ஒரு சீன் நடிப்பதற்கு “35 கோடி’ வாங்கிய பாலிவுட் நடிகர் யார் தெரியுமா..? - Tamil News | Bollywood Actor Charged 35 Crore Per Movie Acting Fees | TV9 Tamil

ஒரு சீன் நடிப்பதற்கு “35 கோடி’ வாங்கிய பாலிவுட் நடிகர் யார் தெரியுமா..?

Published: 

20 Sep 2024 10:03 AM

Bollywood : இந்திய சினிமா வட்டாரத்தில் பாலிவுட் சினிமா ஒரு தனியிடத்தைப் பிடித்துள்ளது. அங்குள்ள நடிகர்கள் ஒரு படத்துக்காக கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர். ஆனால் ஒருபடத்தில் கேமியோ ரோலில் நடிப்பதற்காக அதுவும் அப்படத்தின் வெறும் 8 நிமிட காட்சியில் நடிப்பதற்காக சுமார் 35 கோடி சம்பளம் வாங்கிய நடிகரைப் பற்றி தெரியுமா?

ஒரு சீன் நடிப்பதற்கு 35 கோடி வாங்கிய பாலிவுட் நடிகர் யார் தெரியுமா..?

கோப்பு புகைப்படம்

Follow Us On

திரைத்துறை முன்னணி நடிகர்கள் படத்திற்காக வாங்கும் சம்பளம் ரசிகர்களிடையே அடிக்கடி பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது பாலிவுட் நடிகர்களான சல்மான்கான், ஷாருக்கான் மற்றும் அமிதாப்பச்சன் போன்ற முன்னணி நடிகர்கள் பலர் ஒரு திரைப்படத்திற்காகப் பல கோடிகள் சம்பளம் வாங்குகின்றனர். சரி அவர்கள் முழுத் திரைப்படத்திற்காக  சம்பளம் வாங்கியுள்ளனர் . ஆனால் ஒருபடத்தில் கேமியோ ரோலில் நடிப்பதற்காக அதுவும் அப்படத்தில் வெறும் 8 நிமிட காட்சியில் நடிப்பதற்காக சுமார் 35 கோடி சம்பளம் வாங்கிய நடிகரைப் பற்றிப் பார்க்கலாம்..!

அஜய் தேவ்கன்:

இந்த நடிகர் வேறு யாரும் இல்லை பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் தான் நடிகர் அஜய் தேவ்கன். இவருடைய திரைப்படங்கள் என்றாலே பாலிவுட்டில் வெற்றி திரைப்படமாகத் தான் இருக்கும். அஜய் தேவ்கனின் உண்மையான பெயர் விஷால். 1991 இல் திரையுலகில் நுழைந்தபோது, ​​பல நடிகர்கள் விஷால் என்ற பெயரைக் கொண்டிருந்ததால் தனது விஷால் என்ற பெயரிலிருந்து “அஜய்” என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். நடிகர் அஜய் தேவ்கன் 1991ல் வெளியான ஆக்‌ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த திரைப்படமான ” ஃபூல் அவுர் காண்டேவில்” என்ற படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். இத்திரைப்படமானது அஜய்க்கு “சிறந்த ஆண் அறிமுகத்திற்கான பிலிம்பேர்”  விருதைப் பெற்றுத்தந்தது.

Also Read : மெய்யழகன் பட நிகழ்ச்சி.. நடிகை ஸ்ரீதிவ்யாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அவரது அடுத்த திரைப்படமான 1992ல் வெளியான “ஜிகர்” திரைப்படம் பாலிவுட் தற்காப்புக் கலையை மையமாகக் கொண்டு நடிகை கரிஷ்மா கபூர் உடன் நடித்த படமாகும் . இத்திரைப்படம் தீபாவளி வார இறுதியில் வெளியிடப்பட்டது. இப்படமானது பாக்ஸ் ஆபிஸில் ₹7 கோடி வசூலித்து அந்த ஆண்டின் ஏழாவது அதிக வசூல் ஈட்டிய படமாக அமைந்தது. 1992ல் “ஜிகர்”படத்தின் போது நடிகை கரிஷ்மா கபூருடன் தேவ்கனும் காதலித்து வந்தன.பின் 1995ல் இந்த காதல் ஜோடிகள் தங்களது காதலுக்கு முற்றுப் புள்ளி வைத்தனர். அதே ஆண்டில் வெளியான குண்டராஜ்படத்தில் இணைந்து நடித்தபோது, ​​நடிகை கஜோலுடன்தேவ்கன் நடித்துள்ளார் இத்திரைப்படத்திற்கு பிறகு இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர்.

பின் 1999ல் பிப்ரவரி 24 அன்று,  பாரம்பரிய மகாராஷ்டிர இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவ்வாறு நடிகர் அஜய் தேவ்கனின் வாழ்க்கை பாலிவுட் திரையுலகம் ஆரம்பித்தது. பின் நிறையத் திரைப்படங்கள் நடிகர் அஜய் தேவ்கனிற்கு வெற்றி திரைப்படமாகத்தான் அமைந்தது.

Also Read : ஓடிடியில் இருக்கும் சிறந்த டாப் 5 வெப் சீரிஸ் லிஸ்ட்!

தொடர் வெற்றிப் படங்களினால் தனது சம்பளத்தை அஜய் அதிகரித்துக் கொண்டார். கடந்த 2022ல் வெளியான “ஆர்ஆர்ஆர்” என்ற வெற்றி திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திலுள்ள சண்டைக் காட்சிகளில் பிரமாதமாக நடித்துள்ளார் நடிகர் அஜய் தேவ்கன். இந்த திரைப்படத்தில் நடிகர் அஜய் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான ராம் சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

Also Read : SIIMA Awards 2024: விருதைப் பெற்ற தென்னிந்திய திரைப்பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

இத்திரைப்படத்தில் நடிகர் ராம் சரணின் தந்தையாக நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ளார் . இந்த “ஆர்ஆர்ஆர்” நடித்த வெறும் 8 நிமிட காட்சிக்காக சுமார் 35 கோடியை இவர் வாங்கியுள்ளார். இப்படத்தில் நடித்ததற்குக் கணக்குப் போட்டுப் பார்த்தால் 1 நிமிடத்திற்கு சுமார் 4.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் நடிகர் அஜய் தேவ்கன். இவர் இப்படத்திற்கு மட்டுமில்லாமல் 2022ல் வெளியான “ருத்ரா’ என்ற வெப் சிரிஸில் நடிக்க சுமார் 125 கோடியை வாங்கி பாலிவுட் திரையுலகத்தையே ஆச்சரிய படச் செய்தார் இவர்.

இதன் தொடர்ச்சியாக 2024ல் இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடிப்பில் ‘சிங்கம்’ படத்தின் அடுத்த பாகமான ‘சிங்கம் அகெய்ன்’ வெளியாகவுள்ளது. இத்திரைப்படமானது இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் அர்ஜுன் கபூர், அக்‌ஷய் குமார், ரன்வீர்சிங், கரீனா கபூர், தீபிகா படுகோன் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது இந்த ஆண்டின் வெற்றிப்படமாக அஜய் தேவ்கனிற்கு அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Also Read : டான்ஸ் மாஸ்டர் ஜானி தெலுங்கு படங்களில் பணியாற்ற தற்காலிக தடை

உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
Exit mobile version