”கடத்தப்பட்டேன்.. சித்ரவதை செய்தார்கள்” பிரபல பாலிவுட் நடிகர் அதிர்ச்சி தகவல்!
Actor Mushtaq Khan Kidnapped : நான் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதாக பிரபல பாலிவுட் நடிகர் முஸ்தாக் கான் தெரிவித்துள்ளார். ஒரு நிகழ்விற்கு அழைக்கப்பட்டதாகக் கூறி என்னை கடத்தி, 12 மணி நேரம் சித்ரவதை செய்ததாக அவர் கூறியுள்ளார்.
நான் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதாக பிரபல பாலிவுட் நடிகர் முஸ்தாக் கான் தெரிவித்துள்ளார். ஒரு நிகழ்விற்கு அழைக்கப்பட்டதாகக் கூறி என்னை கடத்தி, 12 மணி நேரம் சித்ரவதை செய்ததாக அவர் கூறியுள்ளார். டெல்லி மீரட் நெடுச்சாலையில் ஒரு கும்பல் தன்னை கடத்தியதாக அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான வெல்கம் மற்றும் ஸ்த்ரீ 2 படங்களில் முஸ்தாக் கான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்தது என்ன?
புகாரின்படி, நவம்பர் 20 அன்று டெல்லி-மீரட் நெடுஞ்சாலையில் முஸ்தாக் கான் கடத்தப்பட்டுள்ளார். மீரட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் கடத்தப்பட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. முஷ்டாக் கானின் மேலாளர் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த நவம்பர் 20ஆம் தேதி முஸ்தான் கடத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக அவர் மும்பையில் இருந்து டெலிக்கு வந்துள்ளார். விமான டிக்கெட்டுகளுடன் ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டதாகவும், அவரது கணக்கிற்கு முன்கூட்டியே பணம் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் டெல்லி விமான நிலையத்தை அடைந்தபோது, அவரை ஒரு காரில் மீரட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் அவர் டெல்லியின் புறநகருக்கு அழைத்து சென்றபோது தான் கட்டத்தப்பட்டாக அவர் உணர்ந்திருக்கிறார். கடத்தல் காரர்கள் முஸ்தாக் கானை சுமார் 12 மணி நேரம் சித்ரவதை செய்துள்ளனர்.
Also Read : பிரதமர் மோடி வீடு முன்பு திரண்ட பாலிவுட் பிரபலங்கள்.. காரணம் இதுவா?
சிக்கியது எப்படி?
பணத்தை கேட்டு தொடர்ந்து சித்ரவதை செய்துள்ளனர். முதலில் அவர்கள் ரூ.1 கோடி கேட்டி மிரட்டி உள்ளனர். பின்னர் அவரிடம் இருந்து ரூ. 2 லட்சத்தை கடத்தல் கும்பல் பறித்துள்ளது. அவரை கடத்தி வைக்கப்பட்ட இடத்திற்கு அவருக்கு தொழுகை நடத்தும் சத்தம் கேட்டிருக்கிறது. இதனால் அருகில் ஒரு மசூதி இருப்பதை உணர்ந்த முஸ்தாக் கான், அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார்.
இதன் பிறகு தனது வீட்டிற்கு சென்று நடந்ததை கூறிய அவர், பிஜ்னோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சமீபத்தில், நகைச்சுவை நடிகர் சுனில் பால் தனியார் நிகழ்ச்சிக்காக ஹரித்வாருக்குச் சென்றபோது கடத்தப்பட்டுள்ளார்.
Also Read : டிவி 9 பத்திரிகையாளர் மீது நடிகர் மோகன் பாபு தாக்குதல்.. ஹைதராபாத்தில் பரபரப்பு
ரூ.20 லட்சம் ரூபாய் கேட்டு அவரை மர்ம கும்பல் கடத்தியதாக தகவல் வெளியானது. பின்னர், ரூ.8 லட்சத்தை கொடுத்த பிறகு சுனில் பால் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலீல், மீண்டும் பிரபல பாலிவுட் நடிகர் முஸ்தாக் கான் கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.