Cinema Rewind: கமல் சாரின் பக்தன் நான்… நடிகர் மாதவன் சொன்ன விஷயம்

Kamal Haasan: தற்போது கமல் ஹாசன் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து சிம்பு, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி , அசோக் செல்வன் , ஜோஜு ஜார்ஜ் , அபிராமி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். தக் லைஃப் படம் வரும் 2025-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு இன்று அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. 

Cinema Rewind: கமல் சாரின் பக்தன் நான்... நடிகர் மாதவன் சொன்ன விஷயம்

நடிகர் மாதவன், கமல்

Published: 

07 Nov 2024 16:03 PM

கமல் சாரின் நண்பன் என்று சொல்வதை விட அவரின் பக்தன் நான் என்று நடிகர் மாதவன் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ரசிகர்களால் உலக நாயகன் என்று கொண்டாடப்படும் கமல் ஹாசன் இன்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சினிமா துறையில் 50 வருடங்களை கடந்தும் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் இருவருமே தங்களது மாஸ் குறையாமல் இளம் நடிகர்களுடன் போட்டிப் போட்டு தங்களது இடத்தை யாருக்கும் கொடுக்க மாட்டோம் என்று நடித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினி வரிசையாக படங்களில் நடித்து வருவது போல கமலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் 2 படம் வெளியானது. படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார் கமல் ஹாசன்.

1954-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி பரமக்குடியில் பிறந்தவர் தான் கமல் ஹாசன். தன்னுடைய 6 வயதில் கடந்த 1960-ம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார் கமல் ஹாசன். 6 வயதில் தொடங்கிய நடிப்பு தற்போது 70 வயது வரை தொடர்ந்து வருகிறார் கமல்.

குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்து இருந்தாலும் இயக்குநர் பாலசந்தர் இயக்கத்தில் கடத்த 1973-ம் ஆண்டு வெளியான அரங்கேற்றம் படத்தின் மூலம் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் கமல் ஹாசன். தொடர்ந்து தனது படங்களில் கதைக்கும் கதாப்பாத்திரத்திற்கும் முக்கியதுவம் அளிப்பார் கமல்.

படத்திற்கு படம் வித்யாசமான நடிப்பை வெளிபடுத்தும் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான மூன்று முடிச்சு, 16 வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள் படங்கள் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. 16 வயதினிலே படத்தில் சப்பானியாகவும், சிவப்பு ரோஜாக்கள் படத்தில் சைக்கோவாக நடித்து அசத்தியிருப்பார்.

Also read… Cinema Rewind: இந்திய திரையுலகில் மலையாள சினிமாதான் பெஸ்ட்… ஆண்ட்ரியா சொன்ன விஷயம்!

கமல் ஹாசன் இதுவரை சிறந்த திரைப்படத்தை தயாரித்ததற்காக ஒரு தேசிய விருதையும், சிறந்த நடிகருக்காக நான்கு தேசிய விருதுகளையும், 10 தமிழக அரசின் விருதுகளையும், 19 ஃபிலிம் ஃபார் விருதுகள், நான்கு ஆந்திர அரசின் நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார்.

நடிப்பது மட்டும் இன்றி தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முக கலைஞராக விளங்கும் நடிகர் கமல் ஹாசன் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் போன்ற மாநில அரசுகளின் விருதையும் பெற்றுள்ளார்.

சினிமாவில் முந்தைய காலத்தில் இருந்தே நடிகர்களிடையே போட்டி நிலவுவது வழக்கம். நடிகர்களுக்குள் இருக்கோ இல்லையோ அவர்களது ரசிகர்களுக்குள் அந்த போட்டி அதிகமாகவே இருந்தது. எம்.ஜி.ஆர் – சிவாஜி தொடங்கி, ரஜினி – கமல், அஜித் – விஜய், சிம்பு – தனுஷ் என இந்த போட்டி தொடந்து கொண்டே இருக்கிறது.

யார் சிறந்த நடிகர்கள் என்ற சண்டை நடிகர்களுக்குள் வருவதை விட யார் சிறந்த நடிகர்கள் என்ற சண்டை அவர்களின் ரசிகர்களிடையே தான் அதிகமாக காணப்பட்டது. இது ரஜினி மற்றும் கமல் இடையே தொடர்ந்து 50 ஆண்டுகளாக நடைப்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் தற்போது கமல் ஹாசன் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து சிம்பு, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி , அசோக் செல்வன் , ஜோஜு ஜார்ஜ் , அபிராமி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். தக் லைஃப் படம் வரும் 2025-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு இன்று அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன் 70-வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் மாதவன் முன்னதாக கமல் ஹாசன் குறித்து பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் தான் கமலின் மிகப் பெரிய ரசிகன் என்று கமலின் பக்தன் தான் என்றும் மாதவன் தெரிவித்துள்ளார்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!