏஞ்சலாக இருப்பவரகளை அவர்களின் தன்மையை மாற்றி அவர்களை கோவப்படுத்தி அழ வைப்பதே டெவிலின் டாஸ்காக கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியான வீடியோவில் டெவிலாக இருக்கும் ஜாக்குலின் , சௌந்தர்யா இருவரும் தர்ஷிகாவிடம் சண்டையிடுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

சண்டையில் ஜாக்குலின் தவறாக பேச தர்ஷிகா இது உன் அப்பன் வீடு இல்லை என்று ஜாக்குலினிடம் கூற சண்டை பெரிதாக வெடித்துவிட்டது. வீட்டில் உள்ளவர்கள் அவர்களை கட்டுப்படுத்த முயன்ற போதும் அவர்கள் சண்டையை நிறுத்த தயாராக இல்லை என்பது அந்த வீடியோவில் வெளியாகியுள்ளது.

Latest News