5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Bigg Boss 8 Live Streaming: ஆளும் புதுசு… ஆட்டமும் புதுசு… இன்று தொடங்குகிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 8!

முதல் சீசனில் ஆரவ் கோப்பையை வென்றார், அதே சமயம் ரித்விகா இரண்டாவது சீசனில் பாடகர் மற்றும் நடிகர் முகேன் ராவ் மூன்றாவது சீசனையும், நடிகர்கள் ஆரி அர்ஜுனா மற்றும் ராஜு ஜெயமோகன் நான்காவது மற்றும் ஐந்தாவது சீசனில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். ஆறாவது மற்றும் ஏழாவது சீசனில் அசீம் மற்றும் அர்ச்சனா வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

Bigg Boss 8 Live Streaming: ஆளும் புதுசு… ஆட்டமும் புதுசு… இன்று தொடங்குகிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 8!
பிக்பாஸ் தமிழ் சீசன் 8
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Oct 2024 14:46 PM

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இன்று தொடங்கப்படுகிறது. தொடர்ந்து 100 நாட்கள் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். விஜய் டிவியின் பிக்பாஸ்  நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் இதுவரை தொகுத்து வழங்கி வந்துள்ளனர். தமிழில் 7 சீசன்கள் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக 8-வது சீசன் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. முன்னதாக 7 சீசனை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். அவர் நிகழ்ச்சியை விட்டு விலகிய நிலையில் தற்போது இந்த 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்களின் பார்வை மொத்தமும் நிகழ்ச்சி போட்டியாளர்களின் தேர்வு பட்டியலின் பக்கம் சென்றது. முதல் சீசனில் ஆரவ் கோப்பையை வென்றார், அதே சமயம் ரித்விகா இரண்டாவது சீசனில் பாடகர் மற்றும் நடிகர் முகேன் ராவ் மூன்றாவது சீசனையும், நடிகர்கள் ஆரி அர்ஜுனா மற்றும் ராஜு ஜெயமோகன் நான்காவது மற்றும் ஐந்தாவது சீசனில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். ஆறாவது மற்றும் ஏழாவது சீசனில் அசீம் மற்றும் அர்ச்சனா வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

Also read… இந்த கியூட் பாப்பா கார்த்தி பட நடிகை… யார் தெரியுதா?

முந்தைய 6 சீசன்களின் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு போட்டிகள் வழங்கி சண்டை போட்டுக்கோங்க என்று நிகழ்ச்சி குழு விட்டுவிடும். ஆனால் இறுதியாக வெளியான 7-வது சீசனில் பிக்பாஸ் ஸ்மால் பாஸ் என வீட்டில் உள்ளவர்களை இரண்டு அணிகளாக பிரித்து நேரடியாகவே மோதிக்கொள்ள வழி செய்தது. இதனால் நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டாவது வாரங்களில் வரவேண்டிய சண்டைகள் கடந்த சீசனின் இரண்டாவது நாளே தொடங்கியது. முன்னதாக இருந்த சீசன்களை விட பல சர்ச்சைகளை சந்தித்தது 7-வது சீசன்.

Also read… கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்

இந்த நிலையில் சீசன் தொடங்குவதற்கு முன்னறே கமல் ஹாசன் இந்த சீசனை தான் தொகுத்து வழங்கப்போவது இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, “அன்பான பார்வையாளர்களே, 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பிக்பாஸ் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன்னதாகவே நான் ஏற்றுக்கொண்ட சில திரைப்பட பணிகள் காரணமாக, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நான் தற்பொழுது பிக் பாஸில் இருந்து விலகுகிறேன். ஆகவே எதிர்வரும் பிக் பாஸ் சீசனை நான் தொகுத்து வழங்க முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியின் மூலமாக என் மீது அன்பு மழை பொழிந்த எனது ரசிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்ளிடையே எதிர்பார்ப்பு நிழவிய நிலையில் அதனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார் என்று விஜய் தொலைக்காட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் நடைப்பெற்றது நிகழ்ச்சி குழு வெளியிட்ட ப்ரோமோ வீடியோவில் தெரிந்த நிலையில் இன்று பெறும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு ஒளிப்பரப்பாக உள்ளது.

Latest News