சென்னையில் வலம் வரும் பிரபாஸின் கல்கி ‘புஜ்ஜி’ கார்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Kalki 2898 AD movie: கல்கி படத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புஜ்ஜி கார் இன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக சாலைகளில் வலம் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. புஜ்ஜி காரை டோலிவுட் நடிகர் நாக சைதன்யா ஓட்டி பார்த்த நிலையில், அடுத்ததாக இந்தியாவின் எஃப் ஒன் கார் ரேசர் நரேன் கார்த்திக் இந்த காரை ஓட்டிப் பார்த்துள்ளார்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏ.டி’. இந்த நிலையில் மிகப்பெரிய பொருட்செலவில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடிக்கும் கல்கி திரைப்படம் முழு வீச்சில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கோலிவுட் நடிகர் பசுபதி, திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாகுபலி படங்களின் பிரம்மாண்ட வெற்றி தொடர்ந்து தெலுங்கு நடிகர் பிரபாஸ் பான் இந்தியா நட்சத்திரமாக மாறினார். பாகுபலி படத்திற்கு பின்னர் வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் தோல்வியை சந்தித்தன. அதன் பின்னர் வெளிவந்த ஆதிபுரூஷ் திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதனை தொடர்ந்து கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் திரைப்படம் பிரபாஸிற்கு ரசிகர்களிடையே கவனத்தை கொடுத்தது.
வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவாகிறது. அறிவியல் புனைவு திரைப்படமான இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் கதை 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை பேசுவதாக இயக்குநர் நாக் அஸ்வின் கூறியிருந்தார். படம் ரூ.600 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகிறது. ஒரே நேரத்தில் இந்தியிலும், தெலுங்கிலும் படமாக்கப்பட்டு வருகிறது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இதனை தொடர்ந்து முழுக்க முழுக்க இந்த திரைப்படம் டூன் என்ற திரைப்படத்தின் காப்பி என கூறி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து விஷ்ணு பகவானின் கடைசி அவதாரமான கல்கி அவதாரத்தை வித்தியாசமாக எடுக்கிறேன் என்ற பெயரில் ஏதோ ஹாலிவுட் திரைப்படத்தின் ரீமேக்கை எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
Also read… பாலிவுட்டில் ரீமேக்காகும் ‘பரியேறும் பெருமாள்’… ரிலீஸ் எப்போ தெரியுமா?
மகாபாரதக் கதையையும் விஷ்ணு பகவானின் பத்தாவது அவதாரமான கல்கி பட கதையையும் இணைத்து நாக அஸ்வின் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள கல்கி திரைப்படம் ஜூன் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.
இந்தப் படத்தில் வரும் முக்கிய அம்சமே ரோபோகார் புஜ்ஜி தான். அதன் பிரமிக்க வைக்கும் டிசைன் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்திய சினிமாவில் முதன்முறையாக, கல்கி 2898 AD படத்தில் இந்த சூப்பர் கார் புஜ்ஜி இடம்பெறும். இந்தக் காருக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார். படம் வெளிவர இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தற்போது புஜ்ஜியை வைத்து பட புரொமோஷன் பணிகளைத் தொடங்கியுள்ளனர் படக்குழு.
#Bujji, One of the SuperStar from Team #Kalki2898AD – Making an Huge Presence at the streets of CHENNAI 😍🥵🔥#ProjectK #Prabhas#Kalki2898ADonJune27 pic.twitter.com/zqGCn3Q10V
— Prabhas Network™ (@PrabhasNetwork_) May 29, 2024
கல்கி படத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புஜ்ஜி கார் இன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக சாலைகளில் வலம் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. புஜ்ஜி காரை டோலிவுட் நடிகர் நாக சைதன்யா ஓட்டி பார்த்த நிலையில், அடுத்ததாக இந்தியாவின் எஃப் ஒன் கார் ரேசர் நரேன் கார்த்திக் இந்த காரை ஓட்டிப் பார்த்துள்ளார். அதன் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி டிரெண்ட் ஆனது குறிப்பிடதக்கது.