5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema Rewind: “மார்வெல்ஸ் படம் போலதான் பிளான்” இயக்குநர் ஷங்கர் சொன்ன விஷயம்

இயக்குநர் எஸ். ஷங்கர் என்றாலே நம்முடைய நினைவுக்கு வருவது அவரின் இயக்கத்தில் வெளியான பிரம்மாண்ட திரைப்படங்கள்தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களை வைத்து பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி பாலிவுட், டோலிவுட் எனப் பல மொழி திரைப்படங்களுக்குச் சவால் விடும் விதத்தில் திரைப்படங்களை உருவாக்கியவர். இந்நிலையில் "மார்வல்ஸ்"தொடர்கதை திரைப்படங்களைப் போல தானும் திரைப்படங்களை இணைக்க நினைத்தேன் என்று ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார்

Cinema Rewind: “மார்வெல்ஸ் படம் போலதான் பிளான்” இயக்குநர் ஷங்கர் சொன்ன விஷயம்
ஷங்கர்
barath-murugantv9-com
Barath Murugan | Published: 16 Oct 2024 20:18 PM

முதலில் நான் உருவாக்கிய படங்களை “மார்வல்ஸ் “தொடர்களைப் போல் தொடர்கதையாக இணைக்க நினைத்தேன் என இயக்குநர் ஷங்கர் கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  அந்த வீடியோவில் இயக்குநர் ஷங்கரிடம் தொகுப்பாளர் “நீங்க சங்கர் யூனிவர் பிளான் பண்ணிருந்திங்களா” என்று கேள்வி கேட்டிருப்பார் அதற்கு “ஆமாம்.. நா 2007ல் எந்திரம் திரைப்படம் எடுக்கும் போது நான் இயக்கிய முதல்வன், இந்தியன், சிவாஜி என மூன்று திரை கதாபாத்திரங்களும் சமூக பிரச்சனைக்காகப் போராடுவது போல ஒரே படத்தில் எடுக்கலாமா என்று என்னுடைய அசிஸ்ட்டண்ட் இயக்குநர்களிடம் கூறினேன் அதற்கு அவர்கள் என்னை காமெடியாக பார்த்துச் சிரித்தார்கள் என்றும் எனக்குப் பல யோசனைகள் வரும் அந்த விதத்தில் இதையும் அப்படியே விட்டு விட்டேன் அதற்கு பிறகு 2.3 ஆண்டுகள் கழித்து அவெஞ்சர்ஸ் முதல் பாகம் வெளியானது இதைப் பார்த்த நான் இந்த பிளானை முதலிலே பண்ணியிருக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்று அந்த நேர்காணலில் கூறியிருப்பார்.

பிரம்மாண்ட இயக்குநர்

தமிழ்த் திரைப்படங்களில் பிரபல நடிகர்கள், பெரிய பட்ஜெட் திரைப்படம் மற்றும் பிரம்மாண்ட வெளியிட்டு என்றாலே நம்முடைய நினைவிற்கு வருவது பிரபல இயக்குநர் சங்கர் தான். இவர் ஆரம்பத்தில் இந்தி மற்றும் தெலுங்கு போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். இவர் தமிழில் முதன்முதலாக 1993ல் வெளியான “ஜென்டில்மேன்” என்ற திரைப்படத்தைத் தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோனால் உடன் இணைந்து இத்திரைப்படத்தை இயக்கினார்.

அறிமுக இயக்குநராகத் தமிழில் அறிமுகமாகிய இவர் முதல் திரைப்படத்திலே வெற்றிகள் பெற்றார். இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன்,மதுபாலா, சுபா ஸ்ரீ மற்றும் நம்பியார் எனப் பல் பிரபலங்கள் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் சுமார் 175 நாட்களாகத் திரையரங்குகளில் ஓடியது. முதல் திரைப்படங்களை வெற்றி பெற்றதை ஒட்டி அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்க ஆரம்பித்தார்.

தொடர் வெற்றி

தொடர் வெற்றியை முன்னிட்டு அடுத்த திரைப்படங்களை இயக்க ஆரம்பித்த ஷங்கர். சமூக கருத்து, மக்களின் பிரச்சனைகள், அரசியல் போன்ற சமூகம் சார்ந்த திரைப்படங்களை இயக்க ஆரம்பித்தார். இவ்வாறு இவரின் இயக்கத்தில் 1996ல் வெளியான திரைப்படம்தான் இந்தியன் சமூகம், அரசியல் கருத்து மற்றும் ஆக்ஷன் போன்ற கலவையில் உருவாக்கிய திரைப்படமாக இது அமைந்துள்ளது.

தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் பிரபல நடிகர்களை நடிக்க வைத்த ஷங்கர் இந்தியன் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா,ஊர்மிளா சுகன்யா எனப் பல பிரபல நடிகர்களின் நடிப்பில் உருவாக்கினார். இந்த திரைப்படத்தில் நடிகர் கமல் அப்பாவாகவும், மற்றும் மகன் கதாபாத்திரத்தில் என இரு வேடங்களை நடித்தார். 15கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் சுமார் “65 கோடிகளுக்கு” மேல் வசூல் செய்து பிளாக் பாஸ்டர் திரைப்படமாக இவருக்கு அமைந்தது.

இதையும் படிங்க :Cinema Rewind : நான் சினிமாவில் நுழையக் காரணமே சுந்தர் சி தான்..! ஹிப் ஹாப் ஆதி சொன்ன விஷயம்..

இத்திரைப்படத்தைத் தொடர்ந்து ஜீன்ஸ், முதல்வன் பாய்ஸ் எனப் பல திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபல இயக்குநர்களை ஒருவராக ஆனார் ஷங்கர். இந்த திரைப்படங்களைத் தொடர்ந்து முதல் முதலில் தமிழ்த் திரைப்படங்களில் “சைக்கோ த்ரில்லர்” திரைப்படங்களை அறிமுகம் செய்தவர் இவர்தான் . 2005ல் வெளியான அந்நியன் என்ற திரைப்படத்தை ஷங்கர் இயக்கினார்.

பிரபல நடிகர் விக்ரம், சதா, விவேக் மற்றும் பிரகாஷ் ராஜ் போன்றவர்களின் நடிப்பில் பிளாக் பாஸ்டர் திரைப்படமாக இது அமைந்தது . இந்த திரைப்படத்தை விக்ரம் அந்நியன் மற்றும் அம்பி என இரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் .சமூக அக்கறையின்மை மற்றும் பொது அலட்சியம் அதிகரித்து வருவதைக் கண்டு விரக்தியடைந்து, அமைப்பை மேம்படுத்த முயற்சிக்கும் ஒரு பிளவுபட்ட ஆளுமைக்கு இட்டுச் செல்லும் ஏமாற்றமடைந்த ஒவ்வொரு மனிதனையும் மைய கருவாக கொண்டு இயக்கப்பட்ட இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரியளவு வெற்றியைக்கண்டு சுமார் 82கோடிகளுக்கு மேல் வசூல் செய்து அடுத்தடுத்த வெற்றிகளை இவருக்கு தந்தது.

இதையும் படிங்க :Cinema Rewind: என்னுடைய படைப்புகளுக்கு மூல காரணம் இயக்குநர் ராம் தான்… மாரிசெல்வராஜ் சொன்ன விஷயம்

ஆண்டுக்கு ஒரு திரைப்படம் என வெளியிட்ட அத்தனை திரைப்படங்களின் வெற்றியைக் கண்டார் சங்கர். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ மற்றும் எந்திரன் 2.0 போன்ற திரைப்படங்களை இயக்கி பல வெற்றிகளைப் பெற்றுள்ளார். இவரின் தொடர் வெற்றிக்குக் காரணமாக அமைவது பிரபல ஹீரோக்களும் மற்றும் இவரின் கதைகளும் தான் என மக்கள் கூறிவருகின்றனர். தற்போது இவரின் இயக்கத்தில் இந்தியன் 2 வெளியாகி மக்கள் மத்தியில் பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்தனர்.

இத்திரைப்படம் சுமார் 250 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில் பாக்ஸ் ஆபிசில் சுமார் 150 கோடிகளை மட்டும் வசூல் செய்து கடும் தோல்வியை ஷங்கருக்கு கொடுத்துள்ளது.

இதையும் படிங்க :Cinema Rewind: ஷங்கர பாத்து சூடு போட்டுகிட்ட கதைதான்… கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன விஷயம்

Latest News