Cinema Rewind: இந்திய திரையுலகில் மலையாள சினிமாதான் பெஸ்ட்… ஆண்ட்ரியா சொன்ன விஷயம்!

தமிழ் சினிமாவிற்குள் காலடி வைத்த சிறிது காலத்திலேயே கமல், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை தொடர்ந்து பெற்றார் நடிகை ஆண்ட்ரியா. இந்த நிலையில் இவர் மலையாள சினிமா குறித்து முன்னதாக பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 

Cinema Rewind: இந்திய திரையுலகில் மலையாள சினிமாதான் பெஸ்ட்... ஆண்ட்ரியா சொன்ன விஷயம்!

ஆண்ட்ரியா

Published: 

22 Oct 2024 17:53 PM

இந்திய திரையுலகில் மலையாள சினிமாதான் பெஸ்ட் என நடிகை ஆண்ரியா முன்னதாக பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் பன்முக கலைஞர்கள் பலர் உள்ளனர். அந்த வரிசையில் நடிகை, பின்னணி பாடகி, டப்பிங் ஆர்டிஸ்ட் என பல முகங்களை காட்டி அதில் வெற்றி நடையும் போட்டு வருபவர் தான் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா. இவர் கல்லூரியில் படிக்கும் போது, ​​பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். விக்ரமின் அந்நியன் படத்தில் ‘கண்ணும் கண்ணும் நோக்கியா’ பாடலை பாடியதன் மூலம் பாடகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆங்கிலோ-இந்தியன் ரோமன் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர் இவர். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படத் துறைகளில் தனது நடிப்பின் மூலம் அசத்தியுள்ளார் ஆண்ட்ரியா.

2005ம் ஆண்டு வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் தலைகாட்டிய ஆண்ட்ரியாவுக்கு ‘பச்சைகிளி முத்துச்சரம்’ திரைப்படம் மூலம் லீட் ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இசையால் அனைவரையும் கவர வேண்டும் என ஆசைப்பட்டவர் மெல்ல மெல்ல நடிகையாக பரிணாமம் எடுத்தார்.

கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு படத்தில் பாடிய பிறகே அவரின் அடுத்த படமான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிக்க  ஆண்ட்ரியாவுக்கு இயக்குநர் கௌதம் மேனன் வாய்ப்பு கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான படைப்புகளுக்காக  அறியப்படும் இயக்குநர்களான கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வெற்றிமாறன், ராம், செல்வராகவன் உள்ளிட்டோரின் தேர்வாக ஆண்ட்ரியா என்றுமே இருந்துள்ளார்.

Also read… மனிதர்கள் எப்போது பலமானவர்களாக மாறுகிறார்கள் தெரியுமா? – சமந்தா சொன்ன விஷயம்

தமிழ் சினிமாவிற்குள் காலடி வைத்த சிறிது காலத்திலேயே கமல், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை தொடர்ந்து பெற்றார் நடிகை ஆண்ட்ரியா. இந்த நிலையில் இவர் மலையாள சினிமா குறித்து முன்னதாக பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

2013-ஆம் ஆண்டு ராஜீவ் ரவி இயக்கத்தில் வெளியான ‘அன்னயும் ரசூலும்’ படம் ஃபஹத் ஃபாசிலின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது.  மலையாளத்தில் வெளியான ‘அன்னாயும் ரசூலும்’ படம் ஆண்ரியாவிற்கு நல்ல வரவேற்பை அளித்தது. அந்தப் படத்தில் ஆண்ட்ரியாவுடன் பகத் ஃபாசில் இணைந்து நடித்திருந்தார்.  மலையாள திரையுலகிலும் மிகவும் பிரபலமான ஒரு நடிகையான ஆண்ட்ரியா ஃபஹத் ஃபாசில் ஜோடியாக ‘அன்னையும் ரசூலும்’ படத்தில் நடித்தற்காக நல்ல வரவேற்பை பெற்றார்.

Also read… ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது ‘லப்பர் பந்து’ படக்குழு… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

இந்த படத்திற்கு பிறகு மலையாளத்தில் நடிக்காதது ஏன் என்பது குறித்தும் ஆண்ட்ரியா பேசியுள்ளார். அதில், மலையாளத்தில் நடிப்பதற்கு முதலில் அழைப்பு வந்ததும் இயக்குநர் ராஜிவ் ரவி படம் என்றதும் எதுவும் கேட்காமலே படத்தில் நடிக்க சம்மதித்தேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தப் படத்திற்கு பிறகு மலையாளத்தில் நிறைய கமர்ஷியல் படங்களுக்கான வாய்ப்புகள் அதிகம் வந்ததாகவும் ஆனால் அன்னாயும் ரசூலும் படம் போன்ற கதைகளுக்காக தான் காத்திருப்பதாகவும் ஆண்ட்ரியா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அந்த மாதிரி கதைகள் வந்தால் மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்க தயாராக உள்ளதாகவும் ஆண்ட்ரியா தெரிவித்திருந்தார். மேலும் இந்திய சினிமாவில் மலையாள திரையுலம சிறந்தது என்றும் அந்த திரையுலகில் வேலை செய்வது என்பது தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் நடிகை ஆண்ட்ரியா முன்னதாக பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குளிர் காலத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது எப்படி?
குளிர்காலத்தில் நன்மை அளிக்கும் நெல்லிக்காய்..!
ஸ்மார்ட்போன் கேமராவை பாதுகாக்க செய்ய கூடாத தவறுகள்!
ஊறவைத்த முந்திரி சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா..?