Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? இணையத்தில் கசிந்த தகவல்

இந்த 10-வது வாரத்திற்கான கேப்டனாக ரஞ்சித் தேர்வாகியுள்ள நிலையில் கடந்த வாரம் நடைப்பெற்ற எவிக்‌ஷன் ஃப்ரீ டாஸ்கில் மஞ்சரி வெற்றிப்பெற்றார். இதனால் இவர்களை இந்த வாரம் எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்யமுடியாது.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? இணையத்தில் கசிந்த தகவல்

பிக்பாஸ்

Published: 

14 Dec 2024 14:31 PM

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இந்த 10-வது வாரம் யார் வெளியேறப்போகிறார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. கடந்த அக்டோபர் மாதம் 6-ம் தேதி இந்த 8-வது சீசன் தொடங்கியது. அதன்படி கடந்த 7 சீசன்களில் இல்லாத ஒன்று இந்த 8-வது சீசனில் நடைப்பெற்றது.  பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டது. அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடினர். இந்த சீசனில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருந்தது. முன்னதாக 50 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடிய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் கடந்த 7-வது வாரம் முதல் ஒன்றாக்கி இனி ஆண்கள் பெண்கள் அணிகளுக்கு இடையே போட்டி இல்லை தனி நபர்களுக்கு இடையே போட்டி என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த 7 சீசன்களாக கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் அவர் நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார். அதன் பிறகு தற்போது நடிகர் விஜய் சேதுபதி இந்த 8-வது சீசனை தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் ரவீந்தர் சந்திரசேகர், அருண் பிரசாத், அன்ஷிதா, தீபக்,  தர்ஷிகா, தர்ஷா குப்தா, ஜாக்குலின், முத்துக்குமார்,  ஜெப்ரி, அர்னவ், ரஞ்சித், பவித்ரா ஜனனி, ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா,சுனிதா, செளந்தர்யா, வி.ஜே. விஷால் உட்பட 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.

ரவீந்தர் முதல் வாரம் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2-வது வார நாமினேஷனில் இடம் பிடித்த அர்னவ் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

மூன்றாவது வாரம் தர்ஷாவும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். கடந்த 4-வது வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எவிக்‌ஷன் இல்லை என்று நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி அறிவித்தார். அதனை தொடர்ந்து 5-வது வாரம் சுனிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

Also read… நடிகர் அல்லு அர்ஜூன் கைது ஏன்? பாய்ந்த வழக்குகள் என்னென்ன? போலீசார் சொன்ன விளக்கம்!

அதனை தொடர்ந்து 6 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர் கடந்த நவம்பர் 3-ம் தேதி அன்று. அதில் ரியா தியாகராஜன், சிவகுமார், ரானவ், மஞ்சரி, ரயான், வர்ஷினி ஆகியவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளனர். இதனால் போட்டியின் நிலவரம் சற்று சூடு பிடித்தது.

அதனை தொடர்ந்து கடந்த 6-வது வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்த ரியாபிக்பாஸ் வீட்டை விட்டு எவிக்ட் ஆனார். இதனை தொடர்ந்து கடந்த 7-வது வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வர்ஷினி வெளியேற்றப்பட்டார். கடந்த 8-வது வாரத்தில் வைல்கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்த சிவக்குமார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்றாக கடந்த 9-வது வாரம் வெள்ளிக்கிழமை தமிழ் நிகழ்ச்சியில் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு படம் போடப்பட்டது. சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான அமரன் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதனை பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒளிபரப்பினர்.

Also read… Kollywood Year Ender: 2024-ம் ஆண்டு ரசிகர்களை பெரிதும் கவராத படங்களின் லிஸ்ட் இதோ!

இந்த நிலையில் 9-வது வாரம் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் டபுள் எவிக்‌ஷன் நடைப்பெற்றது. அதில் ஆனந்தி மற்றும் சாச்சனா இருவரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் இந்த 10-வது வாரத்திற்கான கேப்டனாக ரஞ்சித் தேர்வாகியுள்ள நிலையில் கடந்த வாரம் நடைப்பெற்ற எவிக்‌ஷன் ஃப்ரீ டாஸ்கில் மஞ்சரி வெற்றிப்பெற்றார். இதனால் இவர்களை இந்த வாரம் எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்யமுடியாது.

இந்த வாரம் எவிக்‌ஷனுக்காக நாமினேட் ஆனவர்கள் சௌந்தர்யா, பவித்ரா, ஜாக்குலின், தர்ஷிகா, அன்ஷிதா, சத்யா, அருண், ரயன், விஷால் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். இதில் இருந்து இந்த வாரம் சத்யா வெளியேறுவார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் பருப்பு சாப்பிட வேண்டும் - உங்களுக்கு தெரியுமா?
பெண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் சில முக்கிய பழக்கங்கள்!
கிறிஸ்துமஸ் கொண்டாட சிறந்த இடங்கள்!
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தர வேண்டிய அறிவுரைகள்!