”மனோரமாவிற்கு பிறகு இவங்கதான்” – சசிகுமார் புகழ்ந்த நடிகை யார் தெரியுமா? - Tamil News | Cinema Rewind Actor M. Sasikumar Talks About Actress Kovai Sarala | TV9 Tamil

”மனோரமாவிற்கு பிறகு இவங்கதான்” – சசிகுமார் புகழ்ந்த நடிகை யார் தெரியுமா?

பழைய திரைப்படங்களில் தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருந்ததோ அந்த அளவிற்குத் திரைப்படத்தில் நடிக்கும் நகைச்சுவை நடிகர்களுக்கும் அந்த அளவிற்கு முக்கியத்துவம் இருந்தது. அதில் முன்னணி காமெடி நடிகையாக இருந்தவர் நடிகை மனோரமா. இவர் தமிழில் சுமார் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார். பழைய திரைப்படங்களில் நகைச்சுவை என்றாலே மனோரமா என்றுதான் தமிழ் மக்கள் கூறுவது உண்டு. இந்நிலையில் நடிகரும் மற்றும் இயக்குநருமான சசிக்குமார் இவரைப் பற்றிக் கூறிய விஷயம் இணையத்தில் பரவி வருகிறது.

மனோரமாவிற்கு பிறகு இவங்கதான் - சசிகுமார் புகழ்ந்த நடிகை யார் தெரியுமா?

நடிகர் சசிகுமார்

Published: 

30 Oct 2024 09:57 AM

தமிழ்த் திரைப்படங்களில் நடிகை மனோரமாவின் நகைச்சுவைக்குப் பிறகு இருப்பது நடிகை கோவை சரளாதான் என்று பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குநராகவும் இருப்பவர் சசிகுமார். தமிழில் பல திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் இவரின் வித்தியாசமான நடிப்பு மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பைத் தந்தது. தனது இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இவர். அடுத்தடுத்து பல திரைப்படங்களை இயக்கியும் மற்றும் நடித்தும் இருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் மற்றும் ஈசன் போன்ற திரைப்படங்கள் இன்றுவரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் விரும்பி பார்க்கப்படும் திரைப்படங்களின் பட்டியலில் உள்ளது. தற்போது பல திரைப்படங்களில் முன்னணி நடிகராக வலம்வரும் இவர் தற்போது நந்தன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கோவை சரளா குறித்து பேசிய நடிகர் சசிகுமார் :

இவர் முன்னதாக ஒரு நேர்காணலில் நடிகை மனோரமாவை பற்றி ஒரு விஷயம் கூறியிருப்பார். அதில் அவர் தமிழ் திரைப்படங்களில் மனோரமா ஆச்சிக்குப் பிறகு கிடைத்த அருமையான காமெடி நடிகை கோவை சரளாதான் என்றும் இது வரை அவருக்குப் போட்டியாகத் தமிழ் சினிமாவில் ஏற்ற நடிகை இல்லை என்றும் அந்த நேர்காணலில் கூறியிருப்பார். தற்போது இவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திரை அறிமுகம் :

நடிகர் சசிகுமார் தனது 20வது வயது முதல் தனது மாமா கந்தசாமியின் திரைப்படங்களை உதவியாக இருந்த இவர் பின் 1999ல் இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான “சேது” என்ற திரைப்படத்தை உதவி இயக்குநராக அறிமுகமாகி தனது திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்தவர் நடிகர் சசிகுமார். இவர் இயக்குநர்கள் பாலா மற்றும் அமீர் போன்ற பிரபல இயக்குநர்களுடன் பல வருடங்களாக உதவி இயக்குநராக பணியாற்றிப் பல வெற்றி திரைப்படங்களைப் படைத்துள்ளார். இயக்குநர் அமீரிடம் இருக்கும் போது உதவி இயக்குநராக மௌனம் பேசியதே, ராம் மற்றும் பருத்தி வீரன் போன்ற திரைப்படங்களில் பணி புரிந்துள்ளார்.

ஆரம்பக்கட்டத்தில் உதவி இயக்குநராக இருந்த இவருக்குப் பருத்தி வீரன் என்ற திரைப்படத்தின் மூலமாக தானும் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற உந்துதல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சசிகுமார் இயக்கிய திரைப்படம் சுப்பிரமணிய புரம். இந்த திரைப்படமானது 2008ல் வெளியான மிகப் பிரபலமான திரைப்படமாகும் இப்படத்தை இயக்க மட்டும் இல்லாமல் இதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் பெரும் வெற்றியைத் தரவே பின் 2010ல் வெளியான ஈசன் என்ற திரைப்படத்தை இயக்கினார் அக்கா, தம்பி கதையை மையமாக வைத்து வெளியான திரைப்படம் இவருக்கு அந்த அளவிற்கும் வரவேற்புகளைத் தரவில்லை. இந்த திரைப்படத்திற்கு அடுத்து இயக்குநர் தொழில் ஒத்துவராது என எண்ணி முழுவதுமாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இதையும் படிங்க :Cinema Rewind: ‘பிரச்சனையைக் கண்டால் ஒதுங்கிடுவாங்க’ – நயன்தாரா குறித்து ஆச்சரியப்பட்ட நடிகை சரண்யா

நடிகராக அறிமுகம் :

இவர் 2009ல் வெளியான நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தமிழ் பிரபல இயக்குநரும் தற்போதைய நடிகருமான சமுத்திரக்கனி இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.இப்படத்தில் சசிகுமார், கஞ்சா கருப்பு, அனன்யா மற்றும் அபிநயா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அல்ல வரவேற்புகளைப் பெற்ற நிலையில் சசிகுமாருக்கு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்காக வாய்ப்புகள் தேடிவந்தன.

இவர் நடித்த நாடோடிகள் திரைப்படத்தின் தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்ட படமான “சம்போ சிவ சம்போ” என்ற திரைப்படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் . இதனைத் தொடர்ந்து இவர் போராளி , சுந்தரபாண்டிய புரம், தாரை தப்பட்டை போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வந்தார்.

இந்த திரைப்படங்களில் இவருக்கு சுந்தரபாண்டிய புரம் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக அமைந்தது. 2012ல் இயக்குநர் பிரபாகரன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தை நடிகர் சசிகுமார் தயாரித்திருந்தார். இப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி,இனிகோ பிரபாகரன், அப்புக்குட்டி மற்றும் லெட்சுமி மேனன் போன்ற தமிழ் பிரபல நடிகர்கள் நடித்திருந்தனர்.

கிராம திரைக்கதையை மையமாகக் கொண்டு இயக்கப்பட்ட இத்திரைப்படம் மக்கள் மத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சுந்தரபாண்டியன் திரைப்படத்தை அடுத்து நடித்த திரைப்படம் தாரை தப்பட்டை. 2015ல் இயக்குநர் பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி சரத்குமார், ஜி.எம்.குமார் மற்றும் சதீஸ் கெசிக் போன்றவர்களின் நடிப்பில் உருவாக்கியது. நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கை பற்றி வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் அந்த அளவிற்கு வரவேற்புகளைப் பெறாமல் இவருக்கு கடும் தோல்வியைக் கொடுத்து.

இதையும் படிங்க :“ரேவதினு கூப்பிட்டா திரும்பிக்கூடப் பார்க்கமாட்டேன்” – நடிகை ரேவதி சொன்ன விஷயம்…

இப்படத்தினை அடுத்து இவருக்குக் கம்பேக் கொடுக்கும் விதத்தில் அமைந்த திரைப்படம் வெற்றிவேல் . நகைச்சுவை மற்றும் காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கிய திரைப்படம் இது. 2016ல் இயக்குநர் வசந்த மணி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைக் கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து குட்டி புலி, கிடாரி, கொடி வீரன், நாடோடிகள் 2, உடன்பிறப்பே மற்றும் கருடன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க :Cinema Rewind: சினிமாவில் எனக்கு இந்த நடிகைகள் தான் பிடிக்கும்… த்ரிஷா சொன்ன விஷயம்!

பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டுவிட்டதா? இதை பண்ணுங்க
குக்கரில் இந்த உணவுகளை மட்டும் சமைக்காதீங்க
படுத்தவுடன் தூங்குவதற்கான டிப்ஸ்கள் - முயற்ச்சி செய்து பாருங்கள்!
ஆண்களை விட பெண்கள் அதிக நேரம் தூங்க வேண்டும் - ஏன் தெரியுமா?