5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema Rewind: இந்த இயக்குநர்களுத்தான் நான் அதிகம் நன்றி சொல்லனும்… நடிகர் சத்யராஜ் சொன்ன விஷயம்

தமிழ் மொழியை தொடர்ந்து, தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்டமாக வெளிவந்த 'பாகுபலி' படத்தில் "கட்டப்பா" என்ற கதாபாத்திரத்தில் அவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'கூலி' படத்தில் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

Cinema Rewind: இந்த இயக்குநர்களுத்தான் நான் அதிகம் நன்றி சொல்லனும்… நடிகர் சத்யராஜ் சொன்ன விஷயம்
சத்யராஜ்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Oct 2024 15:36 PM

இப்போ இருக்கிற இளம் இயக்குநர்களுக்கு நான் எந்த அளவுக்கு நன்றி சொல்லனுமோ அதவிட அதிகமாக பாரதிராஜா, மணிவண்ணன், பி.வாசு, பாசில் போன்ற இயக்குநர்களுகு நன்றிகள் சொல்லவேண்டும் என்று நடிகர் சத்யராஜ் முன்னதாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சத்யராஜ் ஒரு படத்தில் இருக்கின்றார் என்றால் அந்தப் படத்தில் சத்யராஜ் டச் உடன் சில காட்சிகள் இருக்கும். அப்படியான காட்சிகளுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் இப்போதுவரை நல்ல வரவேற்பு உள்ளது. தனது சினிமாக்களில் தனது நக்கலான நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர்களை இப்போதுவரை தக்கவைத்துக்கொண்டுள்ளார். ‘சட்டம் என் கையில்’ என்ற திரைப்படத்தில் சிறிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிய சத்யராஜ் பின் நாட்களில் வில்லன் கதாபாத்திரத்திலேயே தனக்கென ஒரு நடிப்புபாணியை ஏற்படுத்தும் அளவுக்கு தன் திறமையை வெளிப்படுத்தினார்.

கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவரும் மக்கள் திலகம் எம்ஜிஆரின் தீவிர ரசிகருமான ரங்கராஜ், நடிகராகும் கனவுகளுடன் 1976இல் சென்னைக்கு வந்தார். அப்போது முன்னணி நட்சத்திர நடிகராக இருந்த சிவகுமார், திரைப்படத் தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவகுமார் இருவரையும் வழிகாட்டியாகக் கொண்டு திரைத் துறையில் வாய்ப்புகளைத் தேடினார் ரங்கராஜ். சினிமாவுக்காக தன் பெயரை சத்யராஜ் என்று மாற்றிக்கொண்டு 1978-ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘சட்டம் என் கையில்’ படத்தில் நடிகராக அறிமுகமானார்.

இந்த 45 ஆண்டுகளில்  தெலுங்கு, மலையாளம் , தமிழ்  என அனைத்து மொழிகளிலும் மொத்தம் 240க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சத்யராஜ் நடித்துள்ளார் .  வில்லன் , ஹீரோ, காமெடி, தயாரிப்பாளர்  என பன்முகத்தன்மையை தொடர்ந்து வெளிப்படுத்தி தனக்கென திரைத்துறையில் தனி இடத்தைப் பிடித்தார்.

மணிவண்ணன் இயக்கத்தில் அமாவாசையாக சத்யராஜ் கலக்கிய அமைதிப்படை திரைப்படம் அவருக்கு காலத்துக்கும் பெயர் சொல்லும் படமாக அமைந்தது. வில்லத்தனத்தாலும், அரசியல்வாதிகளின் வளர்ச்சியை பகடி செய்தும் திரையில் பிரதிபலித்த சத்யராஜ் அப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகியும் இந்த கேரக்டரில் ரசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறார்.

Also read… வேட்டையன் படத்திற்கு எதிரான வழக்கு… மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஒரு நடிகராக தன்னுடைய 125-ம் படத்தை சத்யராஜ் எழுதி இயக்கவும் செய்தார். ‘வில்லாதி வில்லன்’ என்று தலைப்பிடப்பட்ட அந்தப் படத்தில் சத்யராஜ் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றாலும் ஏனோ அதன் பிறகு சத்யராஜ் ஒரு படத்தைக்கூட இதுவரை இயக்கியதில்லை.

ஹீரோ, வில்லன் என ஆரம்பகாலத்தில் கலக்கிய நடிகர் சத்யராஜ், தற்போது குணச்சித்திர ரோல்களில் மட்டும் நடித்து வருகிறார். இவர் தமிழில் நடிகன், தாய் மாமன், மாமன் மகள், மலபார் போலீஸ், புது மனிதன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களிலும் குறிப்பிடத்தக்கத் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார். தமிழில் ‘நண்பன்’ படத்தில் கண்டிப்பு மிக்க கல்லூரி முதல்வராக அவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. பொதுவாக ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். நடிகர் சத்யராஜுக்கு ஸ்டைலே அப்பிராணிபோல இருந்து கலாய்ப்பது தான். இவரது படங்களில் காமெடி மிக முக்கிய அம்சமாக இருக்கும்.

Also read… சமந்தா விவாகரத்தில் அமைச்சரின் கருத்து… கொந்தளித்த பிரபலங்கள்

தமிழ் மொழியை தொடர்ந்து, தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்டமாக வெளிவந்த ‘பாகுபலி’ படத்தில் “கட்டப்பா” என்ற கதாபாத்திரத்தில் அவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘கூலி’ படத்தில் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று தனது 70 – வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் சத்யராஜ் கொண்டாடுகிறார். இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் முன்னதாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் தற்போது இருக்கும் இயக்குநர்களுக்கு எந்த அளவிற்கு நன்றி சொல்ல வேண்டுமோ அதைவிட அதிகமாக பாரதிராஜா, மணிவண்ணன், பி.வாசு, பாசில் போன்ற இயக்குநர்களுகு நன்றிகள் சொல்லவேண்டும் என்று பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

Latest News