5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema Rewind: ‘சரண்யா மீது காதல் வர இதுதான் காரணம்’.. பொன்வண்ணன் சொன்ன விஷயம்..

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், துணை நடிகராகவும் மிகவும் பிரபலமானவர் நடிகர் பொன்வண்ணனன். பல திரைப்படங்களில் அப்பாவாக, வில்லனாக எனப் பல வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆரம்ப காலத்தில் ஓவியராகத் தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் இயக்குநர் பாரதிராஜாவுடன் இணைந்து அவரின் திரைப்படங்களில் துணை இயக்குநராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றியவர்

Cinema Rewind: ‘சரண்யா மீது காதல் வர இதுதான் காரணம்’.. பொன்வண்ணன் சொன்ன விஷயம்..
நடிகர் பொன்வண்ணன்
barath-murugantv9-com
Barath Murugan | Published: 05 Nov 2024 16:17 PM

தமிழ்த் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து ஒரு இன்றியமையாதா நடிகராக இருப்பவர் நடிகர் பொன்வண்ணன். திரைப்படங்களில் வருவதற்கு முன் ஓவியராக பணியாற்றிய இவர் பாரதி ராஜாவின் திரைப்படங்களைத் துணை இயக்குநராக பணியாற்றி தாது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். பாரதிராஜாவிடம் இயக்குநராக பணியாற்றிய இவர் 1992ல் வெளியான அன்னை வாயல் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார். முதல் திரைப்படம் இவருக்கு அந்த அளவிற்கு வரவேற்புகளைத் தராவிட்டாலும் 2003ல் வெளியான “நதிக் கரையினிலே” என்ற திரைப்படம் இவருக்கு பெரும் வெற்றி திரைப்படமாக இருந்தது.

வெற்றியின் மூலம் அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்க ஆரம்பித்தவர் பின் பல திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் கருத்தம்மா, பசும்பொன்,கட்ட பஞ்சாயத்து மற்றும் கோமதி நாயகம் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். பின் நடிகை சரண்யாவைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர் முன்னதாக பேசிய வீடியோவில் நடிகை சரண்யாவை எவ்வாறு காதலித்தேன் என்று பேசியிருந்தார் அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க :”மனோரமாவிற்கு பிறகு இவங்கதான்” – சசிகுமார் புகழ்ந்த நடிகை யார் தெரியுமா?

நடிகை சரண்யா குறித்து பொன்வண்ணன் பேசியது..!

நடிகர் பொன்வண்ணன், சரண்யாவை ஒரு ஷீட்டிங் ஸ்பாட்டில் பார்த்ததாகவும் அவர் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் தரையில் அமர்ந்து தனது ஆடை வடிவமைப்பிற்காக டிசைன்ஸை வரைவார் என்றும் எனக்கும் ஓவியம் ரொம்ப பிடிக்கும் என்பதால் அவர் மீதும் எனக்கு மரியாதை ஏற்பட்டதாகவும் அந்த மரியாதை பின் காதலாக மாறி பின் எனக்கும் அவருக்குத் திருமணம் நடைபெற்றதாகவும் அந்த வீடியோவில் பேசியிருப்பார்.

இதையும் படிங்க :“ரேவதினு கூப்பிட்டா திரும்பிக்கூடப் பார்க்கமாட்டேன்” – நடிகை ரேவதி சொன்ன விஷயம்…

நடிகை சரண்யா பொண்வண்ணனின் சினிமா அறிமுகம்..!

தமிழ்த் திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரம் என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருபவர் நடிகை சரண்யா. இவர் 1987ம் ஆண்டு பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘நாயகன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினார். இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனிற்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார்.

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து என் ஜீவன் பாடுது, மனசுக்குள் மத்தாப்பு , சிகப்பு தாலி, மேளம் கொட்டு டாலி கட்டு போன்ற திரைப்படங்களில் நடித்தான் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானார். தமிழ்த் திரைப்படங்களைத் தொடர்ந்து மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு எனத் திரைப்படங்களில் நடித்த இவர் 1995ல் பிரபல நடிகரான பொன்வண்ணன் என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு முழுவதுமாக குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார்.

இதையும் படிங்க :Cinema Rewind: எம்டன் படத்தில் ஈரல் சீன் இப்படிதான் நடிச்சேன்… பரத் சொன்ன விஷயம்

அம்மாவாகப் பிரபலமான திரைப்படங்கள் …!

திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களுக்கு சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவேளை விட்ட இவர் பின் இயக்குநர் அமீர் இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளியான ராம் என்ற திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்தார் இவர். இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவாவிரற்கு அம்மாவாக நடித்துப் பிரபலமான இவருக்குத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரத்திற்கு இவர்தான் என மக்கள் மத்தியில் பிரபலமான இவருக்குத் தொடர்ந்து தவமாய் தவமிருந்து, எம்டன் மகன் மற்றும் களவாணி போன்ற திரைப்படங்களில் வித்தியாசமாக நடித்து தமிழ்த் திரைப்படங்களில் எல்லா நடிகர்களுக்கும் இனி இவர்கள் தான் அம்மா என்ற விதத்தில் மிகவும் பிரபலமானார்.

தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவருக்கு 2014ல் இயக்குநர் வேல்ராஜ் இயக்கத்தில் வெளியான வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் நடிகர் தனுஷிற்கு அம்மாவாக நடித்து அசத்தியிருப்பார். இந்த திரைப்படத்தில் நடித்தற்காக இவருக்குப் பல விருதுகளும் கிடைத்தது. தொடர்ந்து திரைப்படங்களை நடித்துவரும் இவர் தற்போது தனது ஆசை தொழிலாக பேஷன் டிசைனிங்கில் முழுமையாக இறங்கியுள்ளார். இதற்காகத் தனிப் பயிற்சி வகுப்புகளையும் நடத்திவருகிறார்.

இதையும் படிங்க :Cinema Rewind : நான் சினிமாவில் நுழையக் காரணமே சுந்தர் சி தான்..! ஹிப் ஹாப் ஆதி சொன்ன விஷயம்..

Latest News