5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

எதிர்பாராததை எதிர்பாருங்கள்… பிக் பாஸில் வரப்போகும் புது விஷயம்!

கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார் என்ற காரணத்திற்காகவே ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கத் தொடங்கினர். இப்போது கமல்ஹாசன் இல்லை எனும்போது, ரசிகர்கள் மத்தியில் அடுத்து யார் என்ற கேள்வி எழுந்தது. பிக்பாஸ் சீசன் 8ஐ விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார் என விஜய் டீவி தரப்பிலேயே தெரிவிக்கப்பட்டது. இதுமட்டும் இல்லாமல், வரும் அக்டோபர் 6ஆம் தேதியில் இருந்து பிக்பாஸ் சீசன் 8 தொடங்கவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்… பிக் பாஸில் வரப்போகும் புது விஷயம்!
பிக்பாஸ்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Sep 2024 09:33 AM

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வரும் 8-வது சீசனில் புது மாற்றம் செய்துள்ளது நிகழ்ச்சி குழு. விஜய் டிவியின் பிக்பாஸ்  நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் இதுவரை தொகுத்து வழங்கி வந்துள்ளனர். தமிழில் 7 சீசன்கள் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக 8-வது சீசனுக்கான தகவல்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். ஓடிடியில் வெளியான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார். தற்போது இந்த 8-வது சீசனை நடிகை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்களின் பார்வை மொத்தமும் நிகழ்ச்சி போட்டியாளர்களின் தேர்வு பட்டியலின் பக்கம் சென்றது. முதல் சீசனில் ஆரவ் கோப்பையை வென்றார், அதே சமயம் ரித்விகா இரண்டாவது சீசனில் பாடகர் மற்றும் நடிகர் முகேன் ராவ் மூன்றாவது சீசனையும், நடிகர்கள் ஆரி அர்ஜுனா மற்றும் ராஜு ஜெயமோகன் நான்காவது மற்றும் ஐந்தாவது சீசனில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். ஆறாவது மற்றும் ஏழாவது சீசனில் அசீம் மற்றும் அர்ச்சனா வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்கான வேலைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கிய நிலையில் கடந்த மாதம் நடிகர் கமல் ஹாசன் இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, “அன்பான பார்வையாளர்களே, 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பிக்பாஸ் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன்னதாகவே நான் ஏற்றுக்கொண்ட சில திரைப்பட பணிகள் காரணமாக, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நான் தற்பொழுது பிக் பாஸில் இருந்து விலகுகிறேன். ஆகவே எதிர்வரும் பிக் பாஸ் சீசனை நான் தொகுத்து வழங்க முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியின் மூலமாக என் மீது அன்பு மழை பொழிந்த எனது ரசிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார் என்ற காரணத்திற்காகவே ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கத் தொடங்கினர். இப்போது கமல்ஹாசன் இல்லை எனும்போது, ரசிகர்கள் மத்தியில் அடுத்து யார் என்ற கேள்வி எழுந்தது. பிக்பாஸ் சீசன் 8ஐ விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார் என விஜய் டீவி தரப்பிலேயே தெரிவிக்கப்பட்டது. இதுமட்டும் இல்லாமல், வரும் அக்டோபர் 6ஆம் தேதியில் இருந்து பிக்பாஸ் சீசன் 8 தொடங்கவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also read… ’Devara: Part 1′ Twitter Review: ஜூனியர் என்.டி.ஆரின் தேவாரா: பகுதி 1 படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

முந்தைய 6 சீசன்களின் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு போட்டிகள் வழங்கி சண்டை போட்டுக்கோங்க என்று நிகழ்ச்சி குழு விட்டுவிடும். ஆனால் இறுதியாக வெளியான 7-வது சீசனில் பிக்பாஸ் ஸ்மால் பாஸ் என வீட்டில் உள்ளவர்களை இரண்டு அணிகளாக பிரித்து நேரடியாகவே மோதிக்கொள்ள வழி செய்தது. இதனால் நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டாவது வாரங்களில் வரவேண்டிய சண்டைகள் கடந்த சீசனின் இரண்டாவது நாளே தொடங்கியது. அதே போல தற்போது வரும் 8-வது சீசனிலும் பிக்பாஸ் ஸ்மால் பாஸ் என்று வீடு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் குழு இந்த முறை போட்டியாளர்கள் தேர்வில் ரொம்பவே கவனத்துடன் செயல்படுகிறது என்றும் போட்டியாளர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். சினிமா, டிவி நட்சத்திரங்கள், சோஷியல் மீடியா  இன்ஃப் ளூயன்சர் எனப் பல தரப்பிலிருந்து சிலரது பெயர்கள் டிக் செய்யப்பட்டு சேனல் தரப்பு அவர்களை அணுகி வருவதாகச் சொல்லப்படுகிறது.

Also read… OTT Movies: கொட்டுக்காளி முதல் டிமாண்டி காலனி 2 வரை… இந்த வாரம் ஓடிடியில் என்ன பார்க்கலாம்

இந்நிலையில் இதற்கு முன் பிக் பாஸில் பங்கேற்ற போட்டியாளர்களை வைத்து விஜய் டிவி ஒரு புது விஷயத்தை செய்ய இருக்கிறது. முன்னாள் போட்டியாளர்கள் ஒருபக்கம், மக்கள் இன்னொரு பக்கம் என அமரவைத்து அவர்களுக்கு நடுவில் விவாதம் ஒன்றை நடத்த இருக்கிறது. தொடக்க நிகழ்ச்சியில் அந்த பகுதியும் ஒளிபரப்பாக இருக்கிறதாம். முந்தைய சீசன்களில் இல்லாத வகையில் இந்த முறை இப்படிக்கு ஒரு விஷயம் வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News