5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema Rewind: கிளைமேக்ஸ் காட்சி.. சுப்பிரமணியபுரம் ஷூட்டிங்கில் நடந்த சண்டை!

Actor Sasikumar : தமிழ்த் திரைப்படங்களில் தனது நடிப்பினால் மிகவும் பிரபலமாவர் நடிகர் சசிகுமார். முதலில் உதவி இயக்குநராகத் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த இவர் தற்போது பிரபல நடிகராக இருந்து வருகிறார். சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் பிரபலமானார்.

Cinema Rewind: கிளைமேக்ஸ் காட்சி.. சுப்பிரமணியபுரம் ஷூட்டிங்கில் நடந்த சண்டை!
நடிகர் சசிகுமார்
barath-murugan
Barath Murugan | Published: 11 Nov 2024 20:50 PM

மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகர் சசிகுமார் ஆரம்பக்காலத்தில் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். 1999ம் ஆண்டு இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான “சேது” என்ற திரைப்படத்தின் மூலமாகத் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். தொடர்ந்து இயக்குநர் அமீரிடம் அறிமுகமாகி ‘மௌனம் பேசியதே மற்றும் ராம் போன்ற திரைப்படங்களிலும் பணியாற்றினார். இந்நிலையில் தொடர்ந்து திரைப்படங்களின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் 2008ல் வெளியான “சுப்ரமணியபுரம்” என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார். இவர் அந்த திரைப்படத்திலேயே முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார்.

நடிகர் ஜெய், ஸ்வாதி, சமுத்திரக்கனி மற்றும் கஞ்சா கறுப்பு போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் தமிழ் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்த திரைப்படத்தை இயக்கும்போது சசிகுமாருக்கும், நடிகை ஸ்வாதி ரெட்டிக்கும் படத்தின் க்ளைமாக்சின் போது பெரிய சண்டை ஏற்பட்டதாக ஒரு நேர்காணலில் கூறியிருப்பார். தற்போது அந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சசிகுமார் சொன்ன விஷயம்..

சசிகுமார் சுப்ரமணியபுரம் திரைப்படத்தை இயக்கும் போது நடிகை ஸ்வாதிக்குப் படத்தின் க்ளைமாக்ஸை முதலில் சொல்லவில்லை என்றும் படத்தின் க்ளைமாக்ஸை எடுப்பதற்கு ஒரு நாளுக்கு முன்தான் கூறியதாகவும் சொல்லிருப்பார். நடிகை ஸ்வாதி இந்த திரைப்படத்தில் நடிக்க ஆரம்பிக்கும் போதே இப்படத்தின் க்ளைமாக்ஸ் மகிழ்ச்சியாக முடிவடையும் தானே என்று கேட்டுக்கொண்டே இருந்தார். அதைப்போல் நானும் ஆமாம் ஆமாம் என்று கூறிக்கொண்டே இருப்பேன். அதைத் தொடர்ந்து ஒருநாள் படத்தில் க்ளைமாக்ஸை கூறியபோது பயங்கரமாக அழுதார். நானும் நான் சொல்லுற கதையை தான் கேட்டு அழுகிறார் என்று நினைத்தேன். பின் ரூமிற்கு சென்று என்னிடம் போன் செய்து சண்டையிட்டார். நான் இந்த பதில் நடிக்கும்போது இருந்தே  இறுதியில் மகிழ்ச்சியாக முடிவடையுமா என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன். இப்போது நீங்கள் என்னை முதுகில் குத்தும் கதாபாத்திரமாகக் காண்பித்தால் நான் என்ன செய்வது என்று அவரிடம் சண்டையிட்டதாக அந்த வீடியோவில் கூறியிருப்பார்.

இதையும் படிங்க :‘சரண்யா மீது காதல் வர இதுதான் காரணம்’.. பொன்வண்ணன் சொன்ன விஷயம்..

நடிகை ஸ்வாதி ரெட்டியின் அறிமுகம்..

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஸ்வாதி ரெட்டி. ஆரம்பத்தில் தெலுங்கு பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வாழ்க்கையை ஆரம்பித்த இவர் பின் சினிமாவில் அறிமுகமாகி தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பிரபல நடிகையாக இருந்து வந்தார். தெலுங்கு திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து திரைப்படங்களுக்கும் நுழைந்த இவர் 2008ம் ஆண்டு இயக்குநரும், நடிகருமான சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

முதல் திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய இவருக்குத் தமிழ் மக்களிடையே அதீத வரவேற்புகள் கிடைத்தது. சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்த இவருக்கு இந்த திரைப்படம் வெற்றியாக அமைந்தது. தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டிய இவர் அதே வருடத்தில் ‘அஷ்ட சம்மா’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாகத் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகினார்.

இதையும் படிங்க :NGK படத்தில் நடிக்கவே முடியல’ நடிகை சாய் பல்லவி சொன்ன விஷயம்..!

தொடர்ந்து தமிழில் கனிமொழி, போராளி, வடகறி மற்றும் யாக்கை போன்ற திரைப்படங்களில் நடித்தார். தமிழில் திரைப்படங்களில் நடித்தும் அந்த அளவிற்கு வரவேற்புகள் கிடைக்காததால் இவருக்குத் தெலுங்கு சினிமா இவருக்குக் கைகொடுத்தது. அதைத் தொடர்ந்து அங்கு சிறந்த கதாநாயகியாக வலம் வந்தார்.இவர் நடிகையாக மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடி இருக்கிறார். இதனையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு திரைப்படம் என திரைப்படங்களின் வருகை குறைந்த நிலையில் பின் 2018ம் ஆண்டு விகாஸ் வாசு என்ற கேரளாவைச் சேர்ந்த விமானியைத் திருமணம் செய்துகொண்டார்.

இதையும் படிங்க:கமல் சாரின் பக்தன் நான்… நடிகர் மாதவன் சொன்ன விஷயம்

இந்நிலையில் 2020 ஆண்டு இவர்கள் பிரிந்துவிட்டனர் என்ற தகவல்கள் வெளியாகிவந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக “நாங்கள் விவாகரத்து செய்யவில்லை ” என்று வெளியாகி வந்த சலசலப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார். திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதைக் குறைந்து கொண்ட இவர் இறுதியாக 2023ம் ஆண்டு மது மாதம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Latest News