Kanguva: திட்டமிட்டபடி கங்குவா ரிலீஸாகுமா? – சிக்கலில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்!

Suriya: நடிகர் சூர்யா கடைசியாக 2022 ஆம் ஆண்டு எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பிறகு விக்ரம் மற்றும் ராக்கெட்ரி ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக அவரது ரசிகர்கள் சூர்யா ஹீரோவாக நடிக்கும் கங்குவா படத்திற்காக காத்திருக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்பட 13 மொழிகளில் உருவாகியுள்ளது.

Kanguva: திட்டமிட்டபடி கங்குவா ரிலீஸாகுமா? - சிக்கலில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்!

கோப்பு புகைப்படம்

Published: 

11 Nov 2024 22:36 PM

கங்குவா: நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது. அண்ணாத்த படத்தை அடுத்து பிரபல இயக்குனரான சிறுத்தை சிவா நடிகர் சூர்யாவை வைத்து கங்குவா என்ற படத்தை இயக்கியுள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்தில் திஷா பதானி ஹீரோயினாக நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் பாபி தியோல், யோகி பாபு, கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார். ரெட்டின் கிங்ஸ்லி, ஜெகபதி பாபு, நட்டி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள கங்குவா படத்தில் நடிகர் கார்த்தி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்போடு காத்திருக்கும் சூர்யா ரசிகர்கள்

நடிகர் சூர்யா கடைசியாக 2022 ஆம் ஆண்டு எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பிறகு விக்ரம் மற்றும் ராக்கெட்ரி ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக அவரது ரசிகர்கள் சூர்யா ஹீரோவாக நடிக்கும் கங்குவா படத்திற்காக காத்திருக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்பட 13 மொழிகளில் உருவாகியுள்ளது.

Also Read: கிளைமேக்ஸ் காட்சி.. சுப்பிரமணியபுரம் ஷூட்டிங்கில் நடந்த சண்டை!

வரலாற்று ரீதியான புனைவு கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கங்குவா படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மிகச்சிறந்த கிராபிக்ஸ் காட்சிகளுடன் கூடிய ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில் இதனை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். மேலும் 3 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையாக இப்படத்திற்காக உழைத்துள்ள நடிகர் சூர்யாவுக்கு நீண்ட நாட்களாக காத்திருந்த வெற்றி வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கங்குவா படத்தின் ப்ரமோஷனுக்காக சூர்யா பம்பரமாக சுழன்று வரும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

சிக்கலில் ஸ்டூடியோ க்ரீன்

இதனிடையே நவம்பர் 13 ஆம் தேதிக்குள் ரூ.20 கோடியை உயர்நீதிமன்ற சொத்தாட்சியருக்கு செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி படம் ரிலீஸ் ஆகுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இப்படி ஒரு சிக்கல் படத்திற்கு எழுந்துள்ளதால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவர் பலரிடம் பணம் பெற்று அதனை திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கடனாக கொடுத்து வந்துள்ளார். அதில் நிதி இழப்பு ஏற்பட அவர் திவாலானவராக அறிவிக்கப்பட்டார். இப்படியான நிலையில் திடீரென அர்ஜுன் லால் காலமான நிலையில் அவரின் சொத்துக்கள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

அர்ஜுனால் சுந்தர் தாஸிடம் யாரெல்லாம் கடன் வாங்கினார்களோ அந்த தொகையை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவரிடம் ஸ்டூடியோகிரீன் பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான ஞானவேல்ராஜா கடந்த 2013 ஆம் ஆண்டு ரூ.10.35 கோடி கடன் வாங்கி இருந்தார். இந்த தொகையை வட்டியுடன் திருப்பி கேட்டு சொத்தாட்சியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Also Read: Kasthuri Shankar: சிக்கலில் நடிகை கஸ்தூரி.. 2 தனிப்படைகள் அமைப்பு.. கண்காணிப்பு தீவிரம்!

அதில் ஞானவேல் ராஜா 2013 ஆம் ஆண்டு வாங்கிய கடன் தொகையை 18% வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.26 .34 கோடி பணம் தர வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருந்த தங்கலான் படம் வெளியிடுவதற்கு முன் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.

அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி தங்கலான் படம் ரிலீஸாக இருந்த நிலையில் ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் ரூ.1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் அடுத்த படமான கங்குவாவை ரிலீஸ் செய்யும் முன் ரூ.1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.  அதுமட்டுமல்லாமல் பட வெளியீட்டுக்கு முன் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து அப்போது நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு கோடி செலுத்தியதால் தங்கலான் படம் திட்டமிட்டபடி எந்த தடையும் இல்லாமல் வெளியானது. இந்த நிலையில் கங்குவா படத்திற்கு அந்த கடன் தொகையால் சிக்கல் எழுந்துள்ளது.

இந்திய குழந்தைகள் தினம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய சில டிப்ஸ்!
உத்வேகம் அளிக்கும் நேருவின் பொன்மொழிகள்!
சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?