5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema Rewind: மணிரத்னம் படத்தில் நடிக்காததற்குக் காரணம் இதுதான்.. நடிகர் மைக் மோகன் சொன்ன விஷயம்?

Actor Mic Mohan :தமிழ் சினிமாவில் 80களில் மிக பிரபல நடிகராக இருந்தவர் மைக் மோகன். இவர் 1979ம் ஆண்டு வெளியான "மூடு பனி" என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் 100க்கு மேற்பட்ட திரைப்படங்களில் முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார்.

Cinema Rewind: மணிரத்னம் படத்தில் நடிக்காததற்குக் காரணம் இதுதான்.. நடிகர் மைக் மோகன் சொன்ன விஷயம்?
நடிகர் மைக் மோகன் (Image: Wikipedia)
barath-murugan
Barath Murugan | Published: 16 Nov 2024 19:21 PM

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்த மைக் மோகன் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பாக 1977-ல் வெளியான “கோகிலா” என்ற கன்னட திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகினார். இந்த திரைப்படம் இவருக்கு வெற்றியைத் தரவே அடுத்தடுத்த திரைப்படங்களில் முன்னணி நடிகராக நடித்துவந்தார். தனது முதல் திரைப்படமான கோகிலாவில் பாடகராக நடித்து பிரபலமானதால் மோகன் என்ற பெயர் பின் இவருக்கு “மைக் மோகன்” மற்றும் “கோகிலா மோகன்” என்று மக்கள் அனைவரும் இவரை அன்போடு அழைக்க ஆரம்பித்தனர். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துவந்தார். தென்னிந்தியத் திரைப்படங்களில் முன்னணி நடிகராக இருந்த இவர் நெஞ்சைக் கிள்ளாதே, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை மற்றும் காற்றுக்கென்ன வேலி போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது திரைப்படங்களில் சிறப்புக் கதாபாத்திரமாகவும், வில்லன் போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடைசியாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவரும் நடிகர் மைக் மோகன் முன்னதாக அளித்திருந்த பேட்டி ஒன்றில் தான் எதற்காக இயக்குநர் மணிரத்னம் திரைப்படத்தில் நடிக்கவில்லை என்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

இதையும் படிங்க:‘தைரியம் கொடுத்த சமந்தாவின் அந்த கதாபாத்திரம்’: நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஓப்பன் டாக்!

மணிரத்னம் படத்தில் நடிக்காததற்கு இதுதான் காரணம்..

அந்த வீடியோவில் நடிகர் மைக் மோகனிடம் தொகுப்பாளர் “நீங்க மணிரத்னத்துடைய அஞ்சலியில் படத்தில் தந்தையாக நடிக்க மறுத்து உண்மையா என்ற கேள்விக்கு நடிகர் மைக் மோகன் “அதெல்லாம் காரணம் கிடையாது அந்த படத்தில் அஞ்சலி என்பது ஸ்பெஷல் குழந்தை என்றும் மணிரத்னம் அந்த கதையில் அந்த குழந்தையைத் தனியாக ஒரு அறையில் படுக்க வைத்துவிட்டு, சாதாரணமான குழந்தையை தன்னுடன் வைத்திருக்கும் அந்த திரைப்படத்தின் ஜானர் எனக்கு பிடிக்கவில்லை, இப்போது உள்ள காலத்தில் அனைவரும் புரிந்து கொள்வார்கள் , ஆனால் அப்போதைய காலத்தில் இது யாருக்கும் புரியாது. இதனால்தான் நடிக்க மறுத்தேன் என்றும் 2 குழந்தைக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மறுக்கவில்லை” என்றும் அந்த காணொலியில் கூறியிருப்பார்.

இதையும் படிங்க:தனுஷ் – நயன்தாரா இடையே என்னதான் பிரச்னை? திடீர் பரபரப்பான கோலிவுட்!

இயக்குநர் மணிரத்னத்தின் சினிமா பயணம்..!

தமிழ் திரைத்துறையில் மிகப் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கும் முன்னணி இயக்குநராக இருப்பவர் மணிரத்னம். தமிழ்த் திரைப்படங்களில் மணிரத்னம் என்று அறியப்பட்டாலும் இவரின் இயற்பெயர் “கோபால ரத்னம் சுப்பிரமணியம் ” ஆகும் பின் சினிமாவின் நுழைவின் காரணமாக இவரின் பெயரை மணிரத்னம் என்று மாற்றிக் கொண்டார். ஆரம்பக் காலத்தில் திரைப்படங்களின் மீது துளியும் ஆசையில்லாத மணிரத்னம் தந்து முதுகலை படிப்பிற்குப் பிறகு திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் கொண்டார்.

இந்நிலையில் இவர் இயக்கிய முதல் திரைப்படம் 1983ம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான “அனு பல்லவி”. இந்த திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய மணிரத்னம் அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்க ஆரம்பித்தார்.

இதையும் படிங்க:பாலிவுட் என்ன பாலிவுட்.. சீனாவில் மகாராஜா.. விஜய் சேதுபதிக்கு அடுத்த வெற்றி!

முதலில் இவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களைத் தோல்வியில் முடியவே இவருக்குத் தூணாக இருந்து பிரபலமாக்கிய திரைப்படம் 1981ம் ஆண்டு வெளியான “மௌன ராகம்”. இந்த திரைப்படம் இவருக்குத் தமிழ் ரசிகர்களிடையே மிகப் பிரம்மாண்ட வரவேற்பைத் தந்தது. வெற்றியினை தொடர்ந்தது நாயகன்,அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, மற்றும் ரோஜா போன்ற திரைப்படங்களை இயக்கி தமிழ் மக்களிடையே பிரபலமானார். தொடர்ந்து 80ஸ் டூ 90ஸ் காலகட்டத்தில் காதல் திரைப்படங்கள் என்றாலே மணிரத்னம் தான் என்று கூறும் அளவிற்கு புது புது ஜானரில் திரைப்படங்களை இயக்கி வரவேற்கப்பட்டார்.

உணர்ச்சிப் பூர்வமான இயக்குநர்..

மணிரத்னம் திரைப்படம் என்றாலே உணர்ச்சிப் பூர்வமான காட்சிகள் கண்டிப்பாக இடம்பெறுமென்றும் நம்மை மிகவும் உணர்ச்சிக்குளாகிய திரைப்படம் “கன்னத்தில் முத்தமிட்டால்”. 2002ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ், பி. எஸ். கீர்த்தனா மற்றும் பிரகாஷ் ராஜ் முன்னணி பிரபலங்கள் நடித்து அச்சத்திருந்தனர். தொடர்ந்து அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப பல திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவையே தன் கைவசம் வைத்திருந்தார். இவரின் இயக்கத்தில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுக் காவிய திரைப்படம் மிகவும் அருமையாக இருந்தது.

தொடர்ந்து திரைப்படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டிவரும் மணிரத்னம் தற்போது நடிகர்கள் கமல்ஹாசன் இயக்கத்தில் “தக் லைப்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். பல கோடி பட்ஜெட்டில் உருவாகிவரும் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த திரைப்படம் 2025ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:டோலிவுட்டில் நடிகையாக களமிறங்கும் அதிதி ஷங்கர்..! எந்த திரைப்படத்தில் தெரியுமா?

Latest News