நடிகர் விஜயின் கட்சி மாநாடு… குவியும் பிரபலங்களின் வாழ்த்துகள் - Tamil News | Celebrities wishes Actor Vijays tvk Maanadu | TV9 Tamil

நடிகர் விஜயின் கட்சி மாநாடு… குவியும் பிரபலங்களின் வாழ்த்துகள்

கடந்த ஆண்டு அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னதாகவே பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மற்றும் மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழாவை தொடங்கினார். அதே போல இந்த ஆண்டும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இது கல்வி சார்ந்ததாக உள்ள நிலையில் அடுத்ததாக அரசியல் மாநாடு பிரம்மாண்டமாக நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியானது.

நடிகர் விஜயின் கட்சி மாநாடு... குவியும் பிரபலங்களின் வாழ்த்துகள்

விஜய்

Updated On: 

27 Oct 2024 15:58 PM

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு இன்று முதல் முறையாக மாநாடு நடத்தும் நிலையில் அவருக்கு திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தனது கட்சி பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம்(Tamizhaga Vetri kazhagam) என்று அறிவித்தார். கட்சி பெயரில் எழுதுப் பிழை இருப்பதாக பலர் கருத்து தெரிவித்ததும் கட்சியின் பெயரினை, தமிழக வெற்றிக் கழகம் என மாற்றி அறிவித்தார்.  2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த சட்டசபைத் தேர்தல் நடைபெறும் 2026ம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார்.  அதனைத் தொடர்ந்து கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, கட்சி செயல்பாடுகள் என தொடர்ந்து வேலை செய்து வருகிறார் விஜய்.

கடந்த ஆண்டு அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னதாகவே பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மற்றும் மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழாவை தொடங்கினார். அதே போல இந்த ஆண்டும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இது கல்வி சார்ந்ததாக உள்ள நிலையில் அடுத்ததாக அரசியல் மாநாடு பிரம்மாண்டமாக நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் இன்று விஜய் விக்ரவாண்டியில் த்னது அரசியல் மாநாட்டை நடத்துகிறார். இதற்கு சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் விஜயின் அரசியல் மாநாட்டிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பப்பாளி சாப்பிட்டால் என்னாகும்?
தியானம் செய்வதால் இவ்வளவு பயன்களா?
சிம்பிளாக நடந்த நடிகை அஞ்சு குரியன் நிச்சயதார்த்தம்
உடலில் வைட்டமின் பி12 அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?