Rashami Desai: 16 வயதில் நடந்த கசப்பான அனுபவம்.. பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்!

போஜ்புரி மொழி நடிகையாக ரசிகர்கள் மத்தியில் எண்ட்ரீ கொடுத்தவர் ராஷ்மி தேசாய். இவர் 2006ஆம் ஆண்டு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராவண் என்ற தொடரில் மண்டோதரி கேரக்டரில் நடித்ததன் மூலம் சின்னத்திரை உலகில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து உத்தரன் என்ற இந்தி தொடரில் நடித்ததன் மூலம் பாலிவுட் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் ராஷ்மி தேசாய்.

Rashami Desai: 16 வயதில் நடந்த கசப்பான அனுபவம்.. பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்!

கோப்பு புகைப்படம்

Published: 

12 Nov 2024 22:20 PM

நடிகை ராஷ்மி தேசாய்: இந்தியில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ராஷ்மி தேசாய் திரையுலகில் தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். போஜ்புரி மொழி நடிகையாக ரசிகர்கள் மத்தியில் எண்ட்ரீ கொடுத்தவர் ராஷ்மி தேசாய். இவர் 2006ஆம் ஆண்டு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராவண் என்ற தொடரில் மண்டோதரி கேரக்டரில் நடித்ததன் மூலம் சின்னத்திரை உலகில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து உத்தரன் என்ற இந்தி தொடரில் நடித்ததன் மூலம் பாலிவுட் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் ராஷ்மி தேசாய். அந்த தொடர் மூலம் அவருக்கு ஏராளமான விருதுகளும் கிடைத்தது. இதன்பின்னர் தில் ஸே தில் தக் என்ற தொடரிலும், ஜலக் திக்லா ஜா, கத்ரோன் கே கிலாடி ஆகிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு உத்தரன் தொடரில் தன்னுடன் நடித்த நந்திஸ் சந்து என்பவரை திருமணம் செய்து கொண்ட ராஸ்மி தேசாய் மனக்கசப்பு காரணமாக 2016 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். மேலும் 2012 ஆம் ஆண்டு சல்மான்கான் நடித்த தபாங் படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். தொடர்ச்சியாக சீரியல் மற்றும் ஓடிடி வெப் தொடர்களிலும் நடித்து வரும் ராஷ்மி தேசாய் ரசிகர்கள் அதிர்ச்சி அளிக்கும் வண்ணம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Also Read: Crime: சென்னை தி.நகரில் துணிகர சம்பவம்.. நகைகளை திருடிய பெண்!

தவறாக நடக்க முயன்ற நபர்

ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள அவர்,  “திரைப்பட ஒன்றின் ஆடிஷனுக்காக அழைத்திருந்த நிலையில் நான் சென்றிருந்தேன். அப்போது எனக்கு 16 வயது தான் நடந்து கொண்டிருந்தது. ஆடிஷனுக்கு வர சொன்ன இடத்தில் ஒரே ஒரு நபர் மட்டுமே இருந்தார். எனக்கு சற்று தயக்கமாக இருந்தது. அவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை. சிறிது நேரத்தில் நான் சுயநினைவின்றி மயக்கம் அடையும் நிலைக்கு சென்றேன். அந்த நேரத்தில் மிகவும் அசௌகரியமாக உணர்ந்த நான் அந்த இடத்திலிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என நினைத்து வெளியே வந்து விட்டேன்.

பின்னர் வீட்டுக்கு வந்து எனது அம்மாவிடம் எல்லாவற்றையும் பல மணி நேரம் கழித்து சொன்னேன். மறுநாள் நானும் என் அம்மாவும் அந்த நபரை சந்திக்க சென்றோம். என்னிடம் தவறாக நடக்க முயன்ற அந்த நபருக்கு பாடம் கற்பிக்க நினைத்த என்னுடைய அம்மா அவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். கண்டிப்பாக அந்த நபருக்கு அது வாழ்நாளில் மறக்க முடியாத தினமாக அமைந்திருக்கும் என நினைக்கிறேன். அந்த சம்பவம் இன்றும் நன்றாக எனக்கு நினைவிருக்கிறது. திரையுலகில் தவறான வழிநடத்தல், பாலியல் தொல்லை ஆகியவை உண்மையில் நடைபெறும் விஷயமாகும்.

Also Read: பள்ளி மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டப்பட்ட விவகாரம்..

ஒவ்வொரு துறையிலும் நல்லவர்கள் மற்றும் கெட்டவர்கள் இருப்பார்கள். திரையுலகில் நான் ஒரு நல்லஅனுபவத்தை பெற சில அற்புதமான நபர்களுடன் இணைந்து பணியாற்றியது கடவுள் எனக்கு அளித்த அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன். அந்த நிகழ்வு நடைபெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றும் நினைவில் இருக்கிறது. பல நேர்காணல்களில் அதைப் பற்றி பேசியுள்ளேன். அது சமூக வலைத்தளங்கள் முழுக்க செய்திகளாக பரவி இருக்கிறது என ராஷ்மி தேசாய் கூறியுள்ளார்.

திரைத்துறையில் தொடரும் புகார்கள்

திரைத்துறை மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்கள் மீதான பாலியல் ரீதியான தாக்குதல் என்பது தொடர்கதையாகி வருகிறது. சமீபகாலமாக இவை அனைத்தும் வெளிப்படையாக பேசப்படுகிறது. இதில் மிகவும் பிரபலமான துறை என்பதால் திரைத்துறையில் வைக்கப்படும் பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுகள் வெளிப்படையாக தெரிகிறது. குறிப்பாக மீ டூ அமைப்பு வந்த பிறகு ஆண் பிரபலங்கள் மீது பெண் பிரபலங்கள் வைக்கும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வண்ணம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட கேரள திரையுலகில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் ரீதியான தாக்குதல்கள், வன்கொடுமை சம்பவங்கள் குறித்து வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை மிகப்பெரிய அளவில் பரபரப்பு ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சைத்ரா ரெட்டி வீட்டில் விசேஷம்... வைரலாகும் போட்டோ
காலாவின் காதலி ஹூமாவின் நியூ ஆல்பம்
இந்திய குழந்தைகள் தினம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய சில டிப்ஸ்!