5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அல்லு அர்ஜுனை போனில் அழைத்து விசாரித்த முதல்வர் சந்திரபாபு

இந்த நிலையில் நேற்று அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். காலை முதலே அல்லு அர்ஜுனை பார்க்க திரையுலக அரசியல்வாதிகள் அவரது இல்லத்திற்கு சென்று வருகின்றனர்.

அல்லு அர்ஜுனை போனில் அழைத்து விசாரித்த முதல்வர் சந்திரபாபு
அல்லு அர்ஜுன், முதல்வர் சந்திரபாபு
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Dec 2024 20:37 PM

புஷ்பா 2 தி ரூல் படம் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் பிரீமியர் காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கிய பெண் உயிரிழந்த வழக்கில் நேற்று அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அரசியல் பிரபலங்கள் சினிமா பிரபலங்கள் என பலர் நடிகர் அல்லு அர்ஜுனை நேரில் தொலைபேசி வாயிலாகவும் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது முதல்வர் சந்திரபாபு நடிகர் அல்லு அர்ஜுனை தொலைபேசி வாயிலாக விசாரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா: தி ரைஸ்’. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார்.

புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் கூலித் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கும் அல்லு அர்ஜுனின் புஷ்பா கதாபாத்திரம் எப்படி ஒரு கடத்தல் கும்பலுக்கே தலைவனாக மாறுகிறார் என்பதுதான் படத்தின் ஒன்லைன். படத்தின் இடைவேளை வரை எங்கும் நிற்காமல் செல்லும். வழக்கமான ‘டான்’, ‘கேங்ஸ்டர்’ படங்களில் பார்த்த அதே கதைதான் என்றாலும் இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனின் நடிப்பும் மேனரிசமும் ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்தது.

வட மாநிலங்களில் இந்தப் படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. சமந்தாவின் நடனத்தில் வெளியான ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் பட்டி தொட்டி எங்கும் அதிர்ந்தது. சமந்தா, ஊ சொல்றியா பாடலுக்கு மட்டும் வந்து ஊ சொல்லிவிட்டுப் போகிறார்.

ஆரம்பத்திலேயே படம் நேரடியாக மையத்துக்குள் பயணிக்கத் தொடங்கி விடுகிறது. வேலை செய்ததுக்கு கூலி வாங்கும்போது கூலித் தொழிலாளியான புஷ்பா கால்மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் காட்சியிலேயே அந்த கதாப்பாத்திரத்தின் இயல்பு நமக்குச் சொல்லப்பட்டு விடுகிறது. படத்தின் இரண்டாம் பாதியில் பகத் பாசில் வருகிறார். அது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் துவக்கப் புள்ளியாக அமைகிறது.

இந்தப் படத்தின் முதல் பாகம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து, இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி ‘புஷ்பா 2 தி ரூல்’ எனப் பெயரிடப்பட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் கூலி தொழிலாளியாக இருந்த அல்லு அர்ஜூன் இரண்டாம் பாகத்தில் பெரிய கடத்தல் மன்னனாக காட்சியளிக்கிறார்.

இந்த நிலையில் படம் வெளியாவதற்கு முன்னர் ப்ரீ புக்கிங்கிலேயே 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக தகவல்கள் வெளியானது. தற்போது 1000 கோடிகளை கடந்து வசூலில் கலக்கி வருகிறது புஷ்பா 2 படம். அனல் பறக்கும் காட்சிகளுடன் திரையரங்குகளில் படம் வெளியானது. சுமார் 3 மணி நேரம் 25 நிமிடங்களை கொண்ட இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் கலவையான விமர்சனத்தை கூறுகின்றனர்.

சிலர் நீலம் அதிகம் என்கிறார்கள். சிலர் சீரியல் போல உள்ளது என்கிறார்கள். படத்தில் நடிகர்களின் நடிப்பு மிகையாக உள்ளது என்றும் சில காட்சிகள் வழிந்து திணிக்கப்பட்டுள்ளது என்றும் படம் பார்த்தவர்கள் விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் படத்தில் பிரீமியர் காட்சி கடந்த 5-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள பிரபல தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிலையில் படத்தைப் பார்க்க குடும்பத்துடன் வந்த ரேவதி என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த தியேட்டரில் சிறப்புக் காட்சியை ரசிகர்களுடன் இணைந்து பார்க்க நடிகர்கள் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா எந்தவித முன் ஏற்பாடுகள் இல்லாமலும் சென்றுள்ளனர்.

Also read… பூஜையுடன் தொடங்கியது ஜெயம் ரவியின் 34-வது படம்!

இதனால் இவர்கள் இருவரையும் பார்க்க ரசிகர்கள் கூட்டமாக குவிந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து நடிகர் அல்லு அர்ஜுன் வருத்தம் தெரிவித்தார். மேலும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் வழங்குவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில்  அந்த தியேட்டர் உரிமையாளர், மேலாளர் உள்பட 3 பேரை போலீசார் முன்னதாக கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். காலை முதலே அல்லு அர்ஜுனை பார்க்க திரையுலக அரசியல்வாதிகள் அவரது இல்லத்திற்கு சென்று வருகின்றனர்.

இதற்கிடையில் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் நடிகர்கள் அல்லு அர்ஜுனுடன் போனில் பேசி வருகின்றனர். நடிகர் ஜூனியர் என்டிஆர் ஏற்கனவே அல்லு அர்ஜுனிடம் போனில் பேசினார். சமீபத்தில் பிரபாஸ் அல்லு அர்ஜுனுக்கு போன் செய்து விசாரித்துள்ளார். தற்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு அல்லு அர்ஜுனுக்கு போன் செய்தார். சந்திரபாபு நேற்று அல்லு அரவிந்துக்கு போன் செய்து தைரியமாக இருக்குமாறு அறிவுரை கூறியதும் குறிப்பிடதக்கது.

Latest News