5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Bigg Boss Tamil House: பிக்பாஸ் வீட்டுக்கு நடுவில் கோடு… ஏதோ சூழ்ச்சி இருக்கு – விஜய் சேதுபதி!

Bigg Boss Tamil Season 8: வீட்டை திறந்து உள்ளே சென்ற விஜய் சேதுபதி வீட்டிற்கு நடுவே போடப்பட்டுள்ள பெரிய கோட்டைப் பார்த்து உரைந்து நின்றார். என்ன வீட்டுக்கு நடுவுள இவ்வளவு பெரிய கோடு. டிசைனுக்கு போட்ட மாதிரியே தெரியலையே என்று பேசிய அவர், இதுல ஏதோ சூழ்ச்சி இருக்குனு நினைக்கிறேன். இது வீட்டுக்குள்ள கேமா இல்ல வீட்டை வச்சு கேமா தெரியல என்று கூறினார்.

Bigg Boss Tamil House: பிக்பாஸ் வீட்டுக்கு நடுவில் கோடு… ஏதோ சூழ்ச்சி இருக்கு – விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதி
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Oct 2024 19:29 PM

பிக்காஸ் தமிழ் சீசன் 8-ல் ஏதோ சூழ்ச்சி இருக்கு என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் விஜய் சேதுபதி நுழையும் போது அவருக்கு விக்ரம் வேதா படத்தின் பாடல் போட்டு வரவேற்பு வழங்கப்பட்டது. அப்போது ஒலித்த பிக்பாஸின் குரல் விஜய குருநாத சேதுபதி இந்த பிக்பாஸ் சீசன் 8-ற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. இன்னொரு விஷயம், விஜய குருநாத சேதிபதின்ற இந்த பெயரை முழுமையா கூப்டனுமா இல்ல மக்களுக்கும் எனக்கும் ரொம்ப பிடிச்ச மாதிரி சேதுனு கூப்டனுமா என்று பிக்பாஸ் கேள்வி கேட்க, சிரித்துக்கொண்டே பதிலளித்த விஜய் சேதுபதி என் பேர முழுசா கூப்டா ஷோ முடிஞ்சுடும் அதனால சேதுனே கூப்டுங்க என்று தெரிவித்தார். பின்னர் வீட்டை பார்க்கலாமா என்று விஜய் சேதுபதி கேட்க நம்ம வீடு தாராலமா போய் பாருங்க என்று கூறி பிக்பாஸ் அனுப்பி வைத்தார்.

வீட்டிற்கு நடுவே கோடு:

வீட்டை திறந்து உள்ளே சென்ற விஜய் சேதுபதி வீட்டிற்கு நடுவே போடப்பட்டுள்ள பெரிய கோட்டைப் பார்த்து உரைந்து நின்றார். என்ன வீட்டுக்கு நடுவுள இவ்வளவு பெரிய கோடு. டிசைனுக்கு போட்ட மாதிரியே தெரியலையே என்று பேசிய அவர், இதுல ஏதோ சூழ்ச்சி இருக்குனு நினைக்கிறேன். இது வீட்டுக்குள்ள கேமா இல்ல வீட்டை வச்சு கேமா தெரியல என்று கூறினார். பச்சை மற்றும் ஆரஞ்ச் என பிரிந்த வீட்டிற்கு எந்த பக்கம் போக என்று யோசித்த அவர் முதலில் சோறு தான் முக்கியம் என்று ஆரஞ்ச் நிற ஏரியாவில் உள்ள கிச்சனுக்கு செல்கிறார்.

கிச்சன் ஏரியாவிற்கு சென்ற சேதுபதி கத்தியை கையில் எடுத்துக்கொண்டு பாதுகாப்பா விளையாடுவாங்கனு நம்புறேன் என்று கூறுகிறார். தொடந்து கிச்சனை சுற்றி பார்க்கையில் அங்கு உள்ள அலமாரிகளுக்கு பாதி கதவுகளில் டிசைனும் மீதி கதவுகள் டிசைன் இல்லாததையும் கவனித்த அவர் என்னமோ இருக்கு என்று கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த வீடு ரொம்ப அழகா இருக்கு. இந்த வீட்ல தாராலமா 100 நாட்கள் வாழலாம். ஆனா உங்க கூட வாழ்றவங்களோட புரிதல் பொருத்து இருக்கிறது. அபோது ஆரஞ்ச் ஏரியாவில் உள்ள பெட்ரூமை பார்த்த விஜய் சேதுபதி உள்ளே சென்று பார்கிறார். அங்கு இருந்த கட்டில் அனைத்தும் ஷேரிங் முறையில் உள்ளது. ஒரு கட்டிலில் இரண்டு அல்லது மூன்று நபர்கள் ஷேர் செய்துகொள்ளுபடி அமைக்கப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி பேசிய விஜய் சேதுபதி இங்க என்னமோ ஒன்னு இருக்கு, வீட்டுக்குள்ள வந்த நடுவுள கோடு இருக்கு, கிட்சன்ல டிசைன் பாதி கதவுல இருக்கு பாதி கதவுல இல்ல, இங்க பெட்ரூம் ஷேரிங்ல இருக்கு என்று குழப்பத்துடன் சிரிக்கிறார்.

அங்கு இருந்து பாத்ரூம் ஏரியாவிற்கு சென்ற விஜய் சேதுபதி இரண்டு பாத்ரூம் மட்டுமே இருப்பதை பார்த்து எப்படி இத்தனை பேருக்கு இது பத்தும் என்று அதிர்ச்சி அடைகிறார். அங்கே இருந்து எதிர்புரம் பச்சை நிற ஏரியாவை பார்க்கிறார். இந்த பச்சை மற்றும் ஆரஞ்ச் நிற பாத்ரூமிற்கு நடுவில் ஒரு ஓட்டை இருக்கிறது. அதைப் பற்றி பேசிய விஜய் சேதுபதி, ரூல்ஸ்னா சில சமையம் ஓட்டை விழுந்துடும்ல அந்த மாதி ஓட்டை என்று அதன் வழியாக ஆரஞ்ச் நிற பாத்ரூம் ஏரியாவில் இருந்து பச்சை நிற பாத்ரூம் ஏரியாவிற்குள் வருகிறார். அங்கு பார்த்தால் மிகவும் வசதியாக இருக்கிறது அந்த பாத்ரூம் ஏரியா. அங்கு பெட் போடப்பட்டுள்ளது. இன்னும் இந்த வீட்ல என்னெல்லாம் ஆச்சரியம் இருக்குனு தெரியல என்று அங்கு இருந்து வெளியே வருகிறார்.

அப்போது பச்சை நிற ஏரியாவிலும் ஒரு பெட்ரூம் இருக்கிறது. அங்கு உள்ள பெட் அனைத்தும் தனிதனியாக உள்ளது. அதைப் பார்த்த சேதுபதி இங்க என்ன எல்லாம் தனித்தனியா இருக்கு. எது கம்ஃபடபுள் தெரியலையே. நமக்கு எதுக்கு அவங்க பாத்துப்பாங்க என்று கூறிவிட்டு வீட்டில் உள்ள மற்ற ஏரியாக்களான கன்ஃபஷன் ரூம். லிவிங் ஏரியா ஆகியவற்றை பார்த்துவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்துவிடுகிறார். வீட்டின் நிறம் மற்றும் வீட்டுகு நடுவே கோடு இரண்டு வண்ணங்களாக வீடு பிரிந்துஇருப்பது மேலும் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.

Latest News