Sivakarthikeyan: ரஜினிகிட்ட நடக்கல.. அடுத்து விஜய்யா? – சிவகார்த்திகேயனை விமர்சித்த ப்ளூசட்டை மாறன்! - Tamil News | blue sattai maran criticized sivakarthikeyan for he try to took vijay's place in tamil cinema | TV9 Tamil

Sivakarthikeyan: ரஜினிகிட்ட நடக்கல.. அடுத்து விஜய்யா? – சிவகார்த்திகேயனை விமர்சித்த ப்ளூசட்டை மாறன்!

Updated On: 

25 Sep 2024 09:20 AM

Thalapathy Vijay: நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு காட்சியில் விஜய் சிவகார்த்திகேயனிடம் நான் போக வேண்டி இருக்கு என சொல்லி துப்பாக்கியை கையில் கொடுத்து விட்டு போவார். அப்போது சிவகார்த்திகேயன் விஜய்யை பார்த்து, உங்களுக்கு வேற முக்கியமான வேலை இருக்குன்னு தெரியுது. நீங்க அதைப் பாருங்க சார். இவங்களை நான் பார்த்துக்கிறேன்’ என வசனம் பேசுவார்.

Sivakarthikeyan: ரஜினிகிட்ட நடக்கல.. அடுத்து விஜய்யா? - சிவகார்த்திகேயனை விமர்சித்த ப்ளூசட்டை மாறன்!

கோப்பு புகைப்படம்

Follow Us On

சிவகார்த்திகேயன்: நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு காட்சியில் விஜய் சிவகார்த்திகேயனிடம் நான் போக வேண்டி இருக்கு என சொல்லி துப்பாக்கியை கையில் கொடுத்து விட்டு போவார். அப்போது சிவகார்த்திகேயன் விஜய்யை பார்த்து, உங்களுக்கு வேற முக்கியமான வேலை இருக்குன்னு தெரியுது. நீங்க அதைப் பாருங்க சார். இவங்களை நான் பார்த்துக்கிறேன்’ என வசனம் பேசுவார். இன்னும் ஒரு படத்துடன் அரசியல் கட்சி தொடங்கிய விஜய் சினிமாவில் இருந்து விலகவுள்ளார். அப்படியிருக்கும் நிலையில் எனக்கு பின்னால் சிவகார்த்திகேயன் தான் என்னுடைய இடத்தில் இருப்பார் என விஜய் சொல்லாமல் சொல்லியதாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Madurai: புத்தகத்திருவிழாவில் சாமி பாட்டு.. அருள் வந்து ஆடிய பள்ளி மாணவிகள்!

இப்படியான நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில் சிவகார்த்திகேயனை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, “நான் பாத்துக்கறேன் என்றால்? விஜய் இடத்திற்கு வரப்போகிறேன் என்கிறாரா? பலருக்கும் ரஜினி, விஜய் ஆக ஆசை. ஆனால் இந்த இடத்தை பிடிக்க ரஜினிக்கு சுமார் 50 ஆண்டுகளும், விஜய்க்கு 30 ஆண்டுகளும் ஆகியுள்ளது. காதல், குடும்பம், ஆக்சன், காமடி என பல்வேறு ஜானர்களில் மிகப்பெரிய வெற்றிப்படங்களை தந்தவர் விஜய். அதனால்தான் இத்தனை கோடி ரசிகர்கள். நீங்கள் முதலில் ரஜினியாக முயன்றீர்கள். அதனால்தான் ரஜினிமுருகன், கேடி பில்லா, வேலைக்காரன், மாவீரன் என டைட்டில் வைத்தீர்கள்.

இதையும் படிங்க: Tamilaga Vettri Kazhagam: த.வெ.க., மாநாடு.. இவர்களுக்கு அனுமதியில்லை.. விஜய் போட்ட உத்தரவு!

ஜெயிலரில் ரஜினியின் மகன் கேரக்டரில் நடிக்க கடுமையாக முயன்றீர்களாம். உங்கள் நெருங்கிய நண்பர் நெல்சன் சிபாரிசு செய்தும்.. தலைவர் நோ சொன்னதாக தகவல். Not official. ஒருவேளை படம் ஹிட்டானால் உங்களால்தான் ஓடியது என சொல்வார்கள் என்பதால் தலைவர் அலர்ட் ஆகி விட்டாராம். தலைவரை பின்பற்றினால் இந்த தலைமுறை ரசிகர்களை கவர இயலாது என்பதால் இப்போது விஜய் பக்கம் தாவியுள்ளீர்கள். நீங்கள் இதுவரை நடித்தவை காமடி படங்கள் மட்டுமே. சீரியஸ் முயற்சிகளான வேலைக்காரன், ஹீரோ போன்றவை ஓடவில்லை. எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித். இவர்களின் இடங்களை இனி யாரும் பிடிக்க முடியாது. இவர்களுக்கு உள்ள மாபெரும் ரசிகர் பட்டாளமும் இனி கிடைக்காது. விஜய் அரசியலுக்கு சென்றாலும்.‌. சினிமாவில் அவரது இடத்தை பிறர் பிடிக்க இயலாது. ஆகவே இருக்கும் இடத்தை தக்க வைத்து முன்னேறுவதே சாமர்த்தியம்” என ப்ளூ சட்டை மாறன் கருத்து தெரிவித்துள்ளார்.

நண்டில் இப்படி ஒரு விஷயம் இருக்கா? அறிந்திடாத மருத்துவ நன்மைகள்..!
மன அழுத்தம் குறைய வேண்டுமா? அப்போ இது ஒன்னே போதும்.
நடிகை ஹன்சிகா மோத்வானியின் ரீசென்ட் ஆல்பம்
அழகியே... மிருணாள் தாகூரின் அசத்தல் ஆல்பம்
Exit mobile version