5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

எல்லாமே சென்னைதான்.. அம்மா ஸ்ரீதேவி குறித்து உருக்கமாக தமிழில் பேசிய ஜான்வி!

Actress Jaanvi Kapoor : பழைய திரைப்படங்களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் தான் நடிகை ஸ்ரீ தேவி. இவர் 1976 தமிழில் "மூன்று முடிச்சு" என்ற திரைப்படம் மூலம் நடிகையாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுடன் இணைந்தது நடித்துள்ளார். தற்போது இவரின் மகளான நடிகை ஜான்வி கபூர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது வெளியான "தேவரா" திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் தமிழில் பேசி அசத்தியுள்ளார்.

எல்லாமே சென்னைதான்.. அம்மா ஸ்ரீதேவி குறித்து உருக்கமாக தமிழில் பேசிய ஜான்வி!
ஜான்வி கபூர் ( கோப்பு படம்)
Follow Us
barath-murugantv9-com
Barath Murugan | Published: 19 Sep 2024 14:38 PM

“தேவாரா: பாகம் 1” என்ற திரைப்படம் இயக்குநர் “கொரடலா சிவா”  இயக்கத்தில்  உருவான தெலுங்கு திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் என்.டி.ஆர்.ஜூனியர், சைஃப் அலிகான் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோருடன் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு 2023 ஏப்ரல் 1ல் தொடங்கி ஆகஸ்ட் 2024ல் முடிக்கப்பட்டது. இத்திரைப்படம் தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ் ,ஹிந்தி மற்றும் மலையாளம் போன்ற பல மொழிகளில் வெளியாக உள்ளது.   இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத்  இசையமைத்துள்ளார்.தற்போது தேவாரா திரைப்படத்தில் “சுட்டமல்லே சுட்டமல்லே” என்ற பாடலும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் நடிகை ஜான்வி ஆடிய நடனம் மக்களிடையே சிறப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

Also Read : Today’s Cinema News: அஜித் மற்றும் விஜய் பட அப்டேட்கள்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள் – டாப் சினிமா செய்திகள்!

தமிழில் பேச்சு

தற்போது இத்திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது . அதில் நடிகர் என்.டி.ஆர்.ஜூனியர், சைஃப் அலிகான் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோரும் கலந்து கொண்டனர். இதில் நடிகை ஜான்வி தமிழில் பேசி அசத்தினார்.

அதில்  “என்னக்கு என்னுடைய அம்மாவுடனான அருமையான நினைவுகள் எல்லாம் எனக்குக் கிடைத்தது சென்னைல தான்” என்னுடைய அம்மாவுக்கு நீங்கக் கொடுத்த ஆதரவாள தான் நாங்க இன்னைக்கி இந்த நிலைமையில இருக்கிறோம் ” என் அம்மாவுக்குக் கொடுத்த ஆதரவை எனக்கும் கொடுங்கள் எனத்  தமிழில் சூப்பராக பேசி ரசிகர்களைக் கவர்ந்தார்.

இது மட்டுமில்லாமல் கூடிய சீக்கிரம் தமிழில் திரைப்படங்களிலும்  நடிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார் நடிகை ஜான்வி கபூர்.

ஸ்ரீ தேவி மகள் :

தமிழ்த்திரையுலகில் 80ஸ் மற்றும் 90ஸ் இல் பிரபலமான நடிகை ஸ்ரீ தேவி. இவர் தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம்  ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். 1969ல் “துணைவன்” என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகத்  தமிழில் நடிக்க ஆரம்பித்தார். பின் இயக்குநர் கே. பாலசந்திரன் இயக்கத்தில் வெளியான “மூன்று முடிச்சு”  என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பின் பல திரைப்படங்கள் இவருக்கு வெற்றியைத் தேடித்தந்தது. தமிழ் மட்டுமில்லாமல்  மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார். பின் 1996ல் நடிகை ஸ்ரீ தேவி திரைப்படத்தயாரிப்பாளர் போனி கபூரைத் திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஜான்வி மற்றும் குஷி  இரு மகள்கள் உள்ளனர். கடந்த 2018ல் நடிகை ஸ்ரீ தேவி துபாயில் ஒரு சொகுசு பங்களாவில் நீரில் மூழ்கி இறந்தார்.

Also Read : ’கோட்’ படத்தில் மட்ட பாடலுக்கு திரிஷாவுக்கு பதிலாக முதலில் தேர்வான நடிகை யார் தெரியுமா?

சினிமாவில் இவருக்கு பிறகு  அடுத்ததாகத் ஸ்ரீ தேவியின்  மகளான ஜான்வி கபூர் திரைப்படங்கள் நடிக்க ஆரம்பித்தார். ஆரம்ப கால கட்டத்தில் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின் நடிகை ஜான்வி  2018 இல் இஷான் கட்டருடன் இணைந்து நடித்த ஷஷாங்க் கைதான் இயக்கிய “காதல் தடக்”  என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

திரைப்படத்தில் அறிமுகமாகும் முன், கலிபோர்னியாவில் உள்ள லீ “ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் மற்றும் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில்” நடிப்புப் படிப்பை நடிகை ஜான்வி கபூர் முடித்துள்ளார்.

Also Read : டான்ஸ் மாஸ்டர் ஜானி தெலுங்கு படங்களில் பணியாற்ற தற்காலிக தடை

Latest News