Cinema Rewind: ’முதலில் நோ சொல்லிட்டேன்’.. நடிகையர் திலகம் படம் குறித்து பேசிய கீர்த்தி சுரேஷ்!
Actress Keerthy Suresh : தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் 2000ல் வெளியான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது சினிமா பயணத்தைத் தொடங்கினார். தற்போது பிரபல நடிகைகளில் ஒருவராக முன்னிலை வகிக்கிறார்.
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தற்போது பாண் இந்திய கதாநாயகியாக இருந்துவருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். 2000ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரமாக நடித்து தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த இவர் 2013ம் ஆண்டு இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான “கீதாஞ்சலி” என்ற மலையாள திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரமாக நடித்து திரைப்படங்களில் அறிமுகமாகினார். இந்த திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான இவருக்கு மலையாள ரசிகர்கள் அதிகம் உள்ளனர். இப்படத்தினை தொடர்ந்து தமிழ் 2015 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியான “இது என்ன மாயம்” என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இந்த திரைப்படங்களைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவருக்கு வரவேற்புகள் இருந்த நிலையில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.
தற்போது தமிழ், தெலுங்கு , மலையாளம் மற்றும் இந்தி என பல திரைப்படங்களில் முன்னணி நடிகையாகக் கலக்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் 2018 மகாநதி திரைப்படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் முன்னதாக பேசிய வீடியோ ஒன்றில் “மகாநதி படத்தில் நடிக்க நோ சொன்னதாகவும்”, அதன் பின் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கான காரணத்தையும் அந்த காணொளியில் கூறியிருப்பார்.
மகாநதி திரைப்படம் குறித்து பேசிய கீர்த்தி சுரேஷ்
முதலில் மகாநதி படத்திற்காக படத்தின் தயாரிப்பாளர் பிரியங்கா தத் கேட்டபோது நடிப்பதற்கு நோ சொன்னேன், ஏனென்றால் படத்தில் நடிப்பதற்கு பயம் என்பதில்லை ஆனால் ஒரு பிரபல நடிகை சாவித்ரியின் கதாபாத்திரத்தில் நடிக்கும் போகிறோமா என்ற பயம்தான் எனக்குள் இருந்தது. நடிகை சாவித்ரி சிறந்த நடிகை அவரின் கதாபத்திரத்தில் நான் ஒழுங்காக நடிப்பேனா என்று எனக்குள்ளே பல கேள்விகள் இருந்தது. பின் படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது இயக்குனர் நாக் அஸ்வினிடம் கேட்டேன் என் என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தீர்கள் என்று அதற்கு அவர் கூறினார். நடிகர் தனுஷும் நானும் இணைந்து நடித்த தொடரி திரைப்படத்தில் இரயில் மீது ஒரு பாடல் வரும் அதில் என் கண்களின் அசைவு நன்றாக இருந்ததால் நீங்க இந்த கதாபாத்திரத்திற்கு சரியான நடிகையாக இருப்பீர்கள் என்று தேர்ந்தெடுத்தோம் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க:சில்க் ஸ்மிதா கிட்டக்கூட நெருங்க முடியாது.. ராதிகா பகிர்ந்த ஆச்சர்ய தகவல்!
நடிகை சாவித்திரியின் திரைப்பட ஆரம்ப வாழ்க்கை…!
தமிழ் சினிமாவில் பழமையான நடிகைகளின் ஒருவர் தான் நடிகை சாவித்திரி. இவர் 1936 இல் ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூரில் பிறந்தார் இவர். பின் சினிமா மீதுள்ள ஆர்வத்தினால் 1952ல் “கல்யாணம் பண்ணிப்பார்” என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர் இந்த திரைப்படத்தின் மூலம் நடிகை சாவித்திரிக்கு சினிமா மீதுள்ளன காதலைத் தூண்டியது.
இதையும் படிங்க:கிளைமேக்ஸ் காட்சி.. சுப்பிரமணியபுரம் ஷூட்டிங்கில் நடந்த சண்டை!
இதன் தொடர்ச்சியாகச் சாவித்திரிக்கு “தேவதாஸ்” , “வஞ்சம்” , “மனம்போல் மாங்கல்யம்”,”சுகம் எங்கே” போன்ற திரைப்படங்கள் தொடர் வெற்றி திரைப்படங்களாக அமைந்தது. இதன் மூலமாக தமிழ்த் திரையுலகில் மக்களிடையே மிகவும் பிரபலமானார் நடிகை சாவித்திரி. இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் சுமார் 320க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனால் இவருக்கு நடிகையர் திலகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியின் காதல்..
தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடி என்றாலே முதல் வரிசையில் இருப்பது ஜெமினி-சாவித்திரி தான். இருந்தாலும் சாவித்திரி வாழ்க்கையில் சில கட்டத்தில் தோல்வி அடைந்ததற்கு அவர் காதலும் காரணமாக இருந்தார். தனது 32 வயதில் ஜெமினி உடன் பழக்கம் ஏற்பட்டு பின் இருவரும் திருமணம் செய்து கொண்டார்.இது சில காலம் கழித்து நடிகர் ஜெமினியை விட்டு சாவித்திரி பிரிந்தார்.
இதையும் படிங்க:பிதாமகன் படத்தில் நடிக்க இதுதான் காரணம்.. மனம் திறந்த நடிகை சங்கீதா!
சாவித்திரியின் கடைசிக்காலம்
ஜெமினியுடன் 17 ஆண்டுகளாக வாழ்ந்த சாவித்திரி பின் பிரிந்த இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். இதன் மூலமாகத் தனது அழகையும், பட வாய்ப்புகளையும் இழந்தார்.பிறகுத் தனது வீடு வாசல் அனைத்தையும் இழந்து சாவித்திரி வறுமையின் பிடியில் தவித்து பின் வறுமையின் பிடியில் சிக்கினார். இதன் காரணமாகச் சாவித்திரி மலையாள மொழி படத்தில் கவர்ச்சியாக, சாவித்திரி நடித்திருந்தது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தார். பின் தனது புகழுக்குத் தீங்கு எனத் தெரிந்தும் சில கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.
பின் சாவித்திரி உடல்நிலை மோசமாக மாறி 19 மாதங்கள் கோமா நிலையிலிருந்தார். பின் 1981 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி சென்னையில் உள்ள வெலிங்டன் மருத்துவமனையில் உயிரிழந்தார். சாவித்திரியின் இறப்பு தமிழ் சினிமாவில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:NGK படத்தில் நடிக்கவே முடியல’ நடிகை சாய் பல்லவி சொன்ன விஷயம்..!