5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

டான்ஸ் மாஸ்டர் ஜானி தெலுங்கு படங்களில் பணியாற்ற தற்காலிக தடை

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு தெலுங்கிலும் அதே போல பாலியல் தொல்லைகள் அரங்கேறி வருவதாக நடிகை சமந்தா குரல் கொடுத்திருந்த நிலையில், ஜானி மாஸ்டர் மீது 21 வயது இளம் பெண் நடன இயக்குநர் பாலியல் தொல்லை புகார் அளித்துள்ளார். பிரபல நடன இயக்குநர் ஷேக் ஜானி பாஷா (ஜானி மாஸ்டர்) மீது தெலுங்கானா மாநிலம் சைபெராபாத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உடன் வேலை செய்த 21 வயது பெண் ராயதுர்கம் காவல் நிலையத்தில் ஜானி மீது பாலியல் வன்கொடுமை புகாரை அளித்தார்.

டான்ஸ் மாஸ்டர் ஜானி தெலுங்கு படங்களில் பணியாற்ற தற்காலிக தடை
டான்ஸ் மாஸ்டர் ஜானி
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Sep 2024 12:51 PM

பாலியல் புகாருக்கு உள்ளான திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டர், தெலுங்கு படங்களில் பணியாற்ற தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. 2009-ஆம் ஆண்டு முதல் தெலுங்கு படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார் ஜானி. இவர் நடிகர் தனுஷ் நடித்த மாரி – 2 படத்தில் வெளியான ரவுடி பேபி பாடல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதேபோல் விஜயின் ரஞ்சிதமே, தீ தளபதி, ஜாலியோ ஜிம்கானா, ஹல மித்தி ஹபி, தமன்னாவின் காவாலா பாடல்களுக்கும் நடன இயக்குநராக இருந்தவர் ஜானி. திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காதோ’ பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் நடன இயக்குநரான ஜானி மாஸ்டர். இவருடன் பணிப்புரிந்தபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 21 வயது இளம்பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளதன் காரணமாக தெலுங்கு படங்களில் ஜானி மாஸ்டர் பணியாற்ற தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல மலையாள சினிமா பிரபலங்கள் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில், பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஜானி, பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிக்கியுள்ளார். மலையாள சினிமா துறையில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகள் கேரள திரைத்துறையில் புயலைக் கிளப்பியுள்ளது. கேரளா மட்டுமல்லாமல் மற்ற திரையுலகிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக சில நடிகைகள் மட்டும் இன்றி சினிமாவில் மற்ற துறைகளில் பணிபுரியும் பெண்கள் அடுத்தடுத்து புகார்களை முன்வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ‘ஹலமதி ஹபிபோ’. வாரிசு படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே’ உள்ளிட்ட பாடல்களுக்கு கொரியோகிராஃபி செய்த பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானிக்கு எதிராக இளம் நடனக் கலைஞர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு தெலுங்கிலும் அதே போல பாலியல் தொல்லைகள் அரங்கேறி வருவதாக நடிகை சமந்தா குரல் கொடுத்திருந்த நிலையில், ஜானி மாஸ்டர் மீது 21 வயது இளம் பெண் நடன இயக்குநர் பாலியல் தொல்லை புகார் அளித்துள்ளார். பிரபல நடன இயக்குநர் ஷேக் ஜானி பாஷா (ஜானி மாஸ்டர்) மீது தெலுங்கானா மாநிலம் சைபெராபாத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உடன் வேலை செய்த 21 வயது பெண் ராயதுர்கம் காவல் நிலையத்தில் ஜானி மீது பாலியல் வன்கொடுமை புகாரை அளித்தார்.

2019ல் இவருடன் பணிப்புரிந்தபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 21 வயது இளம்பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளதார். அதன்பேரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் தெலங்கானா போலீசார் டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது வழக்கு பதிந்துள்ளனர். ஜானி மாஸ்டர் நடனக்குழுவில் பெண் நடனக் கலைஞராக இருந்த அந்த பாதிக்கப்பட்ட பெண் தற்போது தனியாக நடன இயக்குநராக படத்திற்கு நடனம் அமைத்து வருகிறார். 21 வயதான அவர் ஜானி மாஸ்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

Also read… CID Sakunthala Passed Away: பழம்பெரும் நடிகை சி.ஐ.டி சகுந்தலா காலமானார்… இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்

ஹைதராபாத் ராய்துர்கம் காவல் நிலையத்தில் இவர் ஜானி மாஸ்டர் மீது புகாரளித்துள்ளார். சென்னை , மும்பை , ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு படப்பிடிப்பிற்கு சென்றபோது ஜானி மாஸ்டர் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். குற்றம்சாட்டிய பெண் ஹைதராபத் நார்சிங்கி பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் இந்த புகாரை நார்சிங்கி காவதுறை விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து நார்சிங்கி காவல் துறையினர் ஜானி மாஸ்டர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் பாலியல் புகாருக்கு உள்ளான திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டர், தெலுங்கு படங்களில் பணியாற்ற தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

’மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது போல் தமிழகத்திலும் அமைக்கப்படும் என்று விஷால் கூறியதைத் தொடர்ந்து தென் இந்திய நடிகர் சங்கம் சார்பாக விசாகா கமிட்டி என்கிற குழு அமைக்கப்பட்டுள்ளது. நடிகை ரோகிணி இந்த அமைப்பிற்கு தலைமையாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Latest News