ஜெயம் ரவி -ஆர்த்தி விவாகரத்து வழக்கு… 1 மணி நேரம் விசாரணை!
கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார் நடிகர் ஜெயம் ரவி. இவர்களுக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது 15 வருட திருமண வாழ்க்கையில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் 1 மணி நேரம் நடைப்பெற்ற விசாரணையில் சமரச தீர்வு எதுவும் எட்டப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தனது அண்ணன் இயக்குநர் ராஜா இயக்கத்தில் உருவான ‘ஜெயம்’ என்ற படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் ரவி. இந்த படத்தில் நடித்ததை தொடர்ந்து தமிழ் ரசிகர்களால் ரவி ஜெயம் ரவி என அன்பாக அழைக்கப்பட்டார். அதன் பிறகு சினிமா வாழ்க்கையில் அதுவே இவரது பெயராகவும் பதிந்துவிட்டது. ஜெயம் படத்தைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் கோலிவுட் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார் ஜெயம் ரவி.
மேலும் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக தற்போது தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். இவரது முதல் படமான ஜெயம் படம் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான நிலையில், ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இவரது நடிப்பில் இதுவரை 32 படங்கள் வெளியாகியுள்ளது. தனது முதல் படத்தில் இருந்தே நடனம், நடிப்பு, காமெடி, சண்டை என அனைத்திலும் தொடர்ந்து பாரட்டுகளைப் பெற்று வரும் நடிகராக உள்ளார் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் இறுதியாக உருவன படம் பிரதர். இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து நட்டி, பூமிகா, சரண்யா பொன்வன்னன், தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ், விடிவி கணேஷ், கூல் சுரேஷ் என பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை இயக்குநர் ராஜேஷ் இயக்கியிருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.
இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார் நடிகர் ஜெயம் ரவி. இவர்களுக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது 15 வருட திருமண வாழ்க்கையில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Also read… தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து… இணையத்தில் கவனம்பெறும் வொண்டர்பார் நிறுவனத்தின் ஸ்டோரி!
இதையடுத்து ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், திருமணப் பந்தத்தில் இருந்து விலகவேண்டும் என்பது அவராகவே எடுத்தமுடிவு தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று கூறியிருந்தார். இந்த இருவரின் அறிக்கையை அடுத்து இணையத்தில் ஜெயம் ரவி குறித்தும் அவரை சுற்றி உள்ளவர்கள் குறித்தும் பல வதந்திகள் பரவத் தொடங்கியது. மேலும் நடிகர் ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷா பிரான்சிசுக்கும் பழக்கம் இருப்பதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளதாக இணையத்தில் வதந்தி பரவியது.
இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி 2009-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தங்களது திருமணத்தின் பதிவை ரத்து செய்து ஆர்த்தியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்கக்கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த 15-ம் தேதி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த விசாரணைக்கு நடிகர் ஜெயம் ரவி நேரிலும், ஆர்த்தி உடல்நிலை சரியில்லை என்று காணொலி காட்சி வாயிலாகவும் ஆஜராகி இருந்தனர்.
Also read… திருமணத்தை உறுதி செய்த கீர்த்தி சுரேஷ்… இணையத்தை கலக்கும் காதலர் போட்டோ!
இந்த வழக்கை விசாரித்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் தற்போது நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவருக்கும் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி சமரச தீர்வு மையத்தில் ஆஜராகிய நிலையில் இவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில் சமரச தீர்வு எதுவும் எட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 7-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.