Cinema Rewind: எம்டன் படத்தில் ஈரல் சீன் இப்படிதான் நடிச்சேன்… பரத் சொன்ன விஷயம் - Tamil News | cinema rewind actor bharath talks about Em Magan movie | TV9 Tamil

Cinema Rewind: எம்டன் படத்தில் ஈரல் சீன் இப்படிதான் நடிச்சேன்… பரத் சொன்ன விஷயம்

சின்னத்திரை இயக்குநர் திருமுருகனின் அழகான திரைக்கதை அதற்கு ஏற்ற நடிகர், நடிகைகள் இயக்கம் ஒரு அருமையான குடும்பப் படமாக எம்டன் படம் அமைந்தது. எம்டன் மகன் என்று பெயரிடப்பட்டதற்கு காரணம் தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்கிற காரணத்திற்காக எம் மகன் என்று பெயர் மாற்றப்பட்டது.

Cinema Rewind: எம்டன் படத்தில் ஈரல் சீன் இப்படிதான் நடிச்சேன்... பரத் சொன்ன விஷயம்

எம்டன்

Published: 

21 Oct 2024 18:14 PM

நடிகர் பரத் தான் நடித்த எம்டன் மகன் படத்தில் ஈரல் சாப்பிடும் காட்சி எப்படி எடுக்கப்பட்டது என்பது குறித்து முந்தைய பேட்டி ஒன்றில் கூறியது தற்போது வைரலாகி வருகின்றது. நடிகர் பரத் 1983 ஆம் ஆண்டு ஜுலை 21-ம் தேதி திருச்சியில் பிறந்தார். கடந்த 2003-ம் ஆண்டு ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் பரத். பின்னர் அவர் ஜெயராஜ் இயக்கிய மலையாள திரைப்படமான 4 தி பீப்பிள் (2004) படத்தின் நடித்தார். இது கேரளாவில் பிளாக்பஸ்டராக அமைந்தது. பின்னர், செல்லமே (2004) படத்தில் நெகட்டிவ் ரோலில் கலக்கினார். பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். பட்டியல், எம்டன் மகன், வெயில், பழனி, கண்டேன் காதலை, வானம், ஐந்து ஐந்து ஐந்து, காளிதாஸ் ஆகியவை இவரது பிற குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.

தனது தோழி ஜெஷ்லி என்பவரை 9 செப்டம்பர் 2013 அன்று சென்னையில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இந்த நிலையில் இவரது நடிப்பில் வெளியான எம்டன் மகன் படம் குறித்து நடிகர் பரத் முன்னதாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் பரத் நடிப்பில் உருவான எம்டன் மகன் திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இதில் கோபிகா, நாசர், சரண்யா பொன்வண்ணன் வடிவேலு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் இடம்பெற்றுள்ள காமெடி காட்சிகள் இன்னும் பலரது பேவரைட் லிஸ்டில் உள்ளது.

Also read… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்.. நோட்டீஸ் அனுப்பிய மருத்துவத்துறை!

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் எத்தனை ஆண்டுகளானாலும் ஆழமாக பதிந்த சீரியல்களின் வரிசையில் நிச்சயம் இடம்பெற்று இருக்கும் தொடர்கள் மெட்டி ஒலி மற்றும் நாதஸ்வரம். அந்த அளவுக்கு அந்த சீரியல்கள் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த தொடரை இயக்கியதோடு அதில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் திருமுருகன்.

சின்னத்திரை இயக்குநர் திருமுருகனின் அழகான திரைக்கதை அதற்கு ஏற்ற நடிகர், நடிகைகள் இயக்கம் ஒரு அருமையான குடும்பப் படமாக எம்டன் படம் அமைந்தது. எம்டன் மகன் என்று பெயரிடப்பட்டதற்கு காரணம் தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்கிற காரணத்திற்காக எம் மகன் என்று பெயர் மாற்றப்பட்டது. நடிகர் வடிவேலு கதாநாயகனை தாண்டி இப்படத்தில் குணச்சித்திர பாத்திரத்தில் நடித்து கலக்கியிருப்பார். நாசர் மற்றும் வடிவேலு ஆகிய இருவருக்கும் இடையேயான காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனாலேயே அந்த படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

Also read… OTT Movies: இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் கோலிவுட் படங்களின் லிஸ்ட் இதோ!

தந்தை – மகன் இடையே இருக்கும் உறவை அன்றாடம் அனைத்து குடும்பங்களில் காணப்படும்  சூழலை மிகவும் யதார்த்தமான வெளிப்படுத்தியது ‘எம் மகன்’ திரைப்படம். இப்படத்தில் நடித்த அத்தனை நடிகர்களுக்கும் மிக சிறப்பாக அந்த கேரக்டர்களாக வாழ்ந்து இருந்தனர். அதுவே படத்தின் வெற்றி உறுதி செய்தது. இந்தப் படத்தில் நாசர் தனது மகனான பரத்திற்கு ஈரல் ஊட்டும் காட்சி பெரும் ஹிட் அடித்தது. இது குறித்து பேசியிருந்த நடிகர் பரத் அந்த காட்சியை இயக்குநர் திருமுருகன் மிகவும் இயல்பாக எடுத்தார் என்று தெரிவித்தார். மேலும், அந்த படத்தில் நடித்தபோது இயக்குநர் திருமுருகன் நடிகர்களை அவர்களது போக்கில் விட்டு நடிக்க விட்டதாகவும் பரத் முன்னதாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்..?
முள்ளங்கியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?
கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 தள்ளுபடி!
சாத்துக்குடியில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?