5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Sirish Bharadwaj: சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் திடீர் மரணம்!

சிரிஷ் முன்பு தெலுங்கின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா கொனிடேலாவை மணந்தார். பல வருடங்களாக முன்னாள் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்தது டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவர்களது திருமணத்தின் பின்னணியில் அரசியல் பிரமுகர்களின் சம்மந்தம் இருப்பதாகவும் அப்போது வதந்திகள் பரவின.

Sirish Bharadwaj: சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் திடீர் மரணம்!
சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் திடீர் மரணம்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Jun 2024 13:37 PM

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் சிரிஷ் பரத்வாஜ், ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சையில் இருந்தபோது இன்று காலை காலமானார். இருப்பினும், சிரிஷின் நெருங்கிய நண்பர்கள் சிலர் அவர் மாரடைப்பால் இறந்ததாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவரது மரணத்திற்கான காரணம் பற்றிய கூடுதல் விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. மிக இளம் வயதிலேயே ஷிரிஷ் பரத்வாஜ் இறந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிரிஷ் முன்பு தெலுங்கின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா கொனிடேலாவை மணந்தார். பல வருடங்களாக முன்னாள் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்தது டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவர்களது திருமணத்தின் பின்னணியில் அரசியல் பிரமுகர்களின் சம்மந்தம் இருப்பதாகவும் அப்போது வதந்திகள் பரவின.

எனினும் இவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்தனர். அதன் பிறகு ஸ்ரீஜா தனது தந்தை சிரஞ்சீவியுடன் வசித்து வருகிறார். சிரஞ்சீவி தனது மகளையும் பேத்தியையும் தனது அரவணைப்பில் பார்த்து வருகிறார்.

ஸ்ரீஜாவை விவாகரத்து செய்த பிறகு, சிரிஷ் வேறொரு பெண்ணை மறுமணம் செய்து தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். அடிப்படையில் வழக்கறிஞரான இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். இருப்பினும், அவர் அரசியலில் அதிகம் ஈடுபடாததால், அவரது அரசியல் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. விவாகரத்துக்குப் பிறகு, சிரிஷ் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் எளிமையான வாழ்க்கையை நடத்தினார், குறிப்பாக சிரஞ்சீவி குடும்பத்துடன் அமைதியான உறவைப் கொண்டு வந்துள்ளார்.

Also read… ஹெட்போன் உஷார்.. செவித்திறன் குறைபாடு குறித்து பிரபல பாடகி வேதனைப் பதிவு!

சிரிஷ் பரத்வாஜ் சில நாட்களாக நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிகிறது. இளம் வயதிலேயே அவரது அகால மரணம் அவரது நண்பர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Latest News